என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-பாகிஸ்தான் கொடி
    X
    இந்தியா-பாகிஸ்தான் கொடி

    எல்லை தாண்டி சென்ற இந்தியரை 3 ஆண்டுக்கு பிறகு ஒப்படைத்த பாகிஸ்தான்

    கவனக்குறைவாக எல்லையை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு சென்ற இந்தியரை மனிதாபிமான அடிப்படையில் திருப்பி அனுப்பினர்.
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் காங்ரியன் கிராமத்தைச் சேர்ந்த சாயிப் தீன் (வயது 35) என்பவர் கடந்த 2018ம் ஆண்டு கவனக்குறைவாக எல்லையை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு சென்றுவிட்டார். இதனால் அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. 

    இந்நிலையில், அவரை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து திருப்பி அனுப்பி உள்ளனர். சாயிப் தீனை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அழைத்து வந்து, பூஞ்ச்-ராவல்கோட் கிராசிங் பாயிண்டில் உள்ள இந்திய  ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

    மனிதாபிமான அடிப்படையில் சாயிப் தீன் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×