search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி கணக்கு முடக்கம்"

    • காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
    • தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமாக செயல்பட வேண்டும்

    காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் முடக்கப்பட்டுள்ளது அந்த கட்சிக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பேசிய சோனியா காந்தி, "ஒருபுறம், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பெரும் தொகை நன்கொடையாக வந்துள்ளது. மறுபுறம், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சிக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, தேர்தல் செலவுகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சவாலான சூழ்நிலையிலும் தேர்தல் பரப்புரையை திறம்பட செய்ய எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம்

    இது நமது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும். ஜனநாயகத்தை முடக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என்று அவர் பேசினார்.

    பின்னர் பேசிய கார்கே, "தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமாக செயல்பட வேண்டும். நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் களம் சமமாக இருக்க வேண்டும். கணக்கில் வராத கட்டுக் கட்டான பணம் பாஜகவுக்கு சென்றுள்ளது. ஒரே கட்சி எல்லாவற்றையும் கைக்குள் வைத்துக்கொள்ள முயற்சித்து செயல்படுகிறது.

    தேர்தல் பத்திரத்தின் மூலம், 55% நிதியை பாஜக பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெறும் 11% மட்டுமே பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான், எங்கள் வங்கி கணக்குகளையும் முடக்கி, அபாயகரமான விளையாட்டை பாஜக விளையாடியிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

    • சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது.
    • மேல்முறையீடு செய்த காங்கிரசின் மனுவை தீர்ப்பாயம் இன்று நிராகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாத இடையில் நடைபெறவுள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பை இன்னும் சில வாரங்களுக்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றின் கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொள்ள மும்முரமாக பணியாற்றி வருகின்றன.

    கடந்த 2018-ம் ஆண்டில் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த தீர்ப்பை காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் வரவேற்றன.

    இதற்கிடையே, பொதுமக்களிடமிருந்து நிதி பெறுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த வங்கி கணக்குகள், காங்கிரஸ் கட்சியின் கணக்கு, இளைஞர் காங்கிரசின் கணக்கு உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்த முடக்கத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.

    இதுகுறித்து வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி முறையிட்டது. அதன்பின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டன.

    இந்நிலையில், வருமான வரித்துறையின் நடவடிக்கையை நிறுத்தக்கோரி தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று நிராகரிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

    • நகைக் கடை சார்பில் அதிக வட்டி தருவதாக கவர்ச்சி கரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
    • நகைக்கடை உரிமையாளர்கள் ராபின், ஆல்வின் ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை நொளம்பூரில் இயங்கி வந்த ஏ.ஆர்.டி. நகைக் கடை சார்பில் அதிக வட்டி தருவதாக கவர்ச்சி கரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ரூ.1 லட்சம் பணம் கட்டினால் ஒவ்வொரு வாரமும் ரூ.4 ஆயிரம் வட்டி தருவதாக கூறினார்கள். இதை நம்பி 400-க்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் கூறியது போல் வட்டி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றினார்கள். இதையடுத்து பணம் கட்டி ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த நகைக்கடை உரிமையாளர்கள் ராபின், ஆல்வின் ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஏ.ஆர்.டி. நகைக்கடை உரிமையாளர்கள் ராபின், ஆல்வின் ஆகியோரது வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர். அவர்களது வங்கி கணக்கில் இருந்த ரூ.78 லட்சம் பணம் முடக்கப்பட்டுள்ளது.

    • கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கண்டறியப்பட்ட 22 கிராமங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
    • 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 15 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கஞ்சா விற்பனை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய 5 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. இதில் ஊத்தங்கரை உட்கோட்டத்தில் 59 கிராமங்களும், 268 குக்கிராமங்களும், பர்கூர் கோட்டத்தில் 51 கிராமங்களும், 242 குக்கிராமங்களும் உள்ளன.

    அதேபோன்று கிருஷ்ணகிரியில் 82 கிராமங்களும், 378 குக்கிராமங்களும், ஓசூரில் 95 கிராமங்களும், 314 குக்கிராமங்களும், தேன்கனிக்கோட்டையில் 92 கிராமங்களும், 622 குக்கிராமங்களும் உள்ளன. கடந்த நவம்பர் மாதம் தனிப்பிரிவு, சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையத்தில் சேகரித்த தகவல்படி ஊத்தங்கரை உட்கோட்டத்தில் எந்த கிராமத்திலும் கஞ்சா விற்பனை இல்லை. பர்கூர், கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் தலா 5 கிராமங்களிலும், ஓசூர் உட்கோட்டத்தில் 18 கிராமங்களிலும், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் 22 கிராமத்தில் குறைந்த அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் கஞ்சா விற்பனை இல்லை. கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கண்டறியப்பட்ட குருவிநாயனப்பள்ளி, வரமலை குண்டா உள்ளிட்ட 31 கிராமங்களிலும் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ேமலும் குறைந்த அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கண்டறியப்பட்ட 22 கிராமங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது.

    இந்த கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதின் காரணமாக 20 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 81 பேர் கைது செய்யப்பட்டனர். 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 15 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. கஞ்சா விற்பனையை தடுக்க இந்த மாதம் 112 பேர் மீது வரலாற்று பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.

    தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. கஞ்சா விற்றால் பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை 94454 37356 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் போலீசார் கஞ்சா ஒழிப்பு வேட்டையில் 13 ஆயிரத்து 491 கஞ்சா வியாபாரிகள் சிக்கினர்.
    • கடந்த ஆண்டில் 9906 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டு சென்னையில் போலீசார் கஞ்சா ஒழிப்பு வேட்டையில் 13 ஆயிரத்து 491 கஞ்சா வியாபாரிகள் சிக்கினர். 4141 கஞ்சா வியாபாரிகள் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. கடந்த ஆண்டில் 9906 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 4 டன்  போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மாநில காவல் துறையில் ரவுடி வேட்டை நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். 3949 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் லெக்குசாமி, அஜித்குமாரை மறித்து சோதனையிட்டபோது 21 கிலோ கஞ்சா கடத்துவது தெரியவந்தது.
    • லெக்குசாமி, அஜித்குமாரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடியை சேர்ந்த லெக்குசாமி (வயது 24) என்பவர் அடிக்கடி கஞ்சா கடத்தி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது அருப்புக்கோட்டை போலீஸ் நிலையத்தில் 8 வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் லெக்குசாமி தனது கூட்டாளி சின்ன புளியம்பட்டியை சேர்ந்த அஜித்குமார் (24) என்பவருடன் கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி சென்றார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் லெக்குசாமி, அஜித்குமாரை மறித்து சோதனையிட்டபோது 21 கிலோ கஞ்சா கடத்துவது தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி தொடர்ந்து கஞ்சா கடத்தியதாக அருப்புக்கோட்டையில் உள்ள லெக்குசாமியின் அரசு வங்கி கணக்கை முடக்கம் செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி லெக்குசாமியின் வங்கி கணக்கில் உள்ள ரூ. 7 லட்சத்து 32 ஆயிரத்து 708-ஐ போலீசார் முடக்கம் செய்தனர்.

    ×