search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ப்ளூடூத் காலிங் வசதியுடன் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்
    X

    ப்ளூடூத் காலிங் வசதியுடன் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

    • போட் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புது ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் மூலம் அழைப்புகளை பேசும் வசதி மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

    போட் நிறுவனம் ஸ்டார்ம் ப்ரோ கால் பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது. மேலும் 1.78 இன்ச் 368x448 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், 2.5D வளைந்த டிஸ்ப்ளே, மெட்டாலிக் பாடி மற்றும் இண்டர்சேன்ஜ் சிலிகான் ஸ்டிராப் கொண்டிருக்கிறது.

    பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் அம்சத்தை வழங்குகிறது. இத்துடன் 700-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், 24x7 இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் மாணிட்டரிங் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. மேலும் நேரலை கிரிகெட் ஸ்கோர்களை வழங்குகிறது.


    ஸ்டார்ம் ப்ரோ கால் ஸ்மார்ட்வாட்ச்-இல் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. இதில் உள்ள ASAP சார்ஜ் ஸ்மார்ட்வாட்ச்-ஐ 30 நிமிடங்களில் சார்ஜ் செய்து விடுகிறது. கூகுள் பிட் மற்றும் ஆப்பிள் ஹெல்த் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.

    இத்துடன் 100-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் பேஸ்கள், வானிலை விவரங்கள், கேமரா கண்ட்ரோல், கால், டெக்ஸ்ட் மற்றும் நோட்டிபிகேஷன்களை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் IP68 தர ரேட்டிங் கொண்டிருக்கிறது. போட் ஸ்டார்ம் ப்ரோ கால் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3 ஆயிரத்து 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    Next Story
    ×