என் மலர்tooltip icon

    கணினி

    முதலில் நேவியர் நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள மூன்று தளங்களில் மட்டும் சுமார் 40 ரோபோக்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளன.
    கிளவுட் அடிப்படையில் இயங்கும் தன்னாட்சி ரோபோக்களுக்கான முதல் தனியார் 5ஜி வணிக நெட்வொர்க் சேவையை சாம்சங் நிறுவனம் கட்டமைத்துள்ளது. நேவியர் கிளவுட் நிறுவனத்துடன் இணைந்து தென் கொரியாவின் முதல் தனியார் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது சாம்சங் நிறுவனம். 

    நேவியர் நிறுவனத்தின் புதிய இரண்டாவது தலைமையகம் மற்றும் சாம்சங்கின் நெட்வொர்க் தீர்வு மையம் ஆகிய இடங்களில் இந்த கிளவுட் அடிப்படையிலான தன்னாட்சி மொபைல் ரோபோக்கள் இந்த மாதம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த புதிய சேவையானது, சியோலில் உள்ள நேவியரின் தலைமையகம் முழுவதும் பயணிக்க உள்ளது. அங்கு, பேக்கேஜ் டெலிவரி, காபி டெலிவரி மற்றும் ஊழியர்களுக்கு மதிய உணவு பெட்டி விநியோகம் ஆகியவற்றை வழங்க இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

    samsung

    1784 என்ற எண்ணை அழைத்தால் ரோபோவின் உதவி கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முதலில் நேவியர் நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள மூன்று தளங்களில் மட்டும் சுமார் 40 ரோபோக்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள், 36-மாடிகள் கொண்ட வானளாவிய கட்டிடத்தில் நூற்றுக்கணக்கான ரோபோக்களை பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டு உள்ளனர்.

    அனைத்து ரோபோக்களும் கிளவுட் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளன, அவை தனித்தனியாக செயல்படும் வண்ணம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரோபோக்கள் அனைத்தும் சாம்சங்கின் 5ஜி நெட்வொர்க் மூலம் இயங்க உள்ளன. இதன்மூலம் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் ரோபோக்களை இயக்க முடியும் என கூறப்படுகிறது. 
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


    ஆப்பிள் நிறுவனம் ஐபேட் தயாரிப்பை சீனாவிலிருந்து வியட்நாமிற்கு மாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடல்களின் உற்பத்தியை சீனாவிற்கு வெளியே மாற்றுவது இதுவே முதல் முறை. ஆப்பிள் தனது ஐபாட் உற்பத்தியை வியட்நாமிற்கு மாற்றுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, ஷாங்காய் மற்றும் நாட்டின் பிற நகரங்களில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தான் என கூறப்படுகிறது.

    சப்ளை தடைகளைத் தவிர்ப்பதற்காக அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகள் உள்ளிட்ட உதிரிபாகங்களினை கூடுதலாக  உருவாக்குமாறு ஆப்பிள் அதன் சப்ளையர்களைக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஷாங்காய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் வழக்கமான வணிகம் பாதிக்கின்றனவாம். அதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

     ஆப்பிள் ஐபேட்

    சில காலமாக, ஆப்பிள் நிறுவனம் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கப் பார்க்கிறது. அடுத்த சாத்தியமான சந்தைக்கு வியட்நாம் மிகவும் பொருத்தமான தேர்வாக உள்ளதால் அதன் உற்பத்தியை அங்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    வியட்நாம் சீனாவை விட ஆப்பிளின் சிறந்த தேர்வாக இருப்பதற்கு முதன்மைக் காரணம், ஐபேட் உள்ளிட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான உழைப்பு மற்றும் பிற வளங்களைப் பெறுவது எளிது என்பது தான்.

    புதிய சார்ஜிங் அடாப்டருடன், 200W வேகமான சார்ஜிங்கை விவோ நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவோ நிறுவனம் ஒரு புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது, இது 200W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக அந்நிறுவனம், 100W வேகமான சார்ஜிங்கை வழங்குவதில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்பட்டது, ஆனால் இப்போது, ​​ஒரு புதிய சார்ஜிங் அடாப்டருடன், 200W வேகமான சார்ஜிங்கை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     விவோ ஸ்மார்ட்போன்

    அந்நிறுவம் கடைசியாக வெளியிட்ட விவோ X80 pro எனும் ஃபிளாக்‌ஷிப் போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் மற்றும் குவாட் கேமரா அமைப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் 80W வேகமான சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வந்தது.  மேலும் இது 4,700mAh பேட்டரியைக் கொண்டிருந்தது. 

    6.78 இன்ச் தொடுதிரை, முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமராவுடன் வந்தது. பின்புறத்தில், இது 50MP முதன்மை சென்சார், 48MP, 12MP சென்சார் மற்றும் 8MP ஷூட்டர் என 4 கேமராக்களை கொண்டிருந்தது. இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வந்தது. இந்த போனின் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என்பது குறிப்பிடத்தக்கது.

    அமேஸ்பிட் GTS 2 நியூ வெர்ஷன் ஸ்மார்ட்வாட்ச், இந்தியாவில் ஜூன் 5ம்தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    அமேஸ்பிட் GTS 2 மினி நியூ வெர்ஷனை கடந்த மாதம் அறிமுகம் செய்திருந்த அமேஸ்பிட் நிறுவனம், சில வாரங்களுக்கு முன் ஜிடிஆர் 2 நியூ வெர்ஷன் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் அந்நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது. அந்த வகையில் GTS 2 நியூ வெர்ஷனை அடுத்த வாரம் இந்தியாவில் லாஞ்ச் செய்ய ஆயத்தமாகி வருகிறது.

    கடந்த 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட GTS 2 மாடலைப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்GTS 2 நியூ வெர்ஷன், பல்வேறு நிறங்களில் கிடைக்கும் வண்ணம் உள்ளது. அமேஸ்பிட் GTS 2 நியூ வெர்ஷன் ஸ்பேஸ் பிளாக் மற்றும் பெட்டல் பிங்க் ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜூன் 5ம்தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அமேஸ்பிட் GTS 2

    அம்சங்களை பொருத்தவரை அமேஸ்பிட் GTS 2 நியூ வெர்ஷனில் 1.65 இன்ச் AMOLED 341PPI ஸ்கிரீன் மற்றும் curved கிளாஸ் உடன் இதன் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 5.0 அல்லது ஐ.ஒ.எஸ். 10.0 சப்போர்ட் மற்றும் 90க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளை கொண்டுள்ளது. ஹார்ட் ரேட், ஸ்டெப் கவுண்ட், கலோரி கவுண்ட் கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்லீப் மற்றும் ஸ்டிரஸ் லெவலையும் கண்காணிக்கும்.

    இதுதவிர வாட்டர் ரெசிஸ்டன்ட், புளுடூத் 5.0, அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டன்ட், 6 நாட்கள் வரை நீடிக்கும் 246mAh பேட்டரி, ஜிபிஎஸ், புளுடூத் காலிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது. இதன் விலை jt. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக ஜியோ கேம் கண்ட்ரோலரை அறிமுகம் செய்து இருக்கிறது. இது 10 மீட்டர்கள் வரையிலான வயர்லெஸ் ரேன்ஜ் கொண்டிருக்கிறது.

    ஜியோ நிறுவனம் முற்றிலும் புதிய ஜியோ கேம் கண்ட்ரோலரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது வயர்லெஸ் கேமிங் கண்ட்ரோலர் ஆகும். இதில் நீண்ட பேக்கப் வழங்கும் ரிசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. கிளாசிக் தோற்றம் மற்றும் குறைந்த எடை கொண்டிருக்கிறது. 

    இதில் இரண்டு வைப்ரேஷன் மோட்டார்கள் மற்றும் இரண்டு பிரெஷர் பாயிண்ட் ட்ரிகர்கள் உள்ளன. இவை தலைசிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகின்றன. ப்ளூடூத் வசதி கொண்ட ஏராளமான ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் ஜியோ கேமிங் கண்ட்ரோலர் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வயர்லெஸ் கேமிங் கண்ட்ரோலர் 10 மீட்டர்கள் வரையிலான வயர்லெஸ் ரேன்ஜ் கொண்டுள்ளது.

     ஜியோ கேம் கண்ட்ரோலர்

    இந்த கேமிங் கணட்ரோலர் ஆண்ட்ராய்டு டேப்லெட், ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களுடன் இணைந்து வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், சிறப்பான கேமிங் அனுபவம் பெற இந்த கண்ட்ரோலரை ஜியோ செட் டாப் பாக்ஸ் கொண்டு பயன்படுத்த ஜியோ அறிவுறுத்துகிறது. ஜியோ செட் டாப் பாக்ஸ் 2019 ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ப்ளூடூத் 4.1 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஜியோ கேம் கண்ட்ரோலர் தற்போது ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. ஜியோ கேம் கண்ட்ரோலர் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கேம் கண்ட்ரோலருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. 

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அசத்தலான மூன்று ஜியோஃபை சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை மாதாந்திர டேட்டா பலன்களை வழங்குகின்றன.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மூன்று ஜியோஃபை சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 249, ரூ. 299 மற்றும் ரூ. 349 ஆகும். புது சலுகைகளுடன் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கான வேலிடிட்டி மற்றும் 50GB வரையிலான அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.

    இத்துடன் இத்துடன் ஜியோஃபை டாங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் டாங்கிலை வாடிக்கையாளர்கள் பயன்படித்தி முடித்தப் பின் திரும்ப வழங்க வேண்டும். இந்த சலுகை வியாபாரங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஜியோஃபை போஸ்ட்பெயிட் சலுகைகள் 18 மாதங்களுக்கு லாக்-இன் பிரீயட் முறையில் வழங்கப்படுகிறது.

     ஜியோஃபை

    அதாவது பயனர்கள் ஒரு முறை இந்த சலுகையை தேர்வு செய்தால் 18 மாதங்களுக்கு அதில் இருந்து வெளியேற முடியாது. ஜியோ வலைதள விவரங்களின் படி புதிய ஜியோஃபை புது போஸ்ட்பெயிட் சலுகைகள், டேட்டா பலன்களை மட்டுமே வழங்குகின்றன. இதில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. முதல் முறை இந்த சலுகைகளை தேர்வு செய்யும் போது ரூ. 200 செலுத்த வேண்டும்.

    புதிய ஜியோஃபை ரூ. 249 சலுகை மாதாந்திர வேலிடிட்டி மற்றும் 30GB டேட்டா வழங்குகிறது. இதனை பயனர்கள் 18 மாதங்களுக்கு வாங்கிக் கொள்ள முடியும். இதனுடன் ஜியோஃபை டாங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோஃபை ரூ. 299 சலுகை மாதாந்திர வேலிடிட்டி மற்றும் 40GB டேட்டா வழங்குகிறது. 

    ரூ. 349 ஜியோஃபை சலுகை மாதாந்திர வேலிடிட்டி மற்றும் 50GB டேட்டா வழங்குகிறது. மற்ற இரு சலுகைகளை போன்றே இதனுடன் பயன்படுத்தியதும் திரும்ப வழங்கும் வகையில் ஜியோஃபை டாங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது. 
    எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடல் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் புதிதாக எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S வாங்க இது சரியான தருணம் ஆகும்.


    எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடல் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டது. சமீபத்திய விலை குறைப்பின் படி எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S விலை தற்போது ரூ. 31 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் வங்கி சார்ந்த சலுகைகள் மற்றும் கூடுதல் தள்ளுபடிகளை சேர்க்கும் போது எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் S விலை மேலும் குறைய வாய்ப்புகள் உண்டு.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடல் தற்போது ரூ. 31 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் உண்மை விலை ரூ. 34 ஆயிரத்து 990 என்ற நிலையில், ப்ளிப்கார்ட் தளத்தில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடலுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     எக்ஸ்பாக்ஸ்

    இதோடு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது அதிகபட்சம் ரூ. 1,500 வரை கூடுதல் தள்ளுபடி, 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி மற்றும் 5 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடலில் மெல்லிய பாடி, வெலாசிட்டி ஆர்கிடெக்ச்சர் உள்ளது. இதில் 512GB NVMe SSD வழங்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடலுடன் எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் கண்ட்ரோலர் ஒன்றும் வழங்கப்படுகிறது. 

    இந்திய ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சாதனங்கள் பிராண்டு ஸ்வாட் ஏர்லிட் 005 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    ஸ்மார்ட் எலெக்டிரானிக் சாதனங்களை அறிமுகம் செய்யும் பிராண்டான ஸ்வாட் இந்திய சந்தையில் ஏர்லிட் 005 (AirLIT 005) பெயரில் புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஏர்லிட் 005 இயர்பட்ஸ் மாடலில் 10 மில்லிமீட்டர் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    வித்தியாசமான வடிவம் கொண்டு இருக்கும் புதிய ஸ்வாட் ஏர்லிட் 005 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நீண்ட நேரம் பயன்படுத்தினாலும், காதுகளுக்கு சோர்வை ஏற்படுத்தாது.

     ஸ்வாட் ஏர்லிட் 005

    ஸ்வாட் ஏர்லிட் 005 மாடலில் இன் இயர் ரக இயர்பட் மற்றும் சிலிகான் டிப்கள் உள்ளன. இந்த இயர்பட் IPX4 ஸ்வெட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி, ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, டச் கண்ட்ரோல் உள்ளது. இதை கொண்டு பாடல்களை மாற்றுவது, வால்யூம் அட்ஜஸ்ட் செய்வது மற்றும் அழைப்புகளை எளிமையாக மேற்கொள்ள முடியும். இந்த இயர்பட்ஸ் யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் கொண்டுள்ளது. 

    இதனை சார்ஜ் செய்தால் 5.5 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ்-ஐ சேர்க்கும் போது மொத்தத்தில் 12 மணி நேர பேக்கப் கிடைக்கும். ஸ்வாட் ஏர்லிட் 005 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக விலை ரூ. 899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ட்ரூக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 48 மணி நேர பிளேடைம் வழங்குகிறது.

    இந்திய சந்தையில் முன்னணி ஆட்யோ சாதனங்கள் உற்பத்தியாளராக விளங்கும் ட்ரூக் நிறுவனம் புதிய F1 இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக ட்ரூக் நிறுவனம் ட்ரூக் பட்ஸ் S2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய ட்ரூக் F1 இயர்பட்ஸ் மாடல் ப்ரோடெக்டிவ் கேஸ் மற்றும் சப்டைல் டிஜிட்டல் பேட்டரி ரீட்-அவுட் உள்ளது. இத்துடன் இன்ஸ்டண்ட் பேரிங், அதிவேக கனெக்டிவிட்டி வழங்கும் ப்ளூடூத் 5.3,, என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ்-இல் கேமிங் செய்வதற்கென பிரத்யேக மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ட்ரூக் பட்ஸ் F1

    இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 48 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது. மேலும் இதில் டேப் டு கண்ட்ரோல் மற்றும் ஹை பெடிலிட்டி ஆடியோ மற்றும் AAC கோடெக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. ட்ரூக் F1 இயர்பட்ஸ் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதில் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வசதி உள்ளது. 

    இந்தியாவில் புதிய ட்ரூக் பட்ஸ் F1 இயர்பட்ஸ் குறுகிய காலக்கட்டத்திற்கு ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின் இதன் விலை ரூ. 1,299 என மாறி விடும்.  
    டுனெஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கும் புது ஹெட்செட் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் சிர, கூகுள் அசிஸ்டண்ட் போன்ற சேவைகளை வழங்குகிறது.

    லைப்ஸ்டைல் சாதனங்கள் பிராண்டு டுனெஸ் இந்திய சந்தையில் பீட்ஸ் B60 என அழைக்கப்படும் ஓவர்ஹெட் ப்ளூடூத் ஹெட்செட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஹெட்செட் 40mm ஹெச்.டி. மேக்ஸ் பேஸ் டிரைவர், பேசிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம், நீண்ட நேர பயன்பாடுகளின் போதும் சவுகரிய அனுபவத்தை வழங்கும் குஷன்களை கொண்டிருக்கிறது. 

    புதிய டுனெஸ் பீட்ஸ் B60 மாடலில் 400mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 12 மணி நேரத்திற்கான பிளே டைம், 15 மணி நேரத்திற்கான மியூசிக் பிளே, 15 மணி நேரத்திற்கான டாக்டைம், மைக்ரோ எஸ்.டி.. எப்.எம்., IPX5 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, சிரி, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் ப்ளூடூத் 5.0 போன்ற அம்சங்கள் உள்ளன.

     டுனெஸ் பீட்ஸ் B660

    டுனெஸ் பீட்ஸ் B60 அம்சங்கள்:

    - 40mm HD MAXX பேஸ் டிரைவர்கள்
    - ப்ளூடூத் 5
    - மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்
    - எப்.எம். சப்போர்ட்
    - IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட்
    - 400mAh பேட்டரி
    - மைக்ரோ யு.எஸ்.பி. சார்ஜிங் 
    - 15 மணி நேர மியூசிக் பிளேபேக்
    - 15 மணி நேர டாக்டைம்

    டுனெஸ் பீட்ஸ் B60 மாடல் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,599 ஆகும். இதன் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் துவங்கி நடைபெற்று வருகிறது.
    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து கார்டு மூலம் பேமண்ட் ஏற்க தடை விதித்து உள்ளது. ரிசர்வ் வங்கி விதிமுறையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    பேமண்ட் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இந்திய வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை தங்களின் சர்வர்களில் சேமிக்கக் கூடாது என மத்திய ரிசர்வ் வங்கி 2020 ஆண்டு வாக்கில் உத்தரவிட்டு அதற்கான கால அவகாசத்தை வழங்கி இருந்தது. 

    இந்த நிலையில், கார்டு ஸ்டோரேஜ் மற்றும் டோக்கென் வழங்கும் விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட பரிந்துரைகளை ஏற்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் ஏற்றுக் கொள்வதை நிறுத்தி விட்டது. இது ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் புது சாதனங்கள் மற்றும் சேவைகளை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். 

    இதுமட்டுமின்றி இன்-ஆப் பர்சேஸ்களுக்கு பணம் செலுத்துவோர் ரொக்கம் தவிர்த்து யு.பி.ஐ. அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    “ஜூன் 1 ஆம் தேதி முதல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் சந்தா மற்றும் ஆப்பிள் சேவைகளுக்கு பணம் செலுத்த முடியாது,” என ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதோடு இந்திய வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்கள் இனி ஆப்பிள் சர்வர்களில் சேமிக்கப்படாது என்றும் அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. 
    ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் செயலி இயங்காமல் போகும் என தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த ஐ.ஓ.எஸ். வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும்.


    பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் அடிக்கடி தனது செயலியில் மாற்றங்களை ஏற்படுத்தி, புது அம்சங்கள் வழங்குவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. இதே போன்று செயலியில் அவ்வப்போது வழங்கப்படும் புது அம்சங்கள் பழைய ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகும் வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக சீரான இடைவெளியில் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வாட்ஸ்அப் இயங்குவதற்கான சப்போர்ட் நீக்கப்பட்டு வருகிறது. 

    அந்த வரிசையில், ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஐ.ஓ.எஸ். 11 கொண்டு இயங்கி வரும் ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5C மாடல்களுக்கான சப்போர்ட் அடுத்த சில மாதங்களில் நிறுத்தப்பட இருக்கிறது. இது பற்றிய தகவலை, வாட்ஸ்அப் அப்டேட் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் wabetainfo தளம் வெளியிட்டு உள்ளது. 

    வாட்ஸ்அப்
    Photo Courtesy: WABetaInfo

    அந்த வலைதள தகவல்களின்படி ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஐ.ஓ.எஸ். 11 கொண்ட ஐபோன்களில் வாட்ஸ்அப் சேவை அக்டோபர் 24, 2022 முதல் நிறுத்தப்பட்டு விடும் என ஸ்கிரீன்ஷாட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது பற்றிய தகவல் வாட்ஸ்அப் ஹெல்ப் செண்டர் வலைதள பக்கத்திலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

    அதன் படி, வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த ஐ.ஓ.எஸ். 12 மற்றும் அதன் பின் வெளியிடப்பட்ட வெர்ஷன்கள் சிறப்பானது, இதனை பிரந்துரைக்கிறோம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் ஐபோன் 5S, ஐபோன் 6 அல்லது ஐபோன் 6S போன்ற மாடல்களில் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த ஐ.ஓ.எஸ். 12 தளத்திற்கு அப்டேட் செய்வது அவசியமாகி இருக்கிறது. 
    ×