search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "terror camps"

    எல்லையில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்ததையடுத்து, பிரதமர் மோடி டெல்லியில் அமைச்சரவை குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். #IAFAttack #LOC #Modi
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்களில் சென்ற விமானப்படை வீரர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பலாகோட், சகோதி, முசாபராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.



    12 விமானங்களில் சென்று சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகளை வீசியதில், பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டுள்ளது. சர்ஜிகல் ஸ்டிரைக் போன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடியிடமும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கியுள்ளார்.

    இதையடுத்து பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழுவுடன், பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

    இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பிறகு எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இதேபோல் பாகிஸ்தானிலும் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #IAFAttack #LOC #Modi
    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது. #IAFAttack #LoC
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.



    இந்த தாக்குதல் இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். புல்வாமா தாக்குதலுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசும் கூறியிருந்தது. எனவே, சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்று எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து குண்டுகளை வீசின.

    இந்திய விமானப்படையின் 12 போர் விமானங்கள் (மிராஜ் 2000) இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டதில், பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  #IAFAttack #LoC

    ×