என் மலர்tooltip icon

    கணினி

    • ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் தாங்கும் அளவு பேட்டரி பேக் அப் உடன் இந்த ஸ்மார்ட் பேண்ட் வருகிறது.
    • Mi ஸ்மார்ட் பேண்ட் 7 கடந்த மாதமே சீனாவில் அறிமுகமாகிவிட்டது.

    சியோமி நிறுவனத்தின் Mi ஸ்மார்ட் பேண்ட் 7 விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்ட் சமீபத்தில் BIS எனப்படும் பியூரோ ஆஃஒ இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ் எனும் சான்றிதழை பெற்றுள்ளது. இதன்மூலம் இது விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

    ஏற்கனவே NCC, IMDA போன்ற சான்றிதழ்களை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட் பேண்ட், தற்போது BIS சான்றிதழை பெற்றுள்ளது. Mi ஸ்மார்ட் பேண்ட் 7 கடந்த மாதமே சீனாவில் அறிமுகமாகிவிட்டது. இதில் 1.62 இன்ச் பெரிய AMOLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஏராளமான உடல்நலன் சார்ந்த மாணிட்டரிங் அம்சங்கள் உள்ளிட்டவை வழங்ப்பட்டு உள்ளது.


    ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் தாங்கும் அளவு பேட்டரி பேக் அப் உடன் இந்த ஸ்மார்ட் பேண்ட் வருகிறது. மேலும் இது புளூடூத் 5.2 வெர்ஷன் கனெக்டிவிட்டி உடன் வருகிறது. கால் மற்றும் மெசேஜ் நோட்டிபிகேஷன்களை தெரிவிக்கும் அம்சமும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் இந்திய வெளியீட்டு விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இன்பினிக்ஸ் INBook X1 ஸ்லிம் லேப்டாப் ஸ்டார்ஃபால் கிரே, காஸ்மிக் புளூ, நோபில் ரெட் மற்றும் அரோரா கிரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
    • வருகிற ஜூன் 21 முதல் இன்பினிக்ஸ் INBook X1 ஸ்லிம் லேப்டாப்கள் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர உள்ளன.

    இன்பினிக்ஸ் நிறுவனம் INBook X1 ஸ்லிம் சீரிஸ் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. முன்னதாக அறிவித்தபடி, இவை 14-இன்ச் FHD திரையைக் கொண்டுள்ளன, மூன்று வெவ்வேறு விதமான புராசசர்களுடன் இது வருகிறது. அதன்படி i3 (8ஜிபி + 256ஜிபி | 8ஜிபி + 512ஜிபி), i5 (8ஜிபி + 512ஜிபி |16ஜிபி + 512ஜிபி) மற்றும் டாப் ஸ்பீடு i7 (16ஜிபி + 512ஜிபி) ஆகிய புராசசர்களை கொண்டுள்ளது. 1.24 கிலோ எடையுள்ள அலுமினிய அலாய் ஃபினிஷ் மற்றும் 14.8மி.மீ மெல்லியதாக உள்ளது.

    இது HD வெப்கேம், DTS ஒலி தொழில்நுட்பத்துடன் இரண்டு அடுக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் ஸ்டார் லைட் கேமரா அம்சத்துடன் வருகிறது. இவை வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் போது அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள சூழ்நிலைகளில் வீடியோ தரத்தை மேம்படுத்த உதவுகிறது.


    இன்பினிக்ஸ் INBook X1 ஸ்லிம் லேப்டாப் ஸ்டார்ஃபால் கிரே, காஸ்மிக் புளூ, நோபில் ரெட் மற்றும் அரோரா கிரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. விலையை பொறுத்தவரை i3, 8ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.29,990க்கு கிடைக்கிறது, அதன் 8ஜிபி + 512ஜிபி மாடல் ரூ.32,990க்கு கிடைக்கிறது. அதேபோல் i5-ன் 8ஜிபி + 512ஜிபி மாடல் ரூ.39,990க்கும், 16ஜிபி + 512ஜிபி மாடல் ரூ.44,990க்கும் கிடைக்கிறது.

    அதன் டாப் எண்ட் மாடலான i7-ன் 16ஜிபி + 512ஜிபி வேரியண்டின் விலை ரூ.49,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த லேப்டாப்கள் வருகிற ஜூன் 21 முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர உள்ளன. ஆக்சிஸ் பேங்கின் கிரெட் அல்லது டெபிட் கார்டு பயனர்களுக்கு ரூ.3000 சலுகையும் வழங்கப்பட்டு உள்ளது.

    • புதிய அப்டேட்டை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம்.
    • விரைவில் இதர நாடுகளுக்கும் இந்த சேவை வழங்கப்பட உள்ளது.

    கூகுள் நிறுவனத்தின் மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்புகளுள் ஒன்று கூகுள் மேப். கையில் இது இருந்தால் போது தெரியாத ஊருக்கு கூட சுலபமாக சென்றுவிட்டு வரலாம். அந்த அளவுக்கு பயனர்கள் பயன்படுத்த எளிமையாகவும், புரியும்படியும் அமைக்கப்பட்டு உள்ளது இந்த கூகுள் மேப் சேவை. மேப் சேவைகளை வழங்க பல்வேறு ஆப்புகள் இருந்தாலும் கூகுள் மேப்பை போன்ற துள்ளியம் பிறவற்றில் இல்லை.

    அதனால் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வழிகளை காட்டுவது மட்டுமின்றி எண்ணற்ற அம்சங்கள் இந்த கூகுள் மேப் செயலியில் உள்ளது. செல்லும் வழியில் ஏதேனும் சாலை வேலை நடந்தாலோ, டிராபிக் அதிகமாக இருந்தாலோ அதனை உட்கார்ந்த இடத்தில் இருந்தே அறிந்துகொள்ளலாம். இதுதவிர ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள், ஏடிஎம்கள், மருத்துவமனை போன்றவற்றை அறிந்துகொள்ள சிறப்பு குறியீடுகளும் அதில் வழங்கப்பட்டிருக்கும்.


    இவ்வாறு எண்ணற்ற அம்சங்களை கொண்ட கூகுள் மேப் செயலி, தற்போது மேலும் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை முன்கூட்டிய தெரிந்து கொள்ளும் வசதியை கூகுள் நிறுவனம் புது அப்டேட்டாக வெளியிட்டுள்ளது.

    இதுதவிர சுங்கச்சாவடிகளை தவிர்க்க விரும்புவோர்க்கு வேறு பாதையை காட்டும் புதிய அம்சமும் தற்போதைய அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய அப்டேட்டை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். விரைவில் இதர நாடுகளுக்கும் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. 

    • அமேசான் பயர் டிவி ஸ்டிக் உடன் கூடிய புதிய அலெக்ஸா வாய்ஸ் ரிமோட் லைட்டின் விலை ரூ.2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    • தற்போதைய மாடலில் கூடுதலாக 8 ஜிபி மெமரி சேர்க்கப்பட்டுள்ளது.

    அமேசான் பயர் டிவி ஸ்டிக் தற்போது புதிய அலெக்ஸா வாய்ஸ் ரிமோட் லைட் உடன் இந்தியாவில் லாஞ்ச் ஆகி உள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரிமோட்டில் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற ஆப்புகளையும் உடனடியாக ஓப்பன் செய்யக்கூடிய வகையில் பிரத்யேகமான பட்டன்களும் இடம்பெற்றுள்ளன.

    அமேசான் பயர் டிவி ஸ்டிக் உடன் கூடிய புதிய அலெக்ஸா வாய்ஸ் ரிமோட் லைட்டின் விலை ரூ.2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒரிஜினல் அமேசான் பயர் டிவி ஸ்டிக்கிற்கும் தற்போது வெளியிடப்பட்டுள்ள புது மாடலுக்கு பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. தற்போதைய மாடலில் கூடுதலாக 8 ஜிபி மெமரி சேர்க்கப்பட்டுள்ளது.


    இதில் புளூடூத் கனெக்டிவிட்டியும் உள்ளது. பேட்டரி இன்றி 42.5 கிராம் எடை உள்ளது. இது முந்தைய மாடலை விட எடை குறைவானது. இதனுடன் வரும் ரிமோட்டில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், அமேசான் மியூசிக் ஆகிய ஆப்புகளுக்கு தனித்தனியாக பட்டன்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் அந்தந்த ஆப்புகளை நேரடியாக ஓபன் செய்ய முடியும்.

    • M1 பிராசசரில் உள்ள பாதுகாப்பு குறைபட்டிற்கு பேக்மேன் என பெயரிட்டுள்ளனர்.
    • இந்த பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிளின் M1 சீரிஸ் சிலிக்கான் புராசசர்கள் அதன் மேக் மினி மற்றும் மேக் புக் ஆகியவற்றில் இருப்பது மட்டுமல்லாமல் நிறுவனத்தின் ஐபேடுகளிலும் உள்ளது. அவற்றின், SoC இல் உள்ள இணையப் பாதுகாப்பு பாதிப்பு பல நவீன ஆப்பிள் தயாரிப்புகள் பாதிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

    ஆப்பிள் WWDC 2022 இல் நிறுவனத்தின் புதிய M2 சிலிக்கான் புராசசர் அறிவித்த பிறகு, ஆப்பிள் M1 சிலிக்கான் இணையப் பாதுகாப்புத் துறையில் சமரசம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அதுமட்டுமின்றி MIT ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்துள்ளனர். சாப்ட்வேர் அப்டேட் மூலம் இந்த பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.


    M1 பிராசசரில் உள்ள பாதுகாப்பு குறைபட்டிற்கு பேக்மேன் என பெயரிட்டுள்ளனர். M1 பிராசசரின் பாயிண்டர் அங்கீகாரக் குறியீடு (PAC) பாதுகாப்பு அமைப்பை மீறுவதனால், M1 இல் உள்ள பாதுகாப்புப் பாதிப்பிற்கு "PACMAN" என்று பெயரிடப்பட்டது.

    பாயிண்டர் அங்கீகாரக் குறியீடு என்பது ஒரு பாதுகாப்பு அம்சம், குறிப்பாக CPU ஐப் பாதுகாக்க உதவும் ஒரு பாதுகாப்பு அம்சமாகும். இதுதவிர பாயிண்டர்கள் மெமரி அட்ரஸ்களையும் சேமிக்கின்றன, MIT நடத்திய ஆய்வில் "PACMAN" வெற்றிகரமாக பாயின்டர் அங்கீகார குறியீடுகளை கண்டறிவதோடு இது ஹேக்கர்களுக்கும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

    • போட் ஏர்டோப்ஸ் 191G க்கு அந்நிறுவனம் 1 வருட வாரண்டியும் வழங்குகிறது.
    • வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் சிரி, கூகுள் ஆசிஸ்டண்ட் போன்றவற்றின் வாய்ஸ் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது.

    போட் ஏர்டோப்ஸ் 191G TWS என்கிற கேமிங் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போட் நிறுவனத்தின் சமீபத்திய கேமிங் TWS இயர்பட்ஸுகள் மலிவு விலையில் வருகின்றன, மேலும் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் போட்-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விற்பனைக்கு கிடைக்கிறது. போட் ஏர்டோப்ஸ் 191G இயர்பட்ஸின் முன்பகுதி டிரான்ஸ்பரண்ட்டாக உள்ளது.

    அதேபோல் ஆடம்பரமான கேமிங் கேஸும் கொண்டிருக்கிரது. இயர்பட்கள் மற்றும் கேஸ் இரண்டும் எல்இடி ஒளியைக் கொண்டுள்ளது. போட் ஏர்டோப்ஸ் 191G க்கு அந்நிறுவனம் 1 வருட வாரண்டியும் வழங்குகிறது. வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் சிரி, கூகுள் ஆசிஸ்டண்ட் போன்றவற்றின் வாய்ஸ் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு இயர்பட்டும், 10மிமீ டிரைவர், ஐபிஎக்ஸ் 5 ரேட்டிங், புளூடூத் வி 5.2 மற்றும் 40 mAh பேட்டரியுடன் கிடைக்கிறது.


    இந்தியாவில் இதன் விலை ரூ.1,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கிரே, ரெட், புளூ, பிளாக் என நான்கு கலர் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணிநேரம் வரை தாக்குப்பிடிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் முழுமையாக சார்ஜ் ஆக 30 முதல் 45 நிமிடம் வரை ஆகுமாம். சார்ஜ் செய்துகொள்வதற்காக டைப் C யுஎஸ்பி போர்ட்டும் இதன் கேஸில் உள்ளது.

    • புதிய OLED மானிட்டர் 31.5 இன்ச் மற்றும் 27 இன்ச் என இரண்டு வெவ்வேறு திரை அளவுகளைக் கொண்டுவருகிறது.
    • எல்ஜியின் புதிய அல்ட்ராஃபைன் டிஸ்ப்ளே OLED ப்ரோ மானிட்டர்களின் ஆரம்ப விலை 1 லட்சத்து 99 ஆயிரத்து 999 ரூபாயாம்.

    எல்.ஜி.யின் OLED பேனல்கள் சந்தையில் சிறந்த படத் தரத்தை வழங்குகின்றன. தற்போது அந்நிறுவனம் உயர்தர OLED டிஸ்ப்ளேக்களுடன் கூடிய இரண்டு புதிய மானிட்டர்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இரண்டு திரை அளவுகளில் வெளியிடப்பட்ட, எல்ஜியின் புதிய அல்ட்ராஃபைன் டிஸ்ப்ளே OLED ப்ரோ மானிட்டர்களின் ஆரம்ப விலை 1 லட்சத்து 99 ஆயிரத்து 999 ரூபாயாம்.

    புதிய OLED மானிட்டர் 31.5 இன்ச் மற்றும் 27 இன்ச் என இரண்டு வெவ்வேறு திரை அளவுகளைக் கொண்டுவருகிறது. இரண்டுமே சிறந்த 1M: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ கொண்ட 4K OLED மானிட்டர்கள். அல்ட்ராஃபைன் OLED ப்ரோ மானிட்டர்கள் ஒவ்வொரு பிக்சலையும் சரிசெய்யும்போதும் துல்லியமான படங்களை வழங்கும் அம்சத்தை கொண்டுள்ளது.


    எல்ஜி அல்ட்ராஃபைன் டிஸ்ப்ளே OLED ஆனது USB டைப்-சி (90W வரை பவர் டெலிவரி), 2 x டிஸ்ப்ளே போர்ட்கள், 3 x USB போர்ட்கள் மற்றும் இணைப்பிற்காக HDMI போர்ட் ஆகியவற்றை வழங்குகிறது. 

    • ஸ்மார்ட் டிவி விற்பனையில் முதல் இரண்டு இடத்தை சியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் பிடித்துள்ளன.
    • எல்ஜி, ஒன்பிளஸ், சோனி ஆகிய நிறுவனங்கள் முறையே 3, 4 மற்றும் 5 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.

    இந்தியாவில் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்மார்ட் டிவி விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 14.3 மார்க்கெட் ஷேர் உடன் சியோமி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக 13.1 சதவீத ஷேர் உடன் சாம்சங் நிறுவனம் 2வது இடத்தை பிடித்துள்ளது.

    முறையே 3, 4 மற்றும் 5 ஆகிய இடங்களை எல்ஜி, ஒன்பிளஸ், சோனி ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன. இது 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விலை மதிப்புள்ள டிவிகள் தான் அதிகம் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 


    குறிப்பாக ஆன்லைனை விட ஆஃப்லைனில் தான் மக்கள் அதிகளவில் ஸ்மார்ட் டிவிக்களை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 43 இன்சிற்கு மேல் உள்ள டிவிகளை தான் மக்கள் அதிகளவு விரும்பி வாங்குவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

    • ZEB-BT800RUF-ஆனது வடிவமைப்பு மற்றும் மேம்பாடு முதல் உற்பத்தி வரை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு தயாரிப்பாகும்.
    • வயர் கனெக்ஷன் இல்லாமல் நேரடியாக ப்ளூடூத் மூலமாக இந்த ஸ்பீக்கரில் ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் லைஃப் ஸ்டைல் ஆக்ஸஸரீஸ் பிராண்டான Zebronics, தற்போது மேட்-இன்-இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட டவர் ஸ்பீக்கரான ZEB-BT800RUF-ஐ அறிமுகம் செய்துள்ளது. அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள டவர் ஸ்பீக்கரான இது வயருடன் கூடிய மைக்குடன் விற்பனைக்கு வருகிறது. ZEB-BT800RUF-ஆனது வடிவமைப்பு மற்றும் மேம்பாடு முதல் உற்பத்தி வரை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு தயாரிப்பாகும்.

    ZEB-BT800RUF டவர் ஸ்பீக்கரானது, வீட்டில் நடக்கக்கூடிய பார்ட்டிகள் மற்றும் சந்திப்புகளுக்கு மிகவும் பொருத்தமானது. இதன் குறைந்தபட்ச வடிவமைப்பு, சிறிதான அளவு இதனை அறையின் எந்த பகுதிக்கும் தூக்கிச் செல்லும் அளவுக்கு போதுமானதாக உள்ளது. இது கச்சிதமான அளவுடன் அழகாகவும் இருப்பதால் அறையில் இருக்கும் அலங்காரத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்.

    இந்த டவர் ஸ்பீக்கரானது இரண்டு டிரைவர்கள் மற்றும் ஒரு ஸப்வூஃப்பரிரை மேம்பட்ட இசை தரத்தை அளிப்பதற்காக கொண்டுள்ளது. மேம்பட்ட இசை அனுபவத்திற்காக இந்த டவர் ஸ்பீக்கரில் இரண்டு 3 இன்ச் ஃபுல் ரேஞ்ச் டிரைவர் & 5.3 இன்ச் ஸப்வூஃப்பர் கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கரில் அதிக கனெக்டிவிட்டி வசதிகளுடன் வருவதால் உங்களால் உங்களது இசையினை வயர் கனெக்ஷன் இல்லாமல் நேரடியாக ப்ளூடூத் மூலமாக ஸ்ட்ரீம் செய்ய முடியும்.



    USB/AUX போன்ற இன்புட் ஆப்ஷன்களுடன் வரக்கூடிய இந்த ஸ்பீக்கரானது ஒரு பிள்ட்-இன் FM ரேடியோவினையும் கொண்டுள்ளது. இந்த தயாரிப்பின் வெளியீட்டு விழாவில், Zebronics-இன் இயக்குனரான திரு. பிரதீப் தோஷி பேசுகையில், "இந்தியாவில் சிறந்த தரமான, உயர்தரமான ஒலிசாதன தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டுவர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்களது ZEB-BT800RUF டவர் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.

    இது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்புகளான "உள்ளூர் மக்களுக்கான குரல்" மற்றும் வேகமாக வளர்ந்து வரும் "ஆத்மநிர்பார் பாரத்" ஆகியவைற்றுடன் ஒத்துப்போகிறது. அன்புடன் வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டுவர நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம். ZEB-BT800RUF-ஆனது Amazon.in-இல் ஆஃப்பர் விலையில் ரூ. 5,099-க்கு கிடைக்கிறது" என அவர் கூறினார்.

    • ஹானர் வாட்ச் GS 3 மாடலின் விற்பனை அமேசான் தளத்தில் இன்று முதல் (ஜூன் 7) துவங்கி இருக்கிறது.
    • முழுமையாக சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை பயன்படுத்தக்கூடிய திறன் கொண்ட பேட்டரியுடன் இந்த ஹானர் வாட்ச் GS 3 உள்ளது.

    ஹானர் நிறுவனத்தின் GS 3 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. புதிய ஹானர் வாட்ச் GS 3 மாடலில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன குறிப்பாக இதன் டிஸ்பிளேவை பொருத்தவரை 1.43 இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் 3D வளைந்த கிளாஸ் உடன் இருக்கும். அதேபோல் 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட் மோடுகள், 10-க்கும் அதிகமான ப்ரோபஷனல் ஸ்போர்ட்ஸ் மோடுகள், 85 பிரத்யேக ஸ்போர்ட்ஸ் மோடுகள் உள்ளன. அத்துடன் 5ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும் இதில் உள்ளது.

    மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் புதிதாக 8 சேனல் PPG சென்சார் மாட்யுல் உள்ளது. இதுதவிர AI ஹார்ட் ரேட் சென்சார் இடம்பெற்றுள்ளது. அதேபோல் பயனர்களின் ஸ்லீப், ஸ்டிரெஸ் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் சென்சார்களும் இதில் இடம்பெற்று உள்ளன. மேலும் இதில் ப்ளூடூத் காலிங் அம்சமும் வழங்கப்படுகிறது. முழுமையாக சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை பயன்படுத்தக்கூடிய திறன் கொண்ட பேட்டரியுடன் இந்த ஹானர் வாட்ச் GS 3 உள்ளது.


    மேலும் 32MB ரேம், 4GB இண்டர்னல் மெமரி, கைரோஸ்கோப் சென்சார், அக்செல்லோமீட்டர் சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், ஏர் பிரெஷர் சென்சார், மைக்ரோபோன், ஸ்பீக்கர், ஆண்ட்ராய்டு 6 மற்றும் ஐ.ஓ.எஸ். 9 உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இதில் இடம்பெற்று உள்ளன.

    இந்த ஸ்மார்ட் வாட்ச் மிட்நைட் பிளாக், ஓசன் புளூ மற்றும் கிளாசிக் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஹானர் வாட்ச் GS 3 மாடலின் விலை இந்திய மதிப்புப்படி ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் இன்று முதல் (ஜூன் 7) துவங்கி இருக்கிறது. 

    • கூகுள் பிக்சல் வாட்ச் வருகிற அக்டோபர் மாதம் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    • கூகுள் பிக்சல் வாட்ச்சின் விலை, 300 முதல் 400 டாலராக விலை நிர்ணயம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

    பிக்சல் வாட்ச் எனப்படும் கூகுளின் முதல் ஸ்மார்ட்வாட்ச் குறித்து பல்வேறு வதந்திகள் இணையத்தில் உலா வந்த நிலையில், கடந்த மே மாதம் நடந்த கூகுள் நிகழ்வில் பிக்சல் வாட்ச் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கூகுளின் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், அந்த ஸ்மார்ட்வாட்சில் மேம்பட்ட அம்சங்கள் இருக்கும் எனவும் கூகுள் நிறுவனம் கூறியிருந்தது. WearOS 3.0 எனும் இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் அனைத்து விதமான சென்சார்களும் அடங்கிய பவர் பேக்டு ஸ்மார்ட்வாட்சாக இந்த பிக்சல் வாட்ச் இருக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது.


    இதுகுறித்த மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி கூகுள் பிக்சல் வாட்ச்சின் விலை, 300 முதல் 400 டாலராக விலை நிர்ணயம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. ஆப்பிள் வாட்ச் 7 சீரிஸ் மற்றும் சாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் 4 ஆகியவற்றுக்கு இது போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

    FCC வெளியிட்ட தகவலின் படி இதன் ஒரு மாடலில் ப்ளூடூத் மற்றும் வைஃபை கனெக்டிவிட்டி இருக்கும் என்றும், மற்றவை LTE சப்போர்ட் உடன் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் வாட்ச் வருகிற அக்டோபர் மாதம் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டைப் சி வகை சார்ஜிங் கேபிள் கொண்டு இந்த வாட்சை சார்ஜ் செய்யலாம் என்றும் இது ஒரு நாள் தாங்கக்கூடிய வகையில் தான் இதன் பேட்டரி வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு IAMAI எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு குறித்த உத்தரவை விமர்சித்துள்ளது.
    இந்த மாத இறுதியில் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்திய இணைய பாதுகாப்பு விதிகள் "நம்பிக்கையை விட அச்சத்தின் சூழலை" உருவாக்கும், உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு அரசாங்கத்தை எச்சரித்துள்ளது, விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு ஒரு வருட தாமதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

    பேஸ்புக், கூகுள் மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI), இந்த வாரம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு குறித்த உத்தரவை விமர்சித்துள்ளது.

    cyber

    மற்ற மாற்றங்களுக்கிடையில், இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவின் (CERT) உத்தரவின்படி, தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுபோன்ற சம்பவங்களைக் கவனித்த ஆறு மணி நேரத்திற்குள் தரவு மீறல்களைப் புகாரளிக்க வேண்டும் மற்றும் ஆறு மாதங்களுக்கு ஐடி மற்றும் தகவல் தொடர்பு பதிவுகளை பராமரிக்க வேண்டும் என அந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை 72 மணிநேரமாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. சர்வதேச அளவில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

    தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT), அமேசான் மற்றும் மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) போன்ற கிளவுட் சேவை வழங்குநர்களை, நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகும், குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு தங்கள் வாடிக்கையாளர்களின் பெயர்கள் மற்றும் IP முகவரிகளைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய உத்தரவுகள் "பெரிய" பாதிப்பை ஏற்படுத்தலாம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்ப்ட்டு உள்ளது.
    ×