என் மலர்
கணினி
- கூகுள் ஸ்டிரீட் வியூ அம்சம் தற்போது முதற்கட்டமாக 10 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
- இரு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம்.
கூகுள் மேப் செயலியில் உள்ள ஸ்டிரீட் வியூ அம்சம் தற்போது இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பாதுகாப்பு காரணமாக நீண்ட நாட்களாக செயல்படுத்தப்படாமல் இருந்த இந்த அம்சம் தற்போது முதற்கட்டமாக 10 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கூகுள் மேப் செயலியை வைத்து இருபிடத்தின் புகைப்படங்களை 360 டிகிரியில் தெளிவாக காண முடியும்.

வெளிநாடுகளில் இந்த அம்சம் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் ஆகிவிட்ட போதும் இந்தியாவில் தற்போது தான் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இரு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். இந்த அம்சம் மூலம் உள்ளூர் சாலை அமைப்புகள் மற்றும் போக்குவரத்து தடங்கள் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள முடியும்.
முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், புனே, நாசிக், அமிர்தசரஸ், வதோதரா, அகமத்நகர் ஆகிய 10 நகரங்களில் இந்த ஸ்டிரீட் வியூ அம்சம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேற்கண்ட நகரங்களில் உள்ள சுமார் 1.5 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை இந்த ஸ்டிரீட் வியூ அம்சம் மூலம் புகைப்படங்களாக பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ பிளாக், கிரே மற்றும் டைட்டானியம் ஆகிய நிறங்களில் வர உள்ளதாம்.
- சாம்சங்கின் இந்த வாட்ச் 5 சீரிஸில் கூகுளில் பிரத்யேக இயங்குதளமான Wear OS 3.5 இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனம் அதன் வாட்ச் 5 சீரிஸை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 2 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ ஆகிய இரு மாடல்களில் அறிமுகமாக உள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், இதன் விலை விவரங்கள் லீக் ஆகி உள்ளன.
இதன் அடிப்படை மாடல் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உடன் வரும் என்றும் அதன் விலை இந்திய மதிப்பில் ரூ.21 ஆயிரத்து 176 ஆக நிர்ணயம செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இதன் 44 எம்.எம் மாடலின் விலை ரூ.23 ஆயிரத்து 500 ஆகவும், இதன் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடலின் விலை ரூ.35 ஆயிரமாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ பிளாக், கிரே மற்றும் டைட்டானியம் ஆகிய நிறங்களில் கிடைக்கும் என்றும், இதன் கேலக்ஸி வாட்ச் 5 மாடல் வெள்ளை, நீலம், கருப்பு என பல வண்ண நிறங்களில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சாம்சங்கின் இந்த வாட்ச் 5 சீரிஸில் கூகுளில் பிரத்யேக இயங்குதளமான Wear OS 3.5 இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது.
- ஆப்பிள் நிறுவனம் அதன் வாட்ச் 8 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்களை வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
- அந்த ஸ்மார்ட்வாட்ச் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஆப்பிள் நிறுவனம் அதன் வாட்ச் 8 சீரிஸ் ஸ்மார்ட்வாட்சை அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச், 3 விதமான வேரியண்ட்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாக இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அண்மையில் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்காணிக்கும் டெம்பரேச்சர் சென்சாரும் இடம்பெற்று இருக்கும் என கூறப்பட்டது. இந்த அம்சம் மூலம் உடல் வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி ஒருவேளை பயனர்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருந்து அவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மருத்துவரை அணுகச் சொல்லி அலர்ட் செய்யும் அம்சமும் இந்த ஸ்மார்ட்வாட்சில் இடம்பெற்று உள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது இதன் டிஸ்ப்ளே பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்ட ஸ்மார்ட்வாட்ச்களை விட இந்த ஸ்மார்வாட்சில் தான் பெரிய அளவு டிஸ்ப்ளே இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாட்ச் 7 சீரிஸை விட வாட்ச் 8 சீரிஸில் உள்ள டிஸ்ப்ளே 7 சதவீதம் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
- ஒப்போ என்கோ எக்ஸ் 2 இயர்பட்ஸ் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- 40 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் உடன் இந்த இயர்பட்ஸ் வருகிறது.
ஒப்போ நிறுவனம் கடந்த வாரம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அத்துடன் அந்நிறுவனம் அதன் ப்ரீமியம் இயர்பட்ஸையும் லான்ச் செய்திருந்தது. ஒப்போ என்கோ எக்ஸ் 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ், ஆப்பிள் ஏர்பாட்ஸை போன்ற டிசனை கொண்டுள்ளது.
11 எம்.எம் டைனமிக் டிரைவர் மற்றும் 6 எம்.எம் பிளானர் டயபிராம் டிரைவர் ஆகிய டிரைவர்களை கொண்டுள்ளது. மேலும் ப்ளூடூத் 5.2, மல்டிபிள் நாய்ஸ் கேன்சலேசன் லெவல், 3 மைக்ரோபோன்கள், டைப் சி யு.எஸ்.பி போர்ட், வயர்லெஸ் சார்ஜிங், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் என எண்ணற்ற அம்சங்களை கொண்டுள்ளது. 40 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் உடன் இந்த இயர்பட்ஸ் வருகிறது.

ஒப்போ என்கோ எக்ஸ் 2 இயர்பட்ஸின் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இன்று முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த இயர்பட்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது.
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மெமரியையும் கொண்டுள்ள இந்த லேப்டாப்பில் டிடிஎஸ் ஆடியோ புராசஸிங் வசதியும் உள்ளது.
- இரண்டு மைக்ரோ போன்களையும் இது கொண்டுள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த மாதம் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 1 ஸ்லிம் என்கிற லேப்டாப்பை அறிமுகப்படுத்திய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இன்புக் எக்ஸ் 1 நியோ என்கிற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த லேப்டாப் தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
இது விண்டோஸ் 11 இயங்குதளத்துடன் வருகிறது. அலுமினியம் அலாய் மெட்டல் பாடியை கொண்டுள்ள இந்த லேப்டாப், 14 இன்ச் ஃபுல் ஹெச்.டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மெமரியையும் கொண்டுள்ள இந்த லேப்டாப்பில் டிடிஎஸ் ஆடியோ புராசஸிங் வசதியும் உள்ளது. இரண்டு மைக்ரோ போன்களையும் இது கொண்டுள்ளது.

இந்த லேப்டாப்பில் இண்டெல் அல்ட்ரா ஹெச்.டி கிராபிக்ஸ் கார்டும் இடம்பெற்று உள்ளது. 50 வாட் ஹவர் பேட்டரி உடன் வரும் இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 1 நியோ லேப்டாப்பில் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.24 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த லேப்டாப் தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- டெல் எக்ஸ்.பி.எஸ். 13 ப்ளஸ் 9320 லேப்டாப்பில் எக்ஸ்பிரஸ் சார்ஜ் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
- இதன்மூலம் இதில் உள்ள 55 வாட் ஹவர் பேட்டரியை 1 மணிநேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியுமாம்.
டெல் நிறுவனம் அதன் புது மாடல் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. டெல் எக்ஸ்.பி.எஸ். 13 ப்ளஸ் 9320 எனும் பெயர்கொண்ட இந்த லேப்டாப் நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த லேப்டாப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அதன்படி இதன் பாடி மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது. மிகவும் மெல்லிய தோற்றம் கொண்ட இந்த லேப்டாப் 1.24 கிலோ எடை கொண்டதாகும். 4K ரெசொல்யூசனுடன் கூடிய 13 இன்ச் டிஸ்ப்ளே இதில் இடம்பெற்று உள்ளது. 91.9 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோ கொண்ட இந்த லேப்டாப்பின் நான்கு பக்கங்களிலும் ஸ்லிம் பெசில்கள் உள்ளன.

இதில் இண்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் உடன் கூடிய இண்டெல் கோர் i7-1260P சிபியு இடம்பெற்றுள்ளது. 16 ஜிபி ரேமும் 1டிபி ஸ்டோரேஜும் இதில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் டூயல் சென்சார் உடன் கூடிய ஹெச்டி வெப் கேமரா, கைரேகை சென்சார் மற்றும் 4 ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இதில் எக்ஸ்பிரஸ் சார்ஜ் வசதியும் உள்ளது. அதன்மூலம் இதில் உள்ள 55 வாட் ஹவர் பேட்டரியை 1 மணிநேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியுமாம். இதன் கோர் i5-1260P, 16ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இதன் பவர்ஃபுல் வேரியண்டான கோர் i7-1260P, 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட வேரியண்ட் விலை ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் அமேசான் தளத்திலும், டெல் இந்தியா ஆன்லைன் ஸ்டோர்களிலும் இந்த லேப்டாப் விற்பனைக்கு வர உள்ளது.
- ஒப்போ ஸ்மார்ட்வாட்ச் பிளாக், சில்வர், டார்க் கிரே, மற்றும் லைட் கோல்டு ஆகிய நான்கு நிறங்களில் வர உள்ளது.
- இதில் 2 மாடல்களில் 42 mm டயலும், ஒரு மாடலில் மட்டும் 46 mm டயலுடம் இடம்பெற்றிருக்குமாம்.
ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ வாட்ச் 3 எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஒப்போ ஸ்மார்ட்வாட்ச் OWW211, OWW212 மற்றும் OWW213 என மூன்று வெவ்வேறு மாடல்களில் வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒப்போ வாட்ச் 3-ல் அதிகமான ஸ்கிரீன் டூ பாடி ரேசியோ இருக்கும் எனவும், மைக்ரோ கர்வுடு ஸ்கொயர் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் மிக மெல்லிய பெசில்களுடன் கூடிய செவ்வக வடிவிலான டிஸ்ப்ளே இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், சில்வர், டார்க் கிரே, மற்றும் லைட் கோல்டு ஆகிய நான்கு நிறங்களில் வர உள்ளது. இதில் 2 மாடல்களில் 42 mm டயலும், ஒரு மாடலில் மட்டும் 46 mm டயலுடம் இடம்பெற்றிருக்குமாம்.
சமீபத்திய தகவல்படி இந்த ஸ்மார்ட்வாட்சில் ஸ்நாப்டிராகன் W5 Gen 1 சிப் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சிப் உடன் வரும் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆக ஒப்போ வாட்ச் 3 இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிற ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ரெட்மி பட்ஸ் 3 லைட் இயர்பட்ஸில் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
- கருப்பு நிறத்தில் மட்டும் இந்த இயர்பட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சியோமி, அதன் புதிய சாதனமான ரெட்மி பட்ஸ் 3 லைட் எனும் இயர்பட்ஸை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்து உள்ளது. இந்த இயர்பட்ஸ் கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி பட்ஸ் 3 யூத் மாடலின் ரீ-பிராண்டட் வெர்ஷன் ஆகும்.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ளஸ்ஸில் இடம்பெற்றிருப்பது போல இதுவும் இன்-இயர் டிசைனை கொண்டுள்ளது. அதேபோல் ஆப்பிளின் ஏர்பட்ஸ் ப்ரோவை போன்ற தோற்றமுடைய சார்ஜிங் கேஸும் இதனுடன் வருகிறது. மேலும் இதில் துள்ளியமான ஆடியோவை கேட்கும் வண்ணம் 6எம்.எம் டிரைவர்கள் இடம்பெற்று உள்ளன.

ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் இதில் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர நாய்ஸ் கேன்சலேசன், டச் கண்ட்ரோல், டஸ்ட் ரெசிஸ்டன்ஸ், 18 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் என எண்ணற்ற அம்சங்கள் இதில் இடம்பெற்று உள்ளன. பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.
ரெட்மி பட்ஸ் 3 லைட் இயர்பட்ஸின் விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 31-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ள இந்த இயர்பட்ஸை அன்றிலிருந்து 48 மணிநேரத்திற்குள் வாங்குபவர்களுக்கு ரூ. 500 சிறப்பு சலுகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கருப்பு நிறத்தில் மட்டும் இந்த இயர்பட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
- முழுவதுமாக மெட்டல் பாடியால் ஆன இந்த லேப்டாப், 54 வாட் ஹவர் பேட்டரி திறன் கொண்டதாகும்.
- இந்த லேப்டாப் ஸ்கை கிரே மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது.
ரியல்மி நிறுவனம் அதன் புதிய லேப்டாப் ஒன்றை கடந்த வாரம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. ரியல்மி நோட்புக் ஏர் என பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பில் சிறப்பம்சமே அதன் டிசைன் மற்றும் எடை தான். இந்த புது லேப்டாப்பின் மொத்த எடை வெறும் 1.36 கிலோ தானாம். இதில் உள்ள மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் அது இதில் உள்ள மெல்லிய பெசில்கள் தான். இதன் அளவு 4.9 எம்.எம். ஆப்பிள் மேக்புக் ஏர் எம் 1 மாடலோடு ஒப்பிடுகையில் இது மிகவும் மெல்லிசானது.
ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப்பில் 11-வது ஜென் கோர் ஐ-3 புராசஸர் இடம்பெற்றுள்ளது. 8 ஜிபி ரேம் உடன் வரும் இந்த லேப்டாப்பில் 256ஜிபி மற்றும் 512ஜிபி என இரண்டு மெமரி வேரியண்ட்களில் வருகிறது. இதன் 16 : 10 டிஸ்ப்ளே பேனல் 1920 x 1200 ரெசலியூசனை ஆதரிக்கும் திறன் கொண்டதாகும். மேலும் இது 88 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவை கொண்டுள்ளது.

முழுவதுமாக மெட்டல் பாடியால் ஆன இந்த லேப்டாப், 54 வாட் ஹவர் பேட்டரி திறன் கொண்டதாகும். 65வாட் பாஸ்ட் சார்ஜிங்கையும் இது ஆதரிக்கிறது. இதன் 8ஜிபி + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.35 ஆயிரத்து 300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இதன் 8ஜிபி + 512ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.38 ஆயிரத்து 800 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்கை கிரே மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் வந்துள்ள இந்த லேப்டாப் இன்று முதல் சீன சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
- 50 வாட் ஹவர் பேட்டரி உடன் வரும் இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 1 நியோ லேப்டாப்பில் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
- வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் இந்த லேப்டாப் ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வர உள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த மாதம் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 1 ஸ்லிம் என்கிற லேப்டாப்பை கடந்த மாதம் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது இன்புக் எக்ஸ் 1 நியோ என்கிற புதிய மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது விண்டோஸ் 11 இயங்குதளத்துடன் வருகிறது.
அலுமினியம் அலாய் மெட்டல் பாடியை கொண்டுள்ள இந்த லேப்டாப், 14 இன்ச் ஃபுல் ஹெச்.டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மெமரியையும் கொண்டுள்ள இந்த லேப்டாப்பில் டிடிஎஸ் ஆடியோ புராசஸிங் வசதியும் உள்ளது. இரண்டு மைக்ரோ போன்களையும் இது கொண்டுள்ளது.

இந்த லேப்டாப்பில் இண்டெல் அல்ட்ரா ஹெச்.டி கிராபிக்ஸ் கார்டும் இடம்பெற்று உள்ளது. 50 வாட் ஹவர் பேட்டரி உடன் வரும் இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 1 நியோ லேப்டாப்பில் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.24 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் இந்த லேப்டாப் ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வர உள்ளது.
- M2 சிப்செட் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடலாக 2022 மேக்புக் ஏர் இருக்கிறது.
- முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2022 மேக்புக் ஏர் மாடல் முற்றிலும் புது டிசைன் கொண்டு இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
டெவலப்பர்கள் மாநாடு WWDC 2022 கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய M2 சிப்செட்-ஐ அறிமுகம் செய்தது. அடுத்த தலைமுறை ஆப்பிள் சிலிகான் சிப்செட்டான இது தலைசிறந்த CPU மற்றும் கிராஃபிக்ஸ் செயல்திறனை வழங்குகிறது. இதற்கு முன்னதாக வந்த M1 பிராசஸரை விட பல்வேறு அம்சங்களில் தனித்து விளங்கும் வகையில் சக்திவாய்ந்த ஒன்றாக இந்த புதிய M2 சிப்செட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
அதுமட்டுமின்றி புதிய மேக்புக் ஏர் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ ஆகிய மாடல்களையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. புது மேக்புக் ஏர் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களில் முற்றிலும் புதிய சக்திவாய்ந்த M2 சிப்செட் இடம்பெற்று இருந்தது.

இந்நிலையில் இந்த புதிய M2 சிப்செட் உடன் கூடிய மேக்புக் ஏர் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகையாக இந்த மேக்புக் ஏர் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 900-க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
M2 சிப்செட் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடலாக 2022 மேக்புக் ஏர் இருக்கிறது. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2022 மேக்புக் ஏர் மாடல் முற்றிலும் புது டிசைன் கொண்டு இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இது மிக மெல்லியதாகவும், குறைந்த எடையுடையதாகவும் இருக்கிறது. 2022 மேக்புக் ஏர் மாடல், ஸ்பேஸ் கிரே, லேப்டாப் சில்வர், மிட்நைட் மற்றும் ஸ்டார்லைட் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ளஸ்ஸில் இடம்பெற்றிருப்பது போல இதுவும் இன் இயர் டிசைனை கொண்டுள்ளது.
- அதேபோல் ஆப்பிளின் ஏர்பட்ஸ் ப்ரோவை போன்ற தோற்றமுடைய சார்ஜிங் கேஸும் இதனுடன் வருகிறது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சியோமி, அதன் புதிய சாதனமான ரெட்மி பட்ஸ் 3 லைட் எனும் இயர்பட்ஸை இந்தியாவில் வருகிற ஜூலை 20-ந் தேது அறிமுகம் செய்ய உள்ளது. இந்த இயர்பட்ஸ் கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி பட்ஸ் 3 யூத் மாடலின் ரீ-பிராண்டட் வெர்ஷன் ஆகும்.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ளஸ்ஸில் இடம்பெற்றிருப்பது போல இதுவும் இன் இயர் டிசைனை கொண்டுள்ளது. அதேபோல் ஆப்பிளின் ஏர்பட்ஸ் ப்ரோவை போன்ற தோற்றமுடைய சார்ஜிங் கேஸும் இதனுடன் வருகிறது. மேலும் இதில் துள்ளியமான ஆடியோவை கேட்கும் வண்ணம் 6எம்.எம் டிரைவர்கள் இடம்பெற்று உள்ளன.

ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் இதில் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர நாய்ஸ் கேன்சலேசன், டச் கண்ட்ரோல், டஸ்ட் ரெசிஸ்டன்ஸ், 18 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் என எண்ணற்ற அம்சங்கள் இதில் இடம்பெற்று உள்ளன. ரெட்மி பட்ஸ் 3 யூத் எடிஷன் சீனாவில் ரூ.1,196க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனால் இந்தியாவில் அறிமுகமாக உள்ள ரெட்மி பட்ஸ் 3 லைட்டின் விலையும் இதேபோல் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






