search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SWOTT"

    • ஸ்வாட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் இந்திய 10mm டிரைவர் மற்றும் 45ms லோ-லேடன்சி கேமிங் மோட் கொண்டிருக்கிறது.
    • சிலிகான் மூலம் மிக மென்மையாக உருவாக்கப்பட்டு இருப்பதால், இந்த இயர்போன் அனைவருக்கும் சவுகரியமாக இருக்கும்.

    ஸ்வாட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நெக்கான் 102 ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. ஸ்வாட் நெக்கான் 101 மாடலை தொடர்ந்து புதிய 102 நெக்பேண்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட் வியரபில்ஸ் பிரிவுக்காக ஸ்வாட் நிறுவனம் கிரிகெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை விளம்பர தூதராக நியமனம் செய்துள்ளது.

    புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன் 10mm டிரைவர் கொண்டிருக்கிறது. இது HD ஸ்டீரியோ சவுண்ட், புதுவிதமான பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் 45ms லோ-லேடன்சி கேமிங் மோட் உள்ளது. இது கேமிங் அனுபவத்தை மேம்படுத்திக் கொடுக்கும். டிசைனை பொருத்தவரை புது நெக்பேண்ட் இயர்போன் சிலிகான் மூலம் மிக மென்மையாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் காரணமாக நீண்ட நேர பயன்பாடுகளின் போதும், இந்த இயர்போன் எவ்வித அசவுகரியத்தையும் ஏற்படுத்தாது. இத்துடன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி மற்றும் எர்கோனோமிக் டிசைன் கொண்டிருக்கிறது. இவை அதிக நேரம் பயன்படுத்தும் போதும் சவுகரிய அனுபவத்தை வழங்கும். வலிமையான டிசைன் கொண்டிருப்பதால், உடற்பயிற்சிகளின் போதும் இந்த நெக்பேண்ட் இயர்போன் எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாது.

    புதிய நெக்பேண்ட் இயர்போனை 40 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். முழு சார்ஜ் செய்தால் இந்த இயர்போனை 40 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். இதன் பவர் பட்டனை இரண்டு நொடிகள் அழுத்திப்பிடித்தால் கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி சேவையை இயக்கலாம். இதன் இயர்பட்களில் காந்த சக்தி கொண்ட மெட்டல் உள்ளது. இத்துடன் ப்ளூடூத் 5 மற்றும் டூயல் பேரிங் வசதி உள்ளது.

    ஸ்வாட் நெக்கான் 102 ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன் பிளாக் மற்றும் சில்வர் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 899 ஆகும். விற்பனை அமேசான் மற்றும் ஸ்வாட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • ஸ்வாட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய ஸ்வாட் நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    ஸ்வாட் ஏர்லிட் 004 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியீட்டை தொடர்ந்து புதிதாக நெக்பேண்ட் ரக இயர்போனினை ஸ்வாட் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நெக்பேண்ட் இயர்போன் ஸ்வாட் நெக்கான் 101 என அழைக்கப்படுகிறது. இந்த நெக்பேண்ட் இயர்போன் டார்க் புளூ மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    இந்த இயர்போன் ஹெச்டி ஸ்டீரியோ சவுண்ட் வழங்குகிறது. இதில் உள்ள மென்மையான சிலிகான் காதுகளில் எவ்வித எரிச்சலையும் ஏற்படுத்தாது. நீண்ட நேர பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த இயர்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் IPX67 தர வாட்டர் ப்ரூப் வசதி, 55 மில்லிசெகண்ட் லேடன்சி வழங்குகிறது. இது கேமிங்கின் போதும் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும்.

    ஸ்வாட் நெக்கான் 101 நெக்பேண்ட் இயர்போனை 40 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு மியூசிக், அழைப்புகள் உள்ளிட்டவைகளை போனை பார்க்காமலேயே இயக்க முடியும். தலைசிறந்த டிசைன் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற வசதிகள் சௌகரியமான அனுபவத்தை வழங்குகின்றன.

    இதன் இயர்போன்கள் காந்தம் மூலம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கிறது. மேலும் இதில் ப்ளூடூத் 5.0 வசதி மற்றும் டூயல் பேரிங் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன்களில் 10mm டிரைவர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    • இந்திய நிறுவனமான ஸ்வாட் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்தியாவில் தனது சாதனங்களை விளம்பரப்படுத்த கிரிகெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை ஸ்வாட் நிறுவனம் நியமித்து இருக்கிறது.

    இந்திய ஸ்மார்ட்-வியபில் பிராண்டு ஸ்வாட் வயர்லெஸ் இயர்பட்ஸ் பிரிவில் புதிதாக ஏர்லிட் 004 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஏர்லிட் 004 தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. அன்றாட பணிகளில் கவனம் செலுத்துவோருக்கு ஏற்ற மியூசிக் வழங்க ஏதுவாக புது இயர்பட்ஸ் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    சமீபத்தில் ஸ்வாட் நிறுவனம் இந்தியாவில் தனது சாதனங்களை விளம்பரப்படுத்த இந்திய அணியின் பிரபல கிரிகெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை விளம்பர தூதராக நியமனம் செய்தது. இத்துடன் ஆர்மர் 007 பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலையும் ஸ்வாட் அறிமுகம் செய்து இருக்கிறது. இது ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.

    ஸ்வாட் ஏர்லிட் 004 இயர்பட்ஸ் காதுகளில் மிகவும் சவுகரிய அனுபவம் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் IPX4 தர ஸ்வெட் ப்ரூப் வசதி கொண்டிருக்கிறது. இதில் ப்ளூடூத் 5.0 வசதி உள்ளது. இதை கொண்டு பத்து மீட்டர்கள் தொலைவில் உள்ள சாதனங்களுடனும் இணைப்பில் இருக்க முடியும். ஏர்லிட் 004 இயர்பட்ஸ் உடன் காந்த வசதி கொண்ட சார்ஜர் வழங்கப்படுகிறது.

    இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேசில் 400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமைாக சார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் ஆகும். இதன் இயர்பட்களில் 40 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இத்துடன் 10 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள் உள்ளன. முன்னதாக ஸ்வாட் நிறுவனம் ஏர்லிட் 005 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.

    இந்திய சந்தையில் புதிய ஸ்வாட் ஏர்லிட் 004 இயர்பட்ஸ் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1099 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஸ்வாட் லைப்ஸ்டைல் மற்றும் அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது. இதோடு முன்னணி ஆப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

    இந்திய ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சாதனங்கள் பிராண்டு ஸ்வாட் ஏர்லிட் 005 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    ஸ்மார்ட் எலெக்டிரானிக் சாதனங்களை அறிமுகம் செய்யும் பிராண்டான ஸ்வாட் இந்திய சந்தையில் ஏர்லிட் 005 (AirLIT 005) பெயரில் புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஏர்லிட் 005 இயர்பட்ஸ் மாடலில் 10 மில்லிமீட்டர் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    வித்தியாசமான வடிவம் கொண்டு இருக்கும் புதிய ஸ்வாட் ஏர்லிட் 005 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நீண்ட நேரம் பயன்படுத்தினாலும், காதுகளுக்கு சோர்வை ஏற்படுத்தாது.

     ஸ்வாட் ஏர்லிட் 005

    ஸ்வாட் ஏர்லிட் 005 மாடலில் இன் இயர் ரக இயர்பட் மற்றும் சிலிகான் டிப்கள் உள்ளன. இந்த இயர்பட் IPX4 ஸ்வெட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி, ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, டச் கண்ட்ரோல் உள்ளது. இதை கொண்டு பாடல்களை மாற்றுவது, வால்யூம் அட்ஜஸ்ட் செய்வது மற்றும் அழைப்புகளை எளிமையாக மேற்கொள்ள முடியும். இந்த இயர்பட்ஸ் யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் கொண்டுள்ளது. 

    இதனை சார்ஜ் செய்தால் 5.5 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ்-ஐ சேர்க்கும் போது மொத்தத்தில் 12 மணி நேர பேக்கப் கிடைக்கும். ஸ்வாட் ஏர்லிட் 005 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக விலை ரூ. 899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ×