search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்பெண்ணை ஆறு"

    • சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
    • ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர்.

    கடலூர்:

    பொங்கல் திருவிழா கடந்த 15-ந் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடலூர் தென்பெண்ணையாற்றில் ஆற்று திருவிழா இன்று நடந்தது.

    இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கடலூர் வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டு உப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நானமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன. சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.

    கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபட்டனர். இதில் ஒரு சிலர் ஆற்றில் புனித நீராடினர். ஆற்று கரையோரம் கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இங்கு பொருட்கள், குழந்தைகளுக்காண விளையாட்டு பொருட்கள், உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டன. ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர். இந்த கிழங்கினை ஏராளமானோர் வாங்கிச்சென்றனர். . ஆற்று திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ம் நாள் ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஆற்று திருவிழா இன்று நடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. 

    • மாலையில் மாடுகளுக்கு வண்ண பலூன் கட்டி ஊர்வலம் செல்வதற்கு தயாராகி உள்ளனர்
    • சில்வர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து மகிழ்ந்து விளையாட உள்ளனர்.

     கடலூர்:

    தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு மாவட்ட முழுவதும் வீடுகளில் அசைவம் சமைத்து சாமிக்கு படையல் இட்டு மாலையில் மாடுகளுக்கு வண்ண பலூன் கட்டி ஊர்வலம் செல்வதற்கு தயாராகி உள்ளனர்.  

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் வருகிற 19- ந் தேதி ஆற்று திருவிழாவை வருடந்தோறும் மாவட்ட முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீர்த்தவாரிக்கு ஆறுகளில் சாமி ஊர்வலமாக நேரில் வருகை தந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு, மலட்டாறு, பரவனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் திரண்டு காலை முதல் மாலை வரை ஆனந்தமாக குடும்பத்துடன் விளையாடி மகிழ்ந்து வீட்டில் இருந்து சமைத்துக் கொண்டு வரும் உணவுகளை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு தங்களுக்கு தேவையான பொருட்கள், காய்கறி வகைகள் வாங்கிகொண்டு மகிழ்வாக வீட்டிற்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் ஆறுகளிலும் மற்றும் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து மகிழ்ந்து விளையாட உள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஆற்று திருவிழாவை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் நவேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது தென் பெண்ணையாறு பகுதிகளில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் எளிமையாக வந்து செல்வதற்கு சரியான முறையில் சுத்தம் செய்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் ப்ளீச்சிங் பவுடர் தெளித்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினர். அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் கே. எஸ்.ராஜா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • பண்ருட்டி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • மேட்டூர் பகுதியில் கனமழைகாரணமாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர்அணைக்குநீர்வரத்துஅதிகரித்துள்ளது.

    கடலூர்:

    மேட்டூர் பகுதியில் கனமழைகாரணமாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர்அணைக்குநீர்வரத்துஅதிகரித்துள்ளது. இதனால் சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    சாத்தனூர் அணையிலிருந்து நீர் வரத்து வர தொடங்கியதால் கடலூர்மாவட்டம்பண்ருட்டி, எனதிரிமங்கலம், கண்டரக்கோட்டை பகுதியில் தென்பெண்ணையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது.

    இந்தஅணையின் மூலம் 100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகளும் நீர் ஆதாரம் கிடைப்பதோடு 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.

    மேலும் பல்வேறு பகுதி்களுக்குசாத்தனூர்அணையின் மூலம்கூட்டு குடிநீர் திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணை வேகமாக நிரம்பி வருவதால் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால்சாத்தனூர் அணையை நம்பி உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்பெண்ணைஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேல், இன்ஸ்பெக்டர் நந்தகுமார், துணை தாசில்தார் சிவக்குமார் நேரில்பார்வையிட்டுஆய்வுசெய்தனர் .

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் பெண்ணை ஆற்று நீரில் இறங்கி குளிக்கவோ செல்பி எடுக்கவோ கூடாது என அறிவித்துள்ளனர்.

    ×