கூடலூா் நகரசபை கூட்டத்தில் தலைவர்- கவுன்சிலர்களுக்கு அரசின் மதிப்பூதியம்

கூட்டத்தில் 21 வாா்டுகளில் உள்ள அடிப்படைத் தேவைகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூடலூா் நகரசபை கூட்டத்தில்  தலைவர்- கவுன்சிலர்களுக்கு அரசின் மதிப்பூதியம்
Published on

ஊட்டி,

கூடலூா் நகரமன்ற மாதாந்திர கூட்டம் தலைவா் பரிமளா தலைமையில் நடந்தது. துணைத்தலைவா் சிவராஜ், நகராட்சி கமிஷனர் பிரான்சிஸ்சேவியா் முன்னிலை வகித்தனா். இந்த கூட்டத்தில் 21 வாா்டுகளில் உள்ள அடிப்படைத் தேவைகள் குறித்து 59 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழக முதல்வா் அறிவித்தபடி கூடலூர் நகா்மன்ற தலைவருக்கு ரூ. 15 ஆயிரம், துணைத் தலைவருக்கு ரூ.10 ஆயிரம், 19 உறுப்பினா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பூதியத்தை கமிஷனர் பிரான்சிஸ்சேவியா் வழங்கினாா். 

X

Maalai Malar
www.maalaimalar.com