search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசு தொகை"

    • பல தமிழ் எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளனர்.
    • சாகித்ய அகாடமி விருதுடன் ரூ.1,00,000 வழங்கப்படுகிறது.

    சாகித்ய அகாடமி விருது என்பது இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் கௌரவமான விருது. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட இலக்கியத் தகுதியின் மிகச் சிறந்த புத்தகங்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

    சாகித்ய அகாடமியானது 1954 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி இந்திய அரசால் இலக்கிய உரையாடல், வெளியீடு மற்றும் ஊக்குவிப்புக்கான மைய நிறுவனமாக தொடங்கப்பட்டது. ஆங்கிலம் உட்பட 24 இந்திய மொழிகளில் இலக்கிய விருதாக சாகித்ய அகாடமி வழங்கப்படுகிறது.

    இந்த விருதை தமிழில் பல எழுத்தாளர்கள் ஒவ்வொரு வருடமும் பெறுகிறார்கள். கல்கி, பாரதிதாசன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எஸ்.செல்லப்பா, பிரபஞ்சன் மற்றும் பல தமிழ் எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளனர்.

    மேலும், சாகித்ய அகாடமி விருதுடன் சேர்த்து 2009-லிருந்து ரொக்கப் பரிசாக ரூ.1,00,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக பரிசுத் தொகையில் மாற்றம் இல்லாமல் அதே ரூ.1,00,000 வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே, சாகித்ய அகாடமி விருதுடன் வழங்கப்படும் பரிசுத் தொகையை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • பரிசு பெற்றவர் எந்த ஏஜன்சியில் இருந்து லாட்டரியை வாங்கினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
    • குழுவின் தீவிர விசாரணைக்கு பிறகே பரிசுத் தொகை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள அரசு லாட்டரித்துறை சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் பரிசு குலுக்கல் நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசான ரூ.25 கோடி, தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த பாண்டியராஜன் உள்பட 4 பேர் வாங்கிய டிக்கெட்டுக்கு கிடைத்தது.

    இது உறுதி செய்யப்பட்ட நிலையில் பரிசு பணத்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பரிசுக்கான லாட்டரி சீட்டு பிளாக்கில் தமிழகத்தில் விற்கப்பட்டுள்ளது. அதனை தான் வாங்கி உள்ளனர். எனவே அவர்களுக்கு பரிசு தொகை வழங்கக்கூடாது என்று தமிழகத்தை சேர்ந்த அம்புரோஸ் என்பவர், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் பரிசு பணத்தை சமூக சேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து கேரள லாட்டரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், சட்டப்படி கேரள லாட்டரியை மற்ற மாநிலங்களில் விற்க முடியாது. பரிசு வென்றவர் கேரளா வருவதற்கான காரணங்களும் சரிபார்க்கப்படும். பரிசு பெற்றவர் எந்த ஏஜன்சியில் இருந்து லாட்டரியை வாங்கினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.

    லாட்டரி துறை இணை இயக்குநர், நிதி அதிகாரி உள்ளிட்ட 7 பேர் கொண்ட சிறப்பு குழு விசாரணை நடத்திய பிறகே பரிசுத் தொகை வழங்கப்படும். தற்போது பம்பர் லாட்டரி பரிசுச்சீட்டு குறித்து புகார் வந்துள்ளதால், இந்த குழுவின் தீவிர விசாரணைக்கு பிறகே பரிசுத் தொகை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் பஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் நாயுடு பேட்டையில் பஸ்சை மீட்டனர்.
    • 94910-86022, 94407-96770 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.2 கோடி மதிப்பிலான இலவச மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 24-ந் தேதி இரவு தேவஸ்தானத்துக்கு சொந்தமான மின்சார பஸ்சை டிரைவர் திருமலை பஸ் நிலையத்தில் நிறுத்தினார். அவர் ஓய்வு அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

    அதிகாலை வந்த மர்ம நபர் ஒருவர் பஸ்சை திருடிக்கொண்டு திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டி சென்றார்.

    நாயுடு பேட்டை என்ற இடத்தில் பஸ் சென்ற போது பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டது. இதனால் பஸ்சை தொடர்ந்து இயக்க முடியவில்லை. இதனால் செய்வது அறியாமல் திகைத்த மர்ம நபர் பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றார்.

    பஸ் காணாமல் போனதை அறிந்த டிரைவர் திருப்பதி தேவஸ்தான போக்குவரத்து அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து திருமலை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் பஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் நாயுடு பேட்டையில் பஸ்சை மீட்டனர்.

    பஸ் சென்ற பாதையில் உள்ள கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 19 வயதுடைய வாலிபர் பஸ்சை ஓட்டி சென்றது தெரியவந்தது.

    ஆனால் அவருடைய இருப்பிடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசார் வாலிபர் போட்டோவை வெளியிட்டு அவரை காட்டி கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்.

    மேலும் 94910-86022, 94407-96770 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாலமேட்டில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.
    • முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு தொகை, கோப்பைகள் வழங்கப்பட்டன.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேட்டில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்த நாளையொட்டி காமராஜர் கைப்பந்து குழு சார்பில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. முன்னாள் பேரூராட்சி சேர்மன் கஜேந்திரன் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் சந்துரு, சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கார்த்திக், நாடார் உறவின்முறை சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரேந்திரன் வரவேற்றார். பாலமேடு பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் திண்டுக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. 2 நாட்கள் நடந்த போட்டியில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என தனித்தனியே முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு தொகை, கோப்பைகள் வழங்கப்பட்டன. 

    ×