என் மலர்tooltip icon

    கணினி

    • சியோமியின் 12S சீரிஸ் ஸ்மார்ட்போன் உடன் இந்த சியோமி பேண்ட் 7 ப்ரோ அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • Mi பேண்ட் 7 மாடலை விட சியோமி பேண்ட் 7 ப்ரோ மாடலில் கூடுதல் அம்சங்கள் இருக்கும்.

    சியோமி பேண்ட் 7 மாடல் கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. உலக சந்தைகளில் விற்பனைக்கு வந்த இந்த பேண்ட் இன்னும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. அதற்குள் அந்நிறுவனம் அதன் ப்ரோ மாடலை அறிமுகப்படுத்த தயாராகி விட்டது. அதன்படி சியோமி பேண்ட் 7 ப்ரோ மாடல் வருகிற ஜூலை 4-ந் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

    Mi பேண்ட் 7 மாடலில் உள்ள அம்சங்கள் இதிலும் இருக்கும் என்றும், சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. சியோமி பேண்ட் 7 மாடலில் 1.62 இன்ச் AMOLED 192x490 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது.


    ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை டிராக் செய்ய பேண்ட் 7 மாடலில் ஏராளமான அம்சங்கள் மற்றும் பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு இருந்தன. இந்த அம்சங்கள் சியோமி பேண்ட் 7 ப்ரோ மாடலிலும் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதய துடிப்பு, ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் பல்வேறு உடல் நலன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. சியோமியின் 12S சீரிஸ் ஸ்மார்ட்போன் உடன் இந்த சியோமி பேண்ட் 7 ப்ரோ அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஐடெல் ஸ்மார்ட்வாட்ச்சில் 1.7-இன்ச் அளவுள்ள ஐபிஎஸ் எல்சிடி திரை இடம்பெற்றுள்ளது
    • இந்த ஸ்மார்ட்வாட்ச்சிற்கு 1 வருட தயாரிப்பு வாரண்டியும் வழங்கப்படுகிறது.

    ஐடெல் நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐடெல் ஸ்மார்ட்வாட்ச் 1 ES என பெயரிடப்பட்டுள்ள இது ரூ.1,999 என்கிற மலிவு விலையில் கிடைக்கிறது. இது விரைவில் நாடு முழுவதும் உள்ள ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது 1 வருட தயாரிப்பு வாரண்டியும் வழங்குகிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் சதுர டயலைக் கொண்டுள்ளது. 1.7-இன்ச் அளவுள்ள ஐபிஎஸ் எல்சிடி திரை இதில் இடம்பெற்றுள்ளது சந்தையில் உள்ள பெரும்பாலான பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச்களைப் போலவே, இதுவும் ஒரு ஃபிட்னஸ் டிராக்கராக விளங்குகிறது.


    எனவே, இது நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கிப்பிங், பூப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து மற்றும் யோகா போன்ற பல ஸ்போர்ட்ஸ் மோட்களை வழங்குகிறது. இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜன் அளவை கண்காணிப்பதற்கான வசதியும் இதில் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் தூசி மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்டிற்கான IP68-சான்றிதழை பெற்றுள்ளது. இதில் 220mAh பேட்டரி உள்ளது. இது முழு சார்ஜில் 15 நாட்கள் வரை நீடிக்குமாம். இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிற்கும் இணக்கமானது.

    • இந்த அம்சம் கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • கூகுள் குரோமிலும் Incognito mode-ல் இந்த அம்சம் இயங்காதாம்.

    இணைய வசதியே இல்லாமல் இனி ஜிமெயில் மெசேஜ்களை அனுப்ப முடியும். அது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம். இதுகுறித்து கூகுள் சப்போர்ட் வெளியிட்டிருக்கும் தகவலின் படி இனி இணைய வசதி இல்லாமல் நேரடியாக mail.google.com தளத்தின் மூலம் ஜிமெயில் மெசேஜ்களை படிக்கவும்., பதில் அனுப்பவும் முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஜிமெயில் மெசேஜ்களை இணைய சேவை இன்றி பயன்படுத்த, முதலில் கூகுள் குரோம் பிரவுசரை டவுன்லோடு செய்ய வேண்டும். ஏனெனில் இந்த அம்சம் கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூகுள் குரோமிலும் Incognito mode-ல் இந்த அம்சம் இயங்காதாம்.


    முதலில் ஜிமெயில் ஆப்லைன் செட்டிங்ஸை ஓபன் பண்ண வேண்டும். அடுத்து அதில் உள்ள 'Enable offline mail' என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதன்பின்னர் எத்தனை நாட்களுக்கான ஜிமெயில் மெசேஜ்களை sync செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இறுதியில் 'Save changes' ஆப்ஷனை க்ளிக் செய்த பின் ஜிமெயில் மெசேஜ்களை இணைய சேவை இன்றி பயன்படுத்தலாம்.

    • ஒப்போ ஸ்மார்ட்வாட்ச் பிளாக், சில்வர், டார்க் கிரே, மற்றும் லைட் கோல்டு ஆகிய நான்கு நிறங்களில் வர உள்ளது.
    • ஒப்போ பேண்ட் 2 பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ வாட்ச் 3 மற்றும் பேண்ட் 2 ஆகியவற்றை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஒப்போ ஸ்மார்ட்வாட்ச் OWW211, OWW212 மற்றும் OWW213 என மூன்று வெவ்வேறு மாடல்களில் வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒப்போ வாட்ச் 3-ல் அதிகமான ஸ்கிரீன் டூ பாடி ரேசியோ இருக்கும் எனவும், மைக்ரோ கர்வுடு ஸ்கொயர் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் மிக மெல்லிய பெசில்களுடன் கூடிய செவ்வக வடிவிலான டிஸ்ப்ளே இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது.


    இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், சில்வர், டார்க் கிரே, மற்றும் லைட் கோல்டு ஆகிய நான்கு நிறங்களில் வர உள்ளது. இதில் 2 மாடல்களில் 42 mm டயலும், ஒரு மாடலில் மட்டும் 46 mm டயலுடம் இடம்பெற்றிருக்குமாம்.

    அதேபோல் ஒப்போ பேண்ட் 2 பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் இது NFC, இரத்த ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிப்பதற்கான SpO2 சென்சார் என எண்ணற்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. 

    • இதில் உள்ள ஆக்சிஜன் பிளே 2.0 மூலம் 230க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களை பார்க்க முடியும்.
    • 43 இன்ச் மாடலை போல் இதிலும் 24W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ ஆகியவை இடம்பெற்று உள்ளன.

    ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 43 Y1S புரோ மாடல் ஸ்மார்ட் டிவியை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது அதன் 50இன்ச் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

    இந்த டிவி பேசில் லெஸ் டிசைன் உடன் வருகிறது. இதில் ஹெச்.டி.ஆர் 10 பிளஸ், ஹெச்.டி.ஆர் 10 ஆகியவற்றுடன் HLG பார்மெட்டும் சப்போர்ட் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் MEMC எனும் புதிய தொழில்நுட்பமும் இடம்பெற்று உள்ளது.


    இதில் ஆண்ட்ராய்டு 10.0, கூகுள் அசிஸ்டன்ட் ஆகிய அம்சங்களும் இடம்பெற்று உள்ளன. இதில் உள்ள ஸ்மார்ட் மேனேஜர் அம்சம் மூலம் ஒன்பிளஸ் பட்ஸ், ஒன்பிளஸ் வாட்ச், ஒன்பிளஸ் கனெக்ட் 2.0 ஆகியவற்றை இணைக்க முடியும்.

    இதில் உள்ள ஆக்சிஜன் பிளே 2.0 மூலம் 230க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களை பார்க்க முடியும். 43 இன்ச் மாடலை போல் இதிலும் 24W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ ஆகியவை இடம்பெற்று உள்ளன. ஒன்பிளஸ் TV 50 Y1S புரோ ஸ்மார்ட் டிவி விரைவில் அமேசான் மற்றும் ஒன்பிளஸ்ஸின் ஆன்லைன், ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வர உள்ளது.

    • ஹூவாய் ஃப்ரீபட்ஸ் ப்ரோ 2 TWS இயர்பட்ஸ், சிலவர் புளூ, சில்வர் பிளாக், செராமிக் ஒயிட் ஆகிய மூன்று நிறங்களில் வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • நார்மல் மோட், காஸி மோட், அல்ட்ரா மோட் என மூன்று விதமான நாய்ஸ் கேன்சலேசன் மோட்களை இந்த இயர்பட்ஸ் கொண்டுள்ளது.

    ஹூவாய் நிறுவனம் அதன் புதிய இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் ஃப்ரீபட்ஸ் ப்ரோ 2 TWS என பெயரிடப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ், ஐரோப்பாவில் நடந்த லான்ச் ஈவண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. டூயல் டிரைவர்களுடன் கூடிய இந்த இயர்பட்ஸில் மூன்று மைக்ரோபோன்களும் இடம்பெற்றுள்ளது. 47 டெசிபல் நாய்ஸ் கேன்சலேசன் அம்சமும் இதில் உள்ளது.

    இதன் கடந்த மாடலில் 40 டெசிபலாக இருந்த நாய்ஸ் கேன்சலேசன், தற்போது 47 டெசிபல் ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. நார்மல் மோட், காஸி மோட், அல்ட்ரா மோட் என மூன்று விதமான நாய்ஸ் கேன்சலேசன் மோட்களை இந்த இயர்பட்ஸ் கொண்டுள்ளது. இதன் பேட்டரி அளவு எவ்வளவு என்பது வெளியிடப்படவில்லை.


    ஆனாலும் இதன் பேட்டரி 30 மணிநேரம் தாங்கக்கூடிய வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சார்ஜிங் கேஸ் உடன் இந்த இயர்பட்ஸ் வரும் எனவும் தெரிகிறது. ஹூவாய் ஃப்ரீபட்ஸ் ப்ரோ 2 TWS இயர்பட்ஸ், சிலவர் புளூ, சில்வர் பிளாக், செராமிக் ஒயிட் ஆகிய மூன்று நிறங்களில் வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இந்த ஸ்மார்ட்வாட்ச், வருகிற ஜூன் 28-ந் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
    • டிஸ்ப்ளேவை பொருத்தவரை 360 x 360 பிக்சல்களுடன் கூடிய 1.32 இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது.

    ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்து உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்வாட்ச்சுக்கு ரியல்மி டெக்லைஃப் வாட்ச் R100 என பெயரிடப்பட்டு உள்ளது. இது புளூடூத் காலிங் வசதியுடன் வருகிறது. மேலும் இதில் மிகப்பெரிய பேட்டரி பேக் அப் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளையும் கொண்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் அறிமுகமாகி உள்ளது. டிஸ்ப்ளேவை பொருத்தவரை 360 x 360 பிக்சல்களுடன் கூடிய 1.32 இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது. இதில் இரண்டு ஹார்டுவேர் பட்டனும் இடம்பெற்றுள்ளது. ஒன்று UI நேவிகேஷன் மற்றொன்றும் வேகமாக ஸ்போர்ட்ஸ் மோடுக்கு மாற்றவும் உதவும்.


    இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்வாட்சில் இதய துடிப்பை கண்காணிக்கும் சென்சார், ஸ்லீப் டிராக்கர் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இது iOS மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் இரண்டிற்கும் இணக்கமானது. மேலும் புளூடூத் 5.2 இணைப்பு வழியாக ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கப்படும் வசதியும் இதில் உள்ளது.

    இது வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் அலெக்ஸா சபோர்ட் உடன் வந்துள்ளது. மேலும் இதில் திசைகாட்டி, காலண்டர், அலாரம், கடிகாரம் மற்றும் ஸ்பீக்கர் & மைக்ரோஃபோன் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இது ஒரு வருட வாரண்டி உடன் அறிமுகமாகி உள்ளது. நேற்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்வாட்ச், வருகிற ஜூன் 28-ந் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது. இதன் ஒரிஜினல் விலை ரூ.3,999 ஆகும், தற்போது அறிமுக ஆஃபராக ரூ.3,699க்கு விற்பனைக்கு வர உள்ளது.

    • Mi பேண்ட் 7 மாடல் அதன் முந்தைய வெர்ஷன்களை போன்றே ஸ்டாண்டர்டு மற்றும் NFC என இரண்டு வெர்ஷன்களில் அறிமுகமாகி உள்ளது.
    • இந்த பேண்ட் பிளாக், புளூ, ஐவரி, ஆரஞ்ச் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.

    சியோமி பேண்ட் 7 மாடல் கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. உலக சந்தைகளில் விற்பனைக்கு வந்த இந்த பேண்ட் இன்னும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. அதன் இந்திய வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அறிவிக்காவிட்டாலும், சமீபத்தில் பிஐஎஸ் எனப்படும் பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ் எனப்படும் தரச் சான்று பெற அந்நிறுவனம் விண்ணப்பித்திருந்ததால் விரைவில் இது இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சாதனம் அதன் முந்தைய மாடலை போன்றே காட்சி அளிக்கிறது. Mi பேண்ட் 7 மாடல் அதன் முந்தைய வெர்ஷன்களை போன்றே ஸ்டாண்டர்டு மற்றும் NFC என இரண்டு வெர்ஷன்களில் அறிமுகமாகி உள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை சியோமி பேண்ட் 7 மாடலில் 1.62 இன்ச் AMOLED 192x490 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.


    இது முந்தைய சியோமி பேண்ட் 6 மாடலில் வழங்கப்பட்டு இருந்ததை விட 25 சதவீதம் பெரியது ஆகும். ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை டிராக் செய்ய இந்த பேண்ட் 7 மாடலில் ஏராளமான அம்சங்கள் மற்றும் பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இதில் SpO2, இதய துடிப்பு, ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் பல்வேறு உடல் நலன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த பேண்ட் 180 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 நாட்கள் வரை தாங்குமாம். இந்த பேண்ட் பிளாக், புளூ, ஐவரி, ஆரஞ்ச் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ.3 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    • 5ஜி சேவை முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 20 முதல் 25 முக்கிய நகரங்களில் வழங்கப்பட உள்ளது.
    • உலக சந்தைகளைவிட இந்தியாவில் 5ஜி டேட்டா சேவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.

    5ஜி தொலைதொடர்பு சேவை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்தியாவில் தற்போது வரை, 4ஜி அலைக்கற்றை மூலம் இணைய சேவை மற்றும் தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2022 இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சரவை அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியது. வருகிற ஜூலை மாதத்திற்குள் இந்த ஏலத்தை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 20 ஆண்டு கால அளவிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்து 5ஜி சேவையை வழங்க முடியும்.


    இந்நிலையில், 5ஜி சேவை முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 20 முதல் 25 முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என மத்திய தகவல் தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    அதில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் முதற்கட்டமாக பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், லக்னோ, பூனே, சென்னை, காந்திநகர், ஜாம் நகர், மும்பை, அகமதாபாத், சண்டீகர் உள்பட 13 நகரங்களுக்கு வழங்கப்படும் என்றும் பின்னர் இதர நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உலக சந்தைகளைவிட இந்தியாவில் 5ஜி டேட்டா சேவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். 4ஜி டேட்டா பேக்குகளுக்கு இணையாகவே 5ஜி டேட்டா பேக்குகளின் விலையும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

    • வியூபினிட்டி S8 மானிட்டர்கள் 32-இன்ச் மற்றும் 27-இன்ச் என இரண்டு அளவுகளில் வருகின்றன.
    • இதன்மூலம் 10ஜிபிபிஎஸ் வேகத்தில் தரவை மாற்றலாம்.

    சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வியூபினிட்டி S8 என்ற புதிய மானிட்டரை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அவை படைப்பாற்றல் நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த மானிட்டர்கள் 32-இன்ச் மற்றும் 27-இன்ச் என இரண்டு அளவுகளில் வருகின்றன. இது அல்ட்ரா ஹெச்டி ரெசலியூசன் மற்றும் வேசா டிஸ்ப்ளே எச்டிஆர் 600 தரநிலை வரை கொண்டுள்ளது.

    வியூபினிட்டி S8 (மாடல்: S80PB) 3,840 x 2,160 ரெசலியூசன் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி பேனல் கொண்டுள்ளது. மேலும் PANTONE சரிபார்க்கப்பட்டது, அதாவது இது 2,000 க்கும் மேற்பட்ட வண்ணங்கள் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட 110 தோல் நிற நிழல்களை நம்பகத்தன்மையுடன் மீண்டும் உருவாக்க முடியும். இந்த மானிட்டர் உலகின் முதல் UL சரிபார்க்கப்பட்ட கிளார் ஃப்ரீ மானிட்டர் ஆகும்.


    இது மேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 32 இன்ச் மாடல் டிஸ்ப்ளே எச்டிஆர் 600 சான்றிதழையும், 27 இன்ச் மாடல் டிஸ்ப்ளே எச்டிஆர் 400 சான்றிதழையும் பெற்றுள்ளது. ஒரு USB Type-C கேபிள் மூலம் டெஸ்க்டாப்புகள் அல்லது மடிக்கணினிகளுக்கான ஆல்-இன்-ஒன் டாக்காகவும் மானிட்டர் செயல்படுகிறது.

    இதன்மூலம் 10ஜிபிபிஎஸ் வேகத்தில் தரவை மாற்றலாம், ஈத்தர்நெட் வழியாக இணையத்துடன் இணைக்கலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனத்தை 90W வேகத்தில் சார்ஜ் செய்யலாம். வியூபினிட்டி S8 மானிட்டர் ஜூன் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் 32 இன்ச் மாடலின் விலை ரூ. 49,530 ஆகவும், 27 இன்ச் மாடலின் விலை ரூ.43,490 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

    • சுமார் 27 ஆண்டுகளாக கணினி உலகில் ஒரு அங்கமாக இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் ஜூன் 15-ந் தேதி விடைபெற்றது.
    • தென் கொரியாவை சேர்ந்த கியோங் ஜாங் என்கிற பொறியாளர், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கல்லறை ஒன்றை கட்டி உள்ளார்.

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் கடந்த ஜூன் 15-ந் தேதி உடன் விடைபெறுகிறது. கடந்த 1995-ம் ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டது. உலகளவில் மக்கள் பரவலாக கணினிகளை பயன்படுத்த தொடங்கிய காலத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூலம் தான் பயனர்கள் தங்களுக்கு தேவையானவற்றை இணைய வழியில் தேடி தெரிந்துகொண்டனர்.

    சுமார் 27 ஆண்டுகளாக கணினி உலகில் ஒரு அங்கமாக இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் ஜூன் 15-ந் தேதி விடைபெற்ற நிலையில், தற்போது தென் கொரியாவை சேர்ந்த கியோங் ஜாங் என்கிற பொறியாளர், அதற்கு கல்லறை ஒன்றை கட்டி உள்ளார். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் லோகோ உடன் கூடிய அந்த கல்லறையை கட்ட அவர் 330 டாலர் செலவழித்துள்ளாராம்.


    அந்த கல்லறையில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் அறிமுக தேதியும், அது விடைபெற்ற தேதியும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அதில் இடம்பெற்றுள்ள 'மற்ற சாஃப்ட்வேர்களை டவுண்லோடு செய்ய சிறந்த கருவியாக அவன் இருந்தான்' என்கிற வாசகமும் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த கல்லறையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.

    • இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் முழு திரையில் பார்க்கும் அம்சம் உள்ளது.
    • நேவிகேஷன் பாரிலும் சில மாற்றங்களை இன்ஸ்டாகிராம் செய்ய உள்ளதாம்.

    மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமை வாங்கிய பின்னர் அதன் பயனர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஷாட் வீடியோ தளங்களான டிக்டாக், ஸ்னாப்சாட் போன்ற போட்டி நிறுவனங்களைக் கருத்தில் கொண்டு, இன்ஸ்டாகிராமின் முக்கிய அம்சமான ரீல்ஸில் பல விதிமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தற்போது டிக் டாக்கை போன்று ஹோம் ஸ்கிரீனில் முழு திரையிலும் போஸ்ட்டுகள் வருவதை போன்று புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி நேவிகேஷன் பாரிலும் சில மாற்றங்களை செய்ய உள்ளதாம்.


    டிக் டாக் வீடியோக்களை மட்டுமே கொண்டுள்ள ஒரு செயலி. அதேபோல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் முழு திரையில் பார்க்கும் அம்சம் உள்ளது. தற்போதைய அப்டேட்டின் படி இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களும் முழு திரையில் தெரியும் வண்ணம் மாற்றங்களை செய்ய அந்நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. இந்த அம்சம் தற்போது டெஸ்டிங் ஸ்டேஜில் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ×