search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிப்பூதியம்"

    • ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 105 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
    • பத்ம விருது பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.25,000 மதிப்பூதியம் அளிக்கப்பட உள்ளது.

    புவனேஸ்வர்:

    கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 90 பேர் பத்ம ஸ்ரீ, 11 பேர் பத்ம பூஷண் மற்றும் 4 பேர் பத்ம விபூஷண் என மொத்தம் 105 பேர் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், பத்ம விருது பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இந்த நிதி அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே தெலுங்கானா அரசு பத்ம விருது பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக அரசு அறிவித்தபடி துறையூர் நகராட்சி கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட்டது
    • முதல் மதிப்பூதியத்தை துறையூர் நகராட்சி கமிஷனர் நாராயணன் வழங்கினார்

    துறையூர்,

    தமிழக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போதைய திமுக அரசு, நகர்மன்ற தலைவருக்கு ரூபாய் 15,000, துணைத் தலைவருக்கு பத்தாயிரம், நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் மதிப்பூதியமாக வழங்க உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக துறையூர் நகர மன்ற கூட்ட அரங்கில், மதிப்பூதியம் வழங்குவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது நகராட்சி ஆணையர் (பொ) நாராயணன், தமிழக அரசால் வழங்கப்பட்ட மதிப்பூதியத்திற்கான காசோலைகளை நகர மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மதிப்பூதியத்திற்கான காசோலைகளைப் பெற்றுக் கொண்ட நகர்மன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் 21 வாா்டுகளில் உள்ள அடிப்படைத் தேவைகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஊட்டி,

    கூடலூா் நகரமன்ற மாதாந்திர கூட்டம் தலைவா் பரிமளா தலைமையில் நடந்தது. துணைத்தலைவா் சிவராஜ், நகராட்சி கமிஷனர் பிரான்சிஸ்சேவியா் முன்னிலை வகித்தனா். இந்த கூட்டத்தில் 21 வாா்டுகளில் உள்ள அடிப்படைத் தேவைகள் குறித்து 59 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழக முதல்வா் அறிவித்தபடி கூடலூர் நகா்மன்ற தலைவருக்கு ரூ. 15 ஆயிரம், துணைத் தலைவருக்கு ரூ.10 ஆயிரம், 19 உறுப்பினா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பூதியத்தை கமிஷனர் பிரான்சிஸ்சேவியா் வழங்கினாா். 

    • மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
    • விடுபட்ட பாதாள சாக்கடை பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்காொள்ள வேண்டும்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடைபெற்றது. மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தெரு பலகைகள் அமைப்பது, திருவொற்றியூர் மண்டல அலுவலக மேல்தளத்தை ரூ. 75 லட்சம் செலவில் புதுப்பித்தல், நெட்டுகுப்பம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், ரூ. 15.46 லட்சம் செலவில் மேற்கூரை அகற்றுதல் மற்றும் கட்டமைக்கும் பணி உட்பட 33 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேலும் கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்குவதாக அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கவுன்சிலர்களின் கேள்விக்கு பதிலளித்து மண்டல குழு தலைவர் தனியரசு பேசியதாவது:-

    குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையை சரி செய்ய வேண்டும். வார்டுகளுக்கு, தனி உதவி பொறியாளர்கள் நியமிக்கப் படுவார்கள். விடுபட்ட பாதாள சாக்கடை பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்காொள்ள வேண்டும்.

    திருவொற்றியூர் மார்க்கெட் 8 கோடி ரூபாய் செலவில் 2 அடுக்குமாடியுடன் நவீனப்படுத்தப்படும். அதிகாரிகள், கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும்.
    • பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.2,500 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர்கள், மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம், துணை மேயர்களுக்கு ரூ.15 ஆயிரம், மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், நகராட்சி மன்ற தலைவருக்கு ரூ.15 ஆயிரம், துணைத் தலைவருக்கு ரூ.10 ஆயிரம், நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.

    பேரூராட்சித் தலைவருக்கு ரூ.10 ஆயிரம், துணைத் தலைவருக்கு ரூ.5 ஆயிரம், பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.2,500 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×