search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேஜஸ்வி சூர்யா"

    • தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், ஜெயநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

    பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு தெற்கு தொகுதியில் 80 சதவீத பாஜகவினர், 20 சதவீத காங்கிரஸ் கட்சியினர் உள்ளதாக வீடியோ பதிவிட்டிருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதில், 80 சதவீதம் உள்ள பாஜகவினர் 20 சதவீதம் தான் வாக்களிக்கின்றனர். ஆனால் 20 சதவீதம் உள்ள காங்கிரஸ் கட்சியினர் 80 சதவீதம் வாக்கப்பதாக கூறினார்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்த்ல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், ஜெயநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பெங்களூர் தெற்கு தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் 1991லிருந்து பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
    • ரூ.4.1 கோடி சொத்து மதிப்பு கொண்ட பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு சொந்தமாக வீடு, கார் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

    பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு, 5 ஆண்டுகளில் 3150% உயர்ந்துள்ளது.

    2019 பாராளுமன்ற தேர்தலில் தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு ₹13.46 லட்சமாக இருந்த நிலையில், தற்போது தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ₹4.10 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். டெல்லி, பெங்களூரு காவல் நிலையங்களில் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சூர்யாவின் மொத்த சொத்து ரூ.4.10 கோடியில் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.1.99 கோடி முதலீடு மற்றும் ரூ.1.79 கோடிக்கு மேல் பங்குகளில் முதலீடு ஆகியவை அடங்கும்.

    ரூ.4.1 கோடி சொத்து மதிப்பு கொண்ட பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு சொந்தமாக வீடு, கார் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூர் தெற்கு தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் 1991லிருந்து பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு தொடர்ந்து எம்பியாக தேர்வாகி வந்த அனந்த குமார் கடந்த 2018ல் உயிரிழந்த நிலையில், 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேஜஸ்வியை பாஜக களமிறக்கியது. இவர் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-லிருந்து கட்சிக்கு வந்தவர்.

    தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையில் நெருங்கிய நண்பரான இவர், பாஜக இளைஞரணியின் தேசிய தலைவராக இருந்திருக்கிறார்

    பெங்களூர் சட்ட ஆய்வுகள் கழகத்தின் முன்னாள் மாணவரும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞருமான இவர், பா.ஜ.க தலைவர் மற்றும் பசவனகுடி ரவி சுப்ரமணியாவின் மருமகன் ஆவார். என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்துக்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களை மாநில அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.
    • தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் வெறுப்புப் பேச்சு பேசியதற்காக பா.ஜ.க. எம்.பி. கைது செய்யப்பட்டார்.

    பெங்களூரு:

    கர்நாடக தலைநகர் பெங்களூருவின் மத்திய பகுதியான அல்சூர் கேட் காவல் நிலைய எல்லையிலுள்ளது சித்தண்ணா லே அவுட். இங்கு இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் கடையில் கடந்த 17-ம் தேதி மாலை அனுமன் பாடல்கள் சத்தமாக ஒலிக்கப்பட்டதாகவும், அங்கு வந்த சில இளைஞர்கள் இந்தப் பாடல் குறித்து கேள்வி எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது கடை உரிமையாளரை இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த நடவடிக்கைக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்துக்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களை மாநில அரசு தடுத்து நிறுத்தவேண்டும். குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.யான தேஜஸ்வி சூர்யா கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், பெங்களூருவில் தேஜஸ்வி சூர்யா மற்றும் ஷோபா கரந்தலாஜே போன்ற பா.ஜ.க. தலைவர்கள் போராட்டம் நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், மத ரீதியான வெறுப்புப் பேச்சுகளை பேசியதற்காக அவர்களை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • பாரம்பரிய விளையாட்டுகளை தடுப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளன.
    • பாரம்பரிய விளையாட்டு முதல் முறையாக பெங்களூருவில் நடைபெறுகிறது.

    பெங்களூரு தெற்கு பாராளுமன்ற உறுப்பினரும், பா.ஜ.க. யுவா மோர்ச்சா தலைவருமான தேஜஸ்வி சூர்யா சனாதன தர்மத்தை காப்பாற்ற அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். ஜல்லிக்கட்டு, கம்பாலா போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை தடுப்பதை குறிக்கோளாக கொண்டு சில அமைப்புகள் செயல்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    கேரளாவின் கசர்கோட் மற்றும் கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டு போட்டியான கம்பாளா முதல் முறையாக பெங்களூருவில் நடைபெறுகிறது. இதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "இன்று பல அமைப்புகள் வெவ்வேறு குறிக்கோளுடன் நீதிமன்றத்தை நாடி, நமது பாரம்பிரய விளையாட்டு போட்டிகளான ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாளாவை தடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் தங்களின் வேறுபாடுகளை கலைந்து நமது பாராம்பரிய கொண்டாட்டங்களான ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாளாவை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும். இந்த விளையாட்டுக்களை காப்பாற்றினால் தான் சனாதன தர்மத்தையும் நம்மால் காப்பாற்ற முடியும்," என்று தெரிவித்தார்.

    ×