என் மலர்
கணினி

சாப்ட்வேர் அப்டேட்டால் ஆப்பிள் ஐபேட் மினி 6 பயனர்களுக்கு ஏற்பட்ட சார்ஜிங் பிரச்சனை - சரிசெய்வது எப்படி?
- ஐபேட்OS 15.5 மூலம் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன.
- ஐபேட் மினி 6 பயனர்களுக்கு இந்த அப்டேட் மூலம் சார்ஜிங் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபேட் மினி 6 என்கிற டேப்லெட்டை அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதேபோல் அந்நிறுவனத்தின் சமீபத்திய சாப்ட்வேர் அப்டேட்டான ஐபேட்OS 15.5 மூலம் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஐபேட் மினி 6 பயனர்களுக்கு இந்த அப்டேட் மூலம் சார்ஜிங் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ஐபேட் OS 15.5 வெர்ஷனுக்கு அப்டேட் செய்த பயனர்கள் ஏராளமானோர் தங்களது ஐபேட் மினி 6ஐ சார்ஜ் செய்ய முடியவில்லை என தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. சாப்ட்வேர் பக்கினால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவி்த்துள்ளது.
இந்த பிரச்சனையை சரிசெய்ய விரைவில் ஐபேட் OS 15.6 பீட்டா வெர்ஷனை வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் அதுவரை இந்த பிரச்சனைக்கு தற்காலிக தீர்வாக அதனை ரீபூட் செய்து பயன்படுத்த அந்நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
Next Story






