search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஷ்மீர் எல்லை"

    • தங்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கடந்த வாரம் தான் சோபியான் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்று இருந்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர்.

    பாதுகாப்பு படை வீரர்களை பார்த்ததும் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக தாக்கி உள்ளார்கள். பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. நேற்று மாலை தொடங்கிய என்கவுண்டர் நள்ளிரவு வரை நீடித்தது.

    பாதுகாப்பு படை வீரர்கள் இன்று காலை நடத்திய அதிரடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பெயர், எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணி நடை பெற்று வருகிறது.

    அந்த பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என்று தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    கடந்த வாரம் தான் சோபியான் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்று இருந்தனர். இதில் 3 பேர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள். மற்றொரு வன் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவன் ஆவான்.

    • சுட்டுக் கொல்லப்பட்ட லஷ்கர் பயங்கரவாதிகளில் லத்தீப் ராதர் மிகவும் முக்கியமானவன்.
    • பாதுகாப்பு படை வீரர்களால் தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியான அவன் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளான்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டம் வாட்டர்ஹெய்ல் கான்சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

    பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர் ஆவார்கள்.

    சுட்டுக் கொல்லப்பட்ட லஷ்கர் பயங்கரவாதிகளில் லத்தீப் ராதர் மிகவும் முக்கியமானவன். காஷ்மீர் பண்டிட்டுகளான ராகுல் பட், அம்ரீன் பட் உள்பட பல பொதுமக்களை சுட்டுக் கொன்றவன் ஆவான். பாதுகாப்பு படை வீரர்களால் தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியான அவன் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளான்.

    கவனக்குறைவாக எல்லையை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு சென்ற இந்தியரை மனிதாபிமான அடிப்படையில் திருப்பி அனுப்பினர்.
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் காங்ரியன் கிராமத்தைச் சேர்ந்த சாயிப் தீன் (வயது 35) என்பவர் கடந்த 2018ம் ஆண்டு கவனக்குறைவாக எல்லையை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு சென்றுவிட்டார். இதனால் அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. 

    இந்நிலையில், அவரை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து திருப்பி அனுப்பி உள்ளனர். சாயிப் தீனை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அழைத்து வந்து, பூஞ்ச்-ராவல்கோட் கிராசிங் பாயிண்டில் உள்ள இந்திய  ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

    மனிதாபிமான அடிப்படையில் சாயிப் தீன் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×