search icon
என் மலர்tooltip icon

    கணினி

    சியோமி பேண்ட் 7 இந்தியாவில் அறிமுகமாவது எப்போது?
    X

    சியோமி பேண்ட் 7 இந்தியாவில் அறிமுகமாவது எப்போது?

    • Mi பேண்ட் 7 மாடல் அதன் முந்தைய வெர்ஷன்களை போன்றே ஸ்டாண்டர்டு மற்றும் NFC என இரண்டு வெர்ஷன்களில் அறிமுகமாகி உள்ளது.
    • இந்த பேண்ட் பிளாக், புளூ, ஐவரி, ஆரஞ்ச் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.

    சியோமி பேண்ட் 7 மாடல் கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. உலக சந்தைகளில் விற்பனைக்கு வந்த இந்த பேண்ட் இன்னும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. அதன் இந்திய வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அறிவிக்காவிட்டாலும், சமீபத்தில் பிஐஎஸ் எனப்படும் பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ் எனப்படும் தரச் சான்று பெற அந்நிறுவனம் விண்ணப்பித்திருந்ததால் விரைவில் இது இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சாதனம் அதன் முந்தைய மாடலை போன்றே காட்சி அளிக்கிறது. Mi பேண்ட் 7 மாடல் அதன் முந்தைய வெர்ஷன்களை போன்றே ஸ்டாண்டர்டு மற்றும் NFC என இரண்டு வெர்ஷன்களில் அறிமுகமாகி உள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை சியோமி பேண்ட் 7 மாடலில் 1.62 இன்ச் AMOLED 192x490 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.


    இது முந்தைய சியோமி பேண்ட் 6 மாடலில் வழங்கப்பட்டு இருந்ததை விட 25 சதவீதம் பெரியது ஆகும். ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை டிராக் செய்ய இந்த பேண்ட் 7 மாடலில் ஏராளமான அம்சங்கள் மற்றும் பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இதில் SpO2, இதய துடிப்பு, ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் பல்வேறு உடல் நலன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த பேண்ட் 180 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 நாட்கள் வரை தாங்குமாம். இந்த பேண்ட் பிளாக், புளூ, ஐவரி, ஆரஞ்ச் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ.3 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    Next Story
    ×