என் மலர்tooltip icon

    இந்தியா

    தொடர்ந்து 3-வது நாளாக காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
    X

    தொடர்ந்து 3-வது நாளாக காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி

    • பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் எல்லையில் நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • டுட்மாரி கலி மற்றும் ராம்பூர் செக்டார்களின் அருகே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் அதிகரித்து வருகிறது.

    பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் எல்லையில் நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் 3-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

    இது குறித்து இந்திய ராணுவம் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஏப்ரல் 26, 27-ந்தேதி நள்ளிரவில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தியது. டுட்மாரி கலி மற்றும் ராம்பூர் செக்டார்களின் அருகே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாகிஸ்தானின் இந்த தாக்குதல்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதல் கொடுத்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×