search icon
என் மலர்tooltip icon

    கணினி

    இணையத்தில் லீக் ஆன சியோமி டேப்லெட் விவரங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன சியோமி டேப்லெட் விவரங்கள்

    • சியோமி நிறுவனம் புதிதாக டேப்லெட் மாடலை உருவாக்கி வருவது அம்பலமாகி இருக்கிறது.
    • இந்த மாடல் குறைந்த விலை டேப்லெட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    இந்திய சந்தையில் ஒப்போ மற்றும் ரியல்மி போன்ற நிறுவனங்கள் பட்ஜெட் பிரிவில் புது டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வரிசையில், தற்போது சியோமி நிறுவனமும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சியோமி உருவாக்கி வரும் புது டேப்லெட் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என்றே தெரிகிறது.

    புதிய சியோமி டேப்லெட் பெயர் விவரங்கள் ரகசியமாகவே உள்ளது. எனினும், இந்த மாடல் ரெட்மி பேட் 6 என்று அழைக்கப்படலாம். புது டேப்லெட் மாடல் விவரங்கள் FCC வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த டேப்லெட் 22081283G எனும் மாடல் நம்பர் கொண்டு இருக்கிறது. இது பற்றிய தகவல்களை டிப்ஸ்டரான சிம்ரன்பால் சிங் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.


    அதன்படி சியோமி டேப்லெட் மாடல் MIUI 13 கொண்டிருக்கும் என்றும் இதில் 7800 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ பேட் ஏர் மாடலில் 7100 எம்ஏஹெச் பேட்டரியே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக இந்த டேப்லெட் 5ஜி, வைபை போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    முன்னதாக இந்த டேப்லெட் விவரங்கள் CMIIT வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதில் இந்த டேப்லெட் வைபை 802.11ac வசதியும் 5ஜி ஸ்பெக்ட்ரம் கனெக்டிவிட்டியும் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இவை தவிர ரெட்மி பேட் அம்சங்கள் மர்மமாகவே னஉள்ளது. 22081281AC எனும் மாடல் நம்பர் கொண்ட மற்றொரு ரெட்மி டேப்லெட் விவரங்கள் CMIIT வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது.

    Next Story
    ×