search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்பனை செய்த 15 பேரின் வங்கி கணக்கு முடக்கம்
    X

    கஞ்சா விற்பனை செய்த 15 பேரின் வங்கி கணக்கு முடக்கம்

    • கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கண்டறியப்பட்ட 22 கிராமங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
    • 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 15 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கஞ்சா விற்பனை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய 5 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. இதில் ஊத்தங்கரை உட்கோட்டத்தில் 59 கிராமங்களும், 268 குக்கிராமங்களும், பர்கூர் கோட்டத்தில் 51 கிராமங்களும், 242 குக்கிராமங்களும் உள்ளன.

    அதேபோன்று கிருஷ்ணகிரியில் 82 கிராமங்களும், 378 குக்கிராமங்களும், ஓசூரில் 95 கிராமங்களும், 314 குக்கிராமங்களும், தேன்கனிக்கோட்டையில் 92 கிராமங்களும், 622 குக்கிராமங்களும் உள்ளன. கடந்த நவம்பர் மாதம் தனிப்பிரிவு, சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையத்தில் சேகரித்த தகவல்படி ஊத்தங்கரை உட்கோட்டத்தில் எந்த கிராமத்திலும் கஞ்சா விற்பனை இல்லை. பர்கூர், கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் தலா 5 கிராமங்களிலும், ஓசூர் உட்கோட்டத்தில் 18 கிராமங்களிலும், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் 22 கிராமத்தில் குறைந்த அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் கஞ்சா விற்பனை இல்லை. கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கண்டறியப்பட்ட குருவிநாயனப்பள்ளி, வரமலை குண்டா உள்ளிட்ட 31 கிராமங்களிலும் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ேமலும் குறைந்த அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கண்டறியப்பட்ட 22 கிராமங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது.

    இந்த கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதின் காரணமாக 20 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 81 பேர் கைது செய்யப்பட்டனர். 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 15 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. கஞ்சா விற்பனையை தடுக்க இந்த மாதம் 112 பேர் மீது வரலாற்று பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.

    தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. கஞ்சா விற்றால் பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை 94454 37356 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×