என் மலர்
கணினி
- இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், மிஸ்ட் கிரே, ஆலிவ் கிரீன், ரோஸ் பிங்க் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ ஆகிய 5 நிறங்களில் கிடைக்கிறது.
- இது கலர்ஃபிட் பல்ஸ் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாகும்.
நாய்ஸ் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்வாட்சை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ் 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், கடந்தாண்டு வெளியிடப்பட்ட கலர்ஃபிட் பல்ஸ் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாகும். இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் விற்பனை தற்போது இந்தியாவில் தொடங்கி உள்ளது.
அதன்படி தற்போது ரூ.1,999-க்கு இந்த ஸ்மாட்வாட்ச் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அமேசான் மற்றும் நாய்ஸின் இணையதளத்தின் மூலம் இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனை தொடங்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், மிஸ்ட் கிரே, ஆலிவ் கிரீன், ரோஸ் பிங்க் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ ஆகிய 5 நிறங்களில் கிடைக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை இதில் மிகப்பெரிய டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் வசதி, 1.8 இன்ச் எல்.சி.டி ஸ்கிரீன், 240 எம்.ஏ.ஹெச் பேட்டரி உள்ளிட்டவை உள்ளன. இதுதவிர இதய துடிப்பை கண்காணிக்கும் வசதி, மாதவிடாய் சுழற்சி கண்காணிக்கும் வசதி மற்றும் 50க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் ஆகியவை இதில் இடம்பெற்று உள்ளன.
- அமேஸ்பிட் ஜிடிஎஸ் 4 மினி ஸ்மார்ட்வாட்ச், மிட்நைட் பிளாக், ஃபிளமிங்கோ பிங்க், மிண்ட் ப்ளூ மற்றும் மூன்லைட் ஒயிட் ஆகிய 4 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிற ஜூலை 16-ந் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமேஸ்பிட் நிறுவனம் அதன் ஜிடிஎஸ் 4 மினி ஸ்மார்ட்வாட்சை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அல்ட்ரா ஸ்லிம் மற்றும் லைட் டிசைன் உடன் வந்துள்ளது. 15 நாட்கள் பேட்டரி பேக் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் செப் இயங்குதளம் இடம்பெற்று உள்ளது.
அமேஸ்பிட் ஜிடிஎஸ் 4 மினி ஸ்மார்ட்வாட்ச், மிட்நைட் பிளாக், ஃபிளமிங்கோ பிங்க், மிண்ட் ப்ளூ மற்றும் மூன்லைட் ஒயிட் ஆகிய 4 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிற ஜூலை 16-ந் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமேசான் மற்றும் அமேஸ்பிட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதன் ஒரிஜினல் விலை ரூ.7 ஆயிரத்து 999 ஆகும். ஆனால் அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ.6 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்சங்களை பொருத்தவரை 1.65 இன்ச் ஹெச்.டி AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி 270 எம்.ஏ.ஹெச் பேட்டரியும் இதில் இடம்பெற்று உள்ளது.
இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 நாட்கள் வரை நீடிக்குமாம். அதுமட்டுமின்றி இதில் உள்ள பேட்டரி சேவர் மோட் அம்சத்தை பயன்படுத்தினார் 45 நாட்கள் வரை சார்ஜ் நிற்கும் என கூறப்படுகிறது. 120-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களும் இதில் இடம்பெற்று உள்ளன.
- ஸ்கை கிரே மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் ரியல்மி நோட்புக் ஏர் லேப்டாப் அறிமுகமாகி உள்ளது.
- ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப்பில் 11-வது ஜென் கோர் ஐ-3 புராசஸர் இடம்பெற்றுள்ளது.
ரியல்மி நிறுவனம் அதன் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. ரியல்மி நோட்புக் ஏர் என பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பில் சிறப்பம்சமே அதன் டிசைன் மற்றும் எடை தான். இந்த புது லேப்டாப்பின் மொத்த எடை வெறும் 1.36 கிலோ தானாம். இதில் உள்ள மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் அது இதில் உள்ள மெல்லிய பெசில்கள் தான். இதன் அளவு 4.9 எம்.எம். ஆப்பிள் மேக்புக் ஏர் எம் 1 மாடலோடு ஒப்பிடுகையில் இது மிகவும் மெல்லிசானது.
ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப்பில் 11-வது ஜென் கோர் ஐ-3 புராசஸர் இடம்பெற்றுள்ளது. 8 ஜிபி ரேம் உடன் வரும் இந்த லேப்டாப்பில் 256ஜிபி மற்றும் 512ஜிபி என இரண்டு மெமரி வேரியண்ட்களில் வருகிறது. இதன் 16 : 10 டிஸ்ப்ளே பேனல் 1920 x 1200 ரெசலியூசனை ஆதரிக்கும் திறன் கொண்டதாகும். மேலும் இது 88 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவை கொண்டுள்ளது.

முழுவதுமாக மெட்டல் பாடியால் ஆன இந்த லேப்டாப், 54Whr பேட்டரி திறன் கொண்டதாகும். 65வாட் பாஸ்ட் சார்ஜிங்கையும் இது ஆதரிக்கிறது. இதன் 8ஜிபி + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.35 ஆயிரத்து 300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இதன் 8ஜிபி + 512ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.38 ஆயிரத்து 800 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்கை கிரே மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் வந்துள்ள இந்த லேப்டாப் தற்போது சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- ஆக்டிவ் பிளாக், கூல் கிரே மற்றும் டீப் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிறது.
- 700-க்கும் மேற்பட்ட பிட்னஸ் மோட்களும் இதில் இடம்பெற்று உள்ளன.
போட் நிறுவனம் அதன் ஸ்டார்ம் மாடல் ஸ்மார்ட்வாட்சை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில், தற்போது அதன் அடுத்த மாடலான ஸ்டார்ம் ப்ரோவை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பெரிய AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி மெட்டல் பினிஷும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதில் 700-க்கும் மேற்பட்ட பிட்னஸ் மோட்களும் இடம்பெற்று உள்ளன. 24 மணிநேரம் இதய துடிப்பை கண்காணிக்க்கூடிய சென்சார், பிட்னஸ் லெவலை கண்காணிக்கும் பீடோமீட்டர் ஆகியவையும் இதில் உள்ளன. 60 சதவீத புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய ஸ்கிரீன் மற்றும் எப்போதும் இயங்கக்கூடிய டிஸ்ப்ளே.

போட் ஸ்டார்ம் ப்ரோ ஆனது 100+ வாட்ச் ஃபேஸ்கள், அழைப்புகள், உரை மற்றும் அறிவிப்புகள், க்யூரேட்டட் கட்டுப்பாடுகள், மாதவிடாய் சுழற்சி எச்சரிக்கைகள், வானிலை அறிவிப்புகள் மற்றும் நேரடி கிரிக்கெட் ஸ்கோர்கள் ஆகியவற்றை பார்க்க உதவுகிறது. 200 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு தாங்குமாம்.
ஆக்டிவ் பிளாக், கூல் கிரே மற்றும் டீப் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் வரும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் அறிமுக விலை ரூ.2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல் ப்ளிப்கார்ட் மற்றும் போட்டின் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
- வருகிற ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற உள்ளது.
- இந்த ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 20 ஆண்டு கால அளவிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்து 5ஜி சேவையை வழங்க முடியும்.
5ஜி தொலைதொடர்பு சேவை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்தியாவில் தற்போது வரை, 4ஜி அலைக்கற்றை மூலம் இணைய சேவை மற்றும் தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2022 இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சரவை அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியது.

வருகிற ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 20 ஆண்டு கால அளவிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்து 5ஜி சேவையை வழங்க முடியும்.
அந்த வகையில் இந்த ஏலத்தில் பங்கேற்க ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ள நிலையில், தற்போது அதானி குழுமமும் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்து உள்ளது. இதன்மூலம் 5ஜி அலைக்கற்றையை கைப்பற்ற கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 20 முதல் 25 முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வர உள்ளது.
- ஐபேட்OS 15.5 மூலம் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன.
- ஐபேட் மினி 6 பயனர்களுக்கு இந்த அப்டேட் மூலம் சார்ஜிங் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபேட் மினி 6 என்கிற டேப்லெட்டை அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதேபோல் அந்நிறுவனத்தின் சமீபத்திய சாப்ட்வேர் அப்டேட்டான ஐபேட்OS 15.5 மூலம் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஐபேட் மினி 6 பயனர்களுக்கு இந்த அப்டேட் மூலம் சார்ஜிங் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஐபேட் OS 15.5 வெர்ஷனுக்கு அப்டேட் செய்த பயனர்கள் ஏராளமானோர் தங்களது ஐபேட் மினி 6ஐ சார்ஜ் செய்ய முடியவில்லை என தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. சாப்ட்வேர் பக்கினால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவி்த்துள்ளது.
இந்த பிரச்சனையை சரிசெய்ய விரைவில் ஐபேட் OS 15.6 பீட்டா வெர்ஷனை வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் அதுவரை இந்த பிரச்சனைக்கு தற்காலிக தீர்வாக அதனை ரீபூட் செய்து பயன்படுத்த அந்நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
- அமேஸ்பிட் பிப் 3 ப்ரோவில் உள்ள ஜிபிஎஸ் பயனரின் இருப்பிடத்தை துல்லியமாக கண்காணிக்க உதவுகிறது.
- பிளாக், பிங்க் மற்றும் கிரீம் கலர் வேரியண்டில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கிறது.
அமேஸ்பிட் நிறுவனம் இந்தியாவில் அதன் பிப் 3 ப்ரோ மாடல் ஸ்மாட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 1.69 இன்ச் அளவும் 2.5டி கிளாஸ் + AF கோட்டிங் உடன் கூடிய கலர் TFT டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. நோடிபிகேஷன், ஹெல்த் மற்றும் பிட்னஸ் விவரங்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம். இதய துடிப்பை கண்காணிக்கும் அம்சமும் இதில் உள்ளது.

இதுதவிர இரத்த ஆக்ஸிஜன் அளவு, மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு, மன அழுத்த நிலை மற்றும் தூக்கத்தின் தர கண்காணிப்பு ஆகிய அம்சங்களில் இதில் இடம்பெற்று உள்ளது. PAI எனும் ஹெல்த் அசெஸ்மென்ட் சிஸ்டமும் இதில் இடம்பெற்றுள்ளது. 2 வாரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப்பும் இதில் உள்ளது.
PAI ஆனது ஒரு ஸ்மார்ட் அல்காரிதம் மூலம் ஆரோக்கியம், உடற்தகுதி மற்றும் பிற அளவிலான தரவுகளை ஆல்-ரவுண்ட் மதிப்பீட்டிற்குப் பயன்படுத்துகிறது. அமேஸ்பிட் பிப் 3 ப்ரோவில் உள்ள ஜிபிஎஸ் பயனரின் இருப்பிடத்தை துல்லியமாக கண்காணிக்க உதவுகிறது. பிளாக், பிங்க் மற்றும் கிரீம் கலர் வேரியண்டில் கிடைக்கும் இந்த ஸ்மாட்வாட்ச்சின் விலை ரூ.3 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- வழக்கமாக இயர் பட்ஸின் கேஸ் சதுரமாக இருக்கும், ஆனால் நத்திங் நிறுவன இயர் பட்ஸின் கேஸ் செவ்வக வடிவில் அமைந்துள்ளது.
- ஆப்பிள் ஏர்பாட்ஸை போலவே இதன் தோற்றம் அமைந்துள்ளது.
நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள லான்ச் ஈவண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. ஐபோனுக்கு போட்டியாக இது இருக்கும் என கூறப்படுவதால் நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, அந்நிறுவனம் அதன் புதிய இயர் பட்ஸையும் விரைவில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த இயர்பட்ஸின் தோற்றம் சமீபத்தில் லீக் ஆனது. அந்த இயர் பட்ஸுக்கு நத்திங் இயர் (1) ஸ்டிக் என பெயரிடப்பட்டுள்ளது. வழக்கமாக இயர் பட்ஸின் கேஸ் சதுரமாக இருக்கும், ஆனால் நத்திங் நிறுவன இயர் பட்ஸின் கேஸ் செவ்வக வடிவில் அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி அந்த கேஸ் டிரான்ஸ்பரெண்டாகவும் உள்ளது. இந்த இயர் பட்ஸ் வருகிற செப்டம்பர் மாதம் 19-ந் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி இதன் விலை ரூ.8 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஏர்பாட்ஸை போலவே இதன் தோற்றம் அமைந்துள்ளது.
- ஹூவாய் வாட்ச் 4 ப்ரோ மாடல் 341 பிபிஐ ஸ்கிரீன் ரெசல்யூசனுடன் கூடிய 1.41 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
- ஹூவாய் வாட்ச் 4 ப்ரோ மாடல் 800 எம்.ஏ.ஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.
ஹூவாய் நிறுவன குழந்தைகளுக்கான ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. வாட்ச் 4 ப்ரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம் வீடியோ கால் கூட செய்ய முடியுமாம். பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் சுலபமாக வீடியோ காலில் உரையாட உதவியாக 5 மெகாபிக்சல் ஹெச்.டி. கேமராவும் இந்த வாட்ச்சில் இடம்பெற்று உள்ளது.
ஹூவாய் வாட்ச் 4 ப்ரோ மாடல் 341 பிபிஐ ஸ்கிரீன் ரெசல்யூசனுடன் கூடிய 1.41 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இதில் சில ஸ்போர்ட்ஸ் மோட்களும் உள்ளது. ஸ்டெப் கவுண்டர் மற்றும் குழந்தையின் நடவடிக்கைகளையும் இதன் மூலம் கண்காணிக்க முடியும். குழந்தை இருக்கும் இடத்தை துள்ளியமாக கண்டறிய ஜிபிஎஸ் வசதியும் இதில் இடம்பெற்று உள்ளது.

ஹூவாய் வாட்ச் 4 ப்ரோ மாடல் 800 எம்.ஏ.ஹெச் பேட்டரியை கொண்டுள்ளது. இது 40 நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்துகொள்ள முடியுமாம். வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்வாட்ச் சீனாவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.11 ஆயிரத்து 750 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- இந்த அம்சம் மூலம் உடல் வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
- காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மருத்துவரை அணுகச் சொல்லி அலர்ட் செய்யும் அம்சமும் இந்த ஸ்மார்ட்வாட்சில் இடம்பெற்று உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அதன் வாட்ச் 8 சீரிஸ் ஸ்மார்ட்வாட்சை அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச், 3 விதமான வேரியண்ட்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்காணிக்கும் டெம்பரேச்சர் சென்சாரும் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த அம்சம் மூலம் உடல் வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி ஒருவேளை பயனர்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருந்து அவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மருத்துவரை அணுகச் சொல்லி அலர்ட் செய்யும் அம்சமும் இந்த ஸ்மார்ட்வாட்சில் இடம்பெற்று உள்ளது.

இதில் எஸ் 8 சிப் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. டெம்பரேச்சர் சென்சார் தவிர பல்வேறு சிறப்பம்சங்களும் வாட்ச் 8 சீரிஸில் இடம்பெறும் என கூறப்படுகிறது. அவை என்னென்ன என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
- இதய துடிப்பு, ஸ்லீப் மாணிட்டரிங் என உடல் நலன் சார்ந்த அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கிறது.
- 12S சீரிஸ் ஸ்மார்ட்போன் உடன் இந்த சியோமி பேண்ட் 7 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சியோமி பேண்ட் 7 மாடல் கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. உலக சந்தைகளில் விற்பனைக்கு வந்த இந்த பேண்ட் இன்னும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. அதற்குள் அந்நிறுவனம் அதன் ப்ரோ மாடலை அறிமுகப்படுத்தி விட்டது. அதன்படி சியோமி பேண்ட் 7 ப்ரோ மாடல் இன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
Mi பேண்ட் 7 மாடலில் உள்ள அம்சங்கள் இதிலும் இடம்பெற்று உள்ளது. ஆனால் சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. சியோமி பேண்ட் 7 மாடலில் 1.61 இன்ச் AMOLED 192x490 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது.

ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை டிராக் செய்ய பேண்ட் 7 மாடலில் ஏராளமான அம்சங்கள் மற்றும் பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு இருந்தன. இந்த அம்சங்கள் சியோமி பேண்ட் 7 ப்ரோ மாடலிலும் இடம்பெற்று உள்ளது.
மேலும் இதய துடிப்பு, ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் பல்வேறு உடல் நலன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. சியோமியின் 12S சீரிஸ் ஸ்மார்ட்போன் உடன் இந்த சியோமி பேண்ட் 7 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பேண்ட் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
- நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனின் முன்பதிவு தொடங்கி உள்ளது.
நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள லான்ச் ஈவண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. ஐபோனுக்கு போட்டியாக இது இருக்கும் என கூறப்படுவதால் நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, அந்நிறுவனம் ஸ்மார்ட்போனுடன் சேர்த்து அதன் புதிய இயர் பட்ஸையும் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த இயர்பட்ஸின் தோற்றம் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளது. அந்த இயர் பட்ஸுக்கு நத்திங் இயர் (1) ஸ்டிக் என பெயரிடப்பட்டுள்ளது.

வழக்கமாக இயர் பட்ஸின் கேஸ் சதுரமாக இருக்கும், ஆனால் நத்திங் நிறுவன இயர் பட்ஸின் கேஸ் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த கேஸ் டிரான்ஸ்பரெண்டாகவும் உள்ளது. வருகிற ஜூலை 12-ந் தேதி லான்ச் ஆன பின்னர் தான் இதன் ஒரிஜினல் விலை என்ன என்பது தெரியவரும்.






