என் மலர்
கணினி
- சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் மாடல்கள் பெரிய பேட்டரி கொண்டுள்ளன.
- புதிய கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் அதிக உறுதியான டைட்டானியம் கேசிங் கொண்டுள்ளன.
கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி வாட்ச் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ என இரு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் சபையர் க்ரிஸ்டல் டிஸ்ப்ளே, பயோ ஆக்டிவ் சென்சார், எக்சைனோஸ் W920 டூயல் கோர் பிராசஸர், ஒன் யுஐ வாட்ச் 4.5 மற்றும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
கேலக்ஸி வாட்ச் 5 சீரிசில் 1.2 இன்ச் மற்றும் 1.4 இன்ச் சூப்பர் AMOLED சபையர் க்ரிஸ்டல் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள சபையர் க்ரிஸ்டல் அதிக உறுதியானது ஆகும். இத்துடன் டைட்டானியம் கேசிங் மூலம் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பெசல் டிசைன் கொண்டுள்ளது. இரு வாட்ச் மாடல்களிலும் டூயல் கோர் எக்சைனோஸ் W920 பிராசஸர், 1.5 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளன.

இதில் வழங்கப்பட்டு இருக்கும் பயோ ஆக்டிவ் சென்சார் - ஆப்டிக்கல் ஹார்ட் ரேட், எலெக்ட்ரிக்கல் ஹார்ட் சிக்னல், ஹார்ட் ரேட், இரத்தத்தில் உள்ள காற்றின் அளவு, ஸ்டிரெஸ் உள்ளிட்டவைகளை கண்டறிய பயோ-எலெக்ட்ரிக்கல் இம்பெண்டன்ஸ் அனலசிஸ் போன்ற வசதிகளை வழங்கும் ஒற்றை சிப் ஆகும். மேலும் பயனர்கள் இரத்த அழுத்தம் மற்றும் இசிஜி உள்ளிட்டவைகளை மணிக்கட்டில் இருந்த படி அறிந்து கொள்ளலாம்.
விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 மாடலின் 40 மில்லிமீட்டர் ப்ளூடூத் வெர்ஷன் விலை 279.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 22 ஆயிரத்து 135 என்றும், எல்டிஇ வெர்ஷன் விலை 329.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 26 ஆயிரத்து 090 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 44 மில்லிமீட்டர் ப்ளூடூத் வெர்ஷன் விலை 309.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 24 ஆயிரத்து 505 என்றும் எல்டிஇ வெர்ஷன் விலை 359.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 28 ஆயிரத்து 460 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- போல்ட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
- இந்த இயர்போன் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
போல்ட் ஆடியோ FXசார்ஜ் நெக்பேண்ட் இயர்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இயர்போன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. இது அழைப்புகளின் போது சுற்றத்தில் ஏற்படும் சத்தம், இரைச்சல்களை கேட்காமல் செய்யும்.
புதிய போல்ட் ஆடியோ FXசார்ஜ் மாடல் 14.2 மில்லிமீட்டர் டிரைவர்களை கொண்டுள்ளது. இத்துடன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 32 மணி நேர பிளேபேக் வழங்கும்.

இந்த இயர்போன் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், மேக் ஓஎஸ் மற்றும் விண்டோஸ் சாதனங்களுடன் இணைந்து இயங்கும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள இன்லைன் கண்ட்ரோல்கள் மூலம் வால்யூம், மியூசிக் அட்ஜஸ்ட், அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது போன்றவற்றை செய்ய முடியும். இதில் உள்ள பாஸ்ட் சார்ஜிங் அம்சம் ஐந்து நிமிட சார்ஜிங்கில் ஏழு மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.
விலை விவரங்கள்:
போல்ட் ஆடியோ FXசார்ஜ் நெக்பேண்ட் இயர்போன் அமேசான் தளத்தில் ரூ. 899 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகை எவ்வளவு காலத்திற்கு வழங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த இயர்பட்ஸ் பிளாக் மற்றும் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது.
ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து வாட்ச் 3 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்வதாக ரியல்மி அறிவித்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி வாட்ச் 2 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய ரியல்மி வாட்ச் 3 ப்ரோ வெளியீட்டை உணர்த்தும் டீசர்களின் படி, இந்த மாடல் மெட்டல் பாடி வலது புறத்தில் ஒற்றை பட்டன் கொண்டு இருக்கும் என தெரியவந்துள்ளது.
பிளாக்ஷிப் ஸ்மார்ட்வாட்ச் மாடல் என்ற வகையில், இதில் பெரிய AMOLED டிஸ்ப்ளே, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் மூலம் வாய்ஸ் காலிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம். முந்தைய வாட்ச் 2 ப்ரோ மாடலில் எல்சிடி ஸ்கிரீன் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ரியல்மி வாட்ச் 2 ப்ரோ விலை ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடலின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இதன் விற்பனை ரியல்மி மட்டுமின்றி ப்ளிப்கார்ட் வலைதளத்திலும் நடைபெற இருக்கிறது.
வாட்ச் 3 ப்ரோ வெளியீட்டு தேதியை ரியல்மி இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 9i 5ஜி வெளியாகும் ஆகஸ்ட் 18 ஆம் தேதியே ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யப்படலாம்.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக கேமிங் பிளாட்பார்ம் ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த தளம் கேமிங் ப்ரியர்களுக்காக உருவாக்கப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோகேம்ஸ் சார்பில் ஜியோகேம்ஸ்வாட்ச் ஸ்டிரீமிங் பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்டிரீமிங் வலைதளம் கேமிங் சார்ந்த அனைத்து தளங்களையும் பார்க்க வழி செய்கிறது. இதில் கேம்பிளே, வீடியோ ஆன் டிமாண்ட் உள்ளிட்டவைகளை நேரலையில் பார்க்க முடியும்.

2019 வாக்கில் துவங்கப்பட்ட ஜியோகேம்ஸ் தளம் கேம் வெளியிடுவோர், ஆன்லைன் கேம் டெவலப்பர்கள், போட்டிகள் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் சேவை வழங்கும் ஒற்றை மென்பொருள் சேவை ஆகும். ஜியோகேம்ஸ் வாடிக்கையாளர்கள் தற்போது கேம்களை நேரலை செய்வதற்காகவே ஜியோகேம்ஸ்வாட்ச் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தளம் கொண்டு கேமர்கள் அவரவர் பயன்படுத்தும் எந்த விதமான சாதனத்தை கொண்டும் மிக குறைந்த லேடன்சியில் அதிக தரமுள்ள தரவுகளை பல லட்சம் பேருக்கு கொண்டு சேர்க்க முடியும். இதோடு மட்டுமின்றி வீடியோ பார்ப்பவர்களை தொடர்பில் இருக்க செய்ய கருத்து கணிப்பு மற்றும் எமோட்ஸ் என பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது
- கிஸ்மோர் நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் கொண்டிருக்கிறது.
- அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கிஸ்மோர் நிறுவனம் இந்திய சந்தையில் கிஸ்பிட் அல்ட்ரா பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. சதுரங்க வடிவிலான டையல் கொண்டு இருக்கும் கிஸ்பிட் அல்ட்ரா தோற்றத்தில் கிட்டத்தட்ட ஆப்பிள் வாட்ச் போன்றே காட்சியளிக்கிறது.
எனினும், இதன் விலை பெருமளவு குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. கிஸ்பிட் அல்ட்ரா IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, அலெக்சா மற்றும் சிரி போன்ற வாய்ஸ் கமாண்ட்கள், ப்ளூடூத் காலிங் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதுதவிர நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

கிஸ்பிட் அல்ட்ரா சிறப்பம்சங்கள்:
- 1.69 இன்ச் HD வளைந்த டச் ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே
- IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி
- 60 வித்தியாசமான ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்கள்
-- பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றம் மைக்ரோபோன்
- ப்ளூடூத் காலிங்
- SpO2, ஹார்ட் ரேட், ஸ்லீப் சென்சார்கள்
- அலெக்சா மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
- 15 நாட்கள் பேட்டரி பேக்கப்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
கிஸ்பிட் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 5 ஆயிரத்து 999 ஆகும். ஆனால் இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 699 தான். மேலும் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ ரூ. 1,799 விலையில் வாங்கிட முடியும். இது அறிமுக சலுகையாக குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போதநு 5 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. விற்பனை ஆகஸ்ட் 07 ஆம் தேதி தொடங்குகிறது. கிஸ்பிட் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பர்கண்டி மற்றும் வைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
- நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய X பிட் 2 ஸ்மார்ட்வாட்ச் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் வெர்ஷன் 5 கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.
நாய்ஸ் X பிட் 2 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் HRX உடனான கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய நாய்ஸ் X பிட் 2 மாடலில் 1.69 இன்ச் TFT டிஸ்ப்ளே, ஏராளமான ஆரோக்கியம் மற்றும் பிட்னஸ் டிராக்கர்கள் உள்ளன.
இத்துடன் புதிய X பிட் 2 மாடலில் 150-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், அலாரம், பைண்ட் மை போன், வானிலை விவரங்கள் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப் வழங்குகிறது. இத்துடன் 30 நாட்களுக்கு ஸ்டாண்ட்பை வழங்குகிறது. இதில் 260 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்கள் ஆகும்.

இதில் அக்செல்லோமீட்டர், ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார் மற்றும் SpO2 டிராக்கர் உள்ளது. இத்துடன் உடலில் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்பட்டன என்ற விவரங்களை வழங்குவதோடு, ஸ்லீப் மாணிட்டர், ஸ்டெப் டிராக்கர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஐஓஎஸ் 10 மற்றும் அதன் பின் வெளியான ஓ.எஸ். மற்றும் ஆணட்ராய்டு 4.4 மற்றும் அதன் பின் வெளியான ஓ.எஸ். கொண்ட சாதனங்களுடன இணைந்து இயங்கும்.
புதிய நாய்ஸ் X பிட் 2 ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், சில்வர் கிரே மற்றும் ஸ்பேஸ் புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் X பிட் 2 ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 1,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
- பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவை வெளியிடுவது பற்றி முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது.
- 5ஜி வெளியீட்டுக்காக ஏர்டெல் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.
5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் சேவையை வழங்குவதற்காக பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் நோக்கியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சமீபத்தில் தான் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் நடந்து முடிந்த நிலையில், பல ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 43 ஆயிரத்து 084 கோடி மதிப்பிலான 5ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது.
இது மட்டுமின்றி 5ஜி நெட்வொர்க் தொடர்பாக எரிக்சன் மற்றும் சாம்சங் நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே 5ஜி சேவையை வெளியிட ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இந்த ஆண்டு சாம்சங் நிறுவனத்துடனான ஒப்பந்தம் துவங்க இருக்கும் நிலையில், எரிக்சன் நிறுவனத்துடன் சேர்ந்து நாடு முழுக்க கனெக்டிவிட்டி சார்ந்த சேவைகளை ஏர்டெல் நீண்ட காலமாக வழங்கி வருகிறது.
மத்திய டெலிகாம் துறை சார்பில் 5ஜி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்தற்கான ஏலம் நடத்தப்பட்டது. இதில் ஏர்டெல் நிறுவனம் 19 ஆயிரத்து 867.8 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை 900 மெகாஹெர்ட்ஸ், 1800 மெகாஹெர்ட்ஸ், 2100 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட்களில் வாங்கி இருக்கிறது.

ஏர்டெல் மற்றும் எரிக்சன் நிறுவனங்கள் இடையே 25 ஆண்டு கால தொடர்பு இருக்கிறது. எரிக்சன் சார்பில் நாடு முழுக்க பல தலைமுறை மொபைல் தகவல் பரிமாற்றத்தை செயல்படுத்த வைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. சமீபத்திய 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் நிறைவு பெற்றதை அடுத்து இரு நிறுவனங்கள் இடையே புது ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனம் எரிக்சன் ரேடியோ சிஸ்டம், எரிக்சன் மைக்ரோவேவ் மொபைல் டிரான்ஸ்போர்ட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீரான 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் சார்ந்த சேவைகளை வழங்க இருக்கிறது. எரிக்சன் சார்பில் நாட்டின் 12 வட்டாரங்களில் ஏர்டெல் நிறுவனத்திற்கு 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட உள்ளது.
- சியோமி நிறுவனம் புதிதாக டேப்லெட் மாடலை உருவாக்கி வருவது அம்பலமாகி இருக்கிறது.
- இந்த மாடல் குறைந்த விலை டேப்லெட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய சந்தையில் ஒப்போ மற்றும் ரியல்மி போன்ற நிறுவனங்கள் பட்ஜெட் பிரிவில் புது டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வரிசையில், தற்போது சியோமி நிறுவனமும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சியோமி உருவாக்கி வரும் புது டேப்லெட் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என்றே தெரிகிறது.
புதிய சியோமி டேப்லெட் பெயர் விவரங்கள் ரகசியமாகவே உள்ளது. எனினும், இந்த மாடல் ரெட்மி பேட் 6 என்று அழைக்கப்படலாம். புது டேப்லெட் மாடல் விவரங்கள் FCC வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த டேப்லெட் 22081283G எனும் மாடல் நம்பர் கொண்டு இருக்கிறது. இது பற்றிய தகவல்களை டிப்ஸ்டரான சிம்ரன்பால் சிங் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதன்படி சியோமி டேப்லெட் மாடல் MIUI 13 கொண்டிருக்கும் என்றும் இதில் 7800 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ பேட் ஏர் மாடலில் 7100 எம்ஏஹெச் பேட்டரியே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக இந்த டேப்லெட் 5ஜி, வைபை போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
முன்னதாக இந்த டேப்லெட் விவரங்கள் CMIIT வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதில் இந்த டேப்லெட் வைபை 802.11ac வசதியும் 5ஜி ஸ்பெக்ட்ரம் கனெக்டிவிட்டியும் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இவை தவிர ரெட்மி பேட் அம்சங்கள் மர்மமாகவே னஉள்ளது. 22081281AC எனும் மாடல் நம்பர் கொண்ட மற்றொரு ரெட்மி டேப்லெட் விவரங்கள் CMIIT வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது.
- சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்மார்ட் கிளாஸ் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்து இருந்தது.
- தற்போது கேமரா, டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட் கிளாஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் மிஜியா ஸ்மார்ட் கண்ணாடி மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் கண்ணாடி இண்டெலிஜண்ட் இமேஜ் மற்றும் ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பயனர்களுக்கு கற்பனை திறனை வெளிப்படுத்த செய்கிறது. இது ஆக்மெண்டெட் ரியாலிட்டி கிளாஸ் மற்றும் வழக்கமான கண்ணாடி கலந்த ஒற்றை சாதனம் ஆகும். இதில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது.
தோற்றத்தின் படி இந்த ஸ்மார்ட் கிளாஸ் அன்றாட பயன்பாடுக்கு ஏற்றதாக காட்சியளிக்கவில்லை. கண்ணாடியின் இரண்டு புறங்களிலும் ஏ.ஆர். ஆப்டிக்கல் டிஸ்ப்ளே மற்றும் கேமரா மாட்யுல் ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளன. லென்ஸ் மற்றும் ஃபிரேம்கள் இந்த கண்ணாடியின் முழு பயன்பாடுகளை அனுபவிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட் கிளாஸ் மொத்த எடை 100 கிராம் ஆகும்.

சியோமி மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் அம்சங்கள்:
- சோனி மைக்ரோ OLED சிலிகான் சார்ந்த டிஸ்ப்ளே
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- ஆண்டி-புளூ லைட் சான்று
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
- 3ஜிபி ரேம்
- 32ஜிபி மெமரி
- 50MP பிரைமரி கேமரா
- 8MP டெலிபோட்டோ கேமரா
- ஏ.ஆர். மூலம் ரியல்-டைம் மொழி பெயர்ப்பு வசதி
- ப்ளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைபை, இண்டிபென்டெண்ட் ஐஎஸ்பி
- 1020 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
- 30 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ்
- 10 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக பதிவு செய்யும் வசதி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய சியோமி மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் விலை CNY 2499 இந்திய மதிப்பில் ரூ. 29 ஆயிரத்து 275 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் கிரவுட்-ஃபண்டிங் விற்பனை நாளை (ஆகஸ்ட் 03) துவங்குகிறது. அதன் பின்னர் இந்த ஸ்மார்ட் கிளாஸ் CNY 2699 இந்திய மதிப்பில் ரூ. 31 ஆயிரத்து 615 விலையில் விற்பனை செய்யப்படும். இதன் சர்வதேச வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- ட்ரூக் நிறுவனத்தின் புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- அறிமுக சலுகையாக மிக குறைந்த விலையில் புது கேமிங் இயர்பட்ஸ் மாடல் வெளியாகி இருக்கிறது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த ட்ரூக் நிறுவனம் இந்திய சந்தையில் புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. குறைந்த விலையில் விற்பனைக்கு வந்து இருக்கும் புது இயர்பட்ஸ் மாடல் இந்த பிரிவில் மிகவும் வித்தியாசமான மாடலாக உள்ளது. புது இயர்பட்ஸ் ட்ரூக் BTG ஆல்பா என அழைக்கப்படுகிறது. இது ட்ரூ வயர்லெஸ் கேமிங் இயர்பட்ஸ் ஆகும்.
சமீபத்தில் தான் ட்ரூக் பட்ஸ் F1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது ட்ரூக் BTG ஆல்பா எனும் பெயரில் புதிதாக ட்ரூ வயர்லெஸ் கேமிங் இயர்பட்ஸ் அறிமுகமாகி இருக்கிறது. புது இயர்பட்ஸ் அறிமுக சலுகையாக ரூ. 899 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ட்ரூக் BTG ஆல்பா அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ட்ரூக் BTG ஆல்பா மாடலில் அல்ட்ரா லோ லேடன்சி வசதி உள்ளது. இத்துடன் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி மற்றும் 40ms ரெஸ்பான்ஸ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் நீண்ட நேர பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இதில் உள்ள இன்ஸடண்ட் பேரிங் அம்சம் கொண்டு அதிவேகமாக இணைப்புகளை சாத்தியப்படுத்த முடியும்.
இத்துடன் டூயல் மைக்ரோபோன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி உள்ளது. இது மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும். பேட்டரி பேக்கப்-ஐ பொருத்த வரை ட்ரூக் BTG ஆல்பா கேமிங் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் 300 எம்ஏஹெச் பேட்டரி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 48 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. மேலும் இந்த இயர்பட்ஸ்-ஐ 1.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும்.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ட்ரூக் BTG ஆல்பா ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் பிளாக் மற்றும் வைட் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 1,299 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது.
- ரெட்மி பட்ஸ் 3 லைட் இயர்பட்ஸில் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
- கருப்பு நிறத்தில் மட்டும் இந்த இயர்பட்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சியோமி, அதன் புதிய சாதனமான ரெட்மி பட்ஸ் 3 லைட் எனும் இயர்பட்ஸை இந்தியாவில் கடந்த ஜூலை 20-ந் தேதி அறிமுகம் செய்து இருந்தது. இந்த இயர்பட்ஸ் கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி பட்ஸ் 3 யூத் மாடலின் ரீ-பிராண்டட் வெர்ஷன் ஆகும்.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ளஸ்ஸில் இடம்பெற்றிருப்பது போல இதுவும் இன்-இயர் டிசைனை கொண்டுள்ளது. அதேபோல் ஆப்பிளின் ஏர்பட்ஸ் ப்ரோவை போன்ற தோற்றமுடைய சார்ஜிங் கேஸும் இதனுடன் வருகிறது. மேலும் இதில் துள்ளியமான ஆடியோவை கேட்கும் வண்ணம் 6எம்.எம் டிரைவர்கள் இடம்பெற்று உள்ளன.

ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் இதில் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர நாய்ஸ் கேன்சலேசன், டச் கண்ட்ரோல், டஸ்ட் ரெசிஸ்டன்ஸ், 18 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் என எண்ணற்ற அம்சங்கள் இதில் இடம்பெற்று உள்ளன. பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. ரெட்மி பட்ஸ் 3 லைட் இயர்பட்ஸின் விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இன்று முதல் இந்த இயர்பட்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான் மற்றும் Mi ஆன்லைன் ஸ்டோரில் இன்றிலிருந்து 48 மணிநேரத்திற்குள் வாங்குபவர்களுக்கு ரூ. 500 சிறப்பு சலுகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கருப்பு நிறத்தில் மட்டும் இந்த இயர்பட்ஸ் விற்கப்படுகிறது.
- இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் கேமின் புது வடிவமாக இந்த கேம் உருவாக்கப்பட்டு இருந்தது.
- மத்திய அரசின் உத்தரவின்பேரில் இந்த கேமை நீக்கியதாக கூகுள் ப்ளே ஸ்டோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிராப்டான் நிறுவனம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமினை ஆண்ட்ராய்டு தளங்களுக்கென கூகுள் பிளே ஸ்டோரில் கடந்தாண்டு வெளியிட்டது. முன்னதாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் கேமின் புது வடிவமாக இந்த கேம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த கேமுக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்தது.
பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமினை கூகுள் பிளே ஸ்டோரில் 10 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், பேட்டில்கிரவுண்ட்ஸ் கேமுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக இந்த கேமினை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் உத்தரவின்பேரில் இந்த கேமை நீக்கியதாக கூகுள் ப்ளே ஸ்டோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த கேமை ஏற்கனவே டவுண்லோடு செய்தவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது. பப்ஜி போன்றே இதுவும் உள்ளதால் இதற்கும் தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.






