search icon
என் மலர்tooltip icon

    கணினி

    அட்டகாசமான அம்சங்களுடன் தயாராகிறது கூகுளின் முதல் ஸ்மார்ட்வாட்ச்
    X

    அட்டகாசமான அம்சங்களுடன் தயாராகிறது கூகுளின் முதல் ஸ்மார்ட்வாட்ச்

    • கூகுள் பிக்சல் வாட்ச் வருகிற அக்டோபர் மாதம் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    • கூகுள் பிக்சல் வாட்ச்சின் விலை, 300 முதல் 400 டாலராக விலை நிர்ணயம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

    பிக்சல் வாட்ச் எனப்படும் கூகுளின் முதல் ஸ்மார்ட்வாட்ச் குறித்து பல்வேறு வதந்திகள் இணையத்தில் உலா வந்த நிலையில், கடந்த மே மாதம் நடந்த கூகுள் நிகழ்வில் பிக்சல் வாட்ச் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கூகுளின் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், அந்த ஸ்மார்ட்வாட்சில் மேம்பட்ட அம்சங்கள் இருக்கும் எனவும் கூகுள் நிறுவனம் கூறியிருந்தது. WearOS 3.0 எனும் இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் அனைத்து விதமான சென்சார்களும் அடங்கிய பவர் பேக்டு ஸ்மார்ட்வாட்சாக இந்த பிக்சல் வாட்ச் இருக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது.


    இதுகுறித்த மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி கூகுள் பிக்சல் வாட்ச்சின் விலை, 300 முதல் 400 டாலராக விலை நிர்ணயம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. ஆப்பிள் வாட்ச் 7 சீரிஸ் மற்றும் சாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் 4 ஆகியவற்றுக்கு இது போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

    FCC வெளியிட்ட தகவலின் படி இதன் ஒரு மாடலில் ப்ளூடூத் மற்றும் வைஃபை கனெக்டிவிட்டி இருக்கும் என்றும், மற்றவை LTE சப்போர்ட் உடன் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் வாட்ச் வருகிற அக்டோபர் மாதம் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டைப் சி வகை சார்ஜிங் கேபிள் கொண்டு இந்த வாட்சை சார்ஜ் செய்யலாம் என்றும் இது ஒரு நாள் தாங்கக்கூடிய வகையில் தான் இதன் பேட்டரி வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×