search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை மருத்துவ முகாம்"

    • கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ சிகிச்சை முகாமை நடைபெறுகிறது.
    • கால்நடை வளர்ப்போர்தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    விழுப்புரம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில், நாளை (27-ந் தேதி) மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமை நடத்துகிறது.

    நோய் வாய்ப்பட்ட கால் நடைகளுக்கு சிகிச்சை யளித்தல், குடற்புழுநீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடு தல், செயற்கை கருவூட்டல், மலடுநீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, கோழி தடுப்பூ சிகள், நெறிநோய் தடுப்பூசிகள், புல்வளர்ப்பு, தாது உப்பு கவவை மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பவ்வேறு சுகாதார நட வடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு வழங்கப்படவுள்ளது. கால்நடை வளர்ப்பில் உண்டாகும் பல்வேறு சந்தே கங்களுக்கு முகாம்களில் பங்கேற்கும் கால்நடை மருத்துவர்கள் உரிய விளக்கம் அளிப்பார்கள். மேலும், கிடேரி கன்று பேரணி நடத்தி சிறந்தகன்று உரிமையாளர்களுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட வுள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போர் இம்முகாமில் தங்கள் கால்நடைகளை கால்நடை மருத்துவர்களி டம் காண்பித்து உரிய மருத்துவ வசதி பெற்று தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரி வித்துள்ளார் தெரிவித்தார்.

    • ஆண்டிபுதூர் கிராமத்தில் முதல் முகாம் நடத்தப்படவுள்ளது.
    • பரிசு வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற உள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 3 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து இம்முகாம்கள் கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் சார்பில் வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 8 மணிக்கு குண்டடம் ஊராட்சி ஒன்றியம், குறுக்கபாளையம் ஊராட்சி ஆண்டிபுதூர் கிராமத்தில் முதல் முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாம்களால் கால்நடைகளுக்கு இலவசமாக அளிக்கப்படும் சிகிச்சையின் விவரங்கள் பின்வருமாறு:-

    குடற்புழு நீக்கம், நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி மற்றும் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ,சினை பிடிக்காமல் இருக்கும் கிடாரி கன்றுகளுக்கு தாது உப்புக்கலவை வழங்குதல், இலவச நோய் சிகிச்சைப்பணிகள், நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் அளித்தல், கால்நடைகளுக்கு கர்ப்பபை தொடர்பான சிகிச்சைப்பணிகள், செயற்கை முறை கருவூட்டல் பணி, நுண்கதிர் மூலம் சினை பரிசோதனை செய்தல், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு நடவடிக்கைகள்,நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு ரத்தம் மற்றும் இதர மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்புதல், கால்நடைகளுக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவை (1962),விவசாயிகளுடன் கருத்தரங்கு மற்றும் கால்நடை பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் கலந்துரையாடல், சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசு , சிறந்த கால்நடை தொழிற்நுட்ப விவசாயிகளுக்கு பரிசு வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. மேற்படி முகாமில் விவசாயிகள் மற்றும் கால்நடைவளர்ப்போர் பங்கு பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.   

    • கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • 250 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மங்கலம் :

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பரமசிவம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் உமாசங்கர், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சாமளாபுரம் கால்நடை மருத்துவர் பிரியலட்சுமி, சாமிக்கவுண்டம்பாளையம் கால்நடை மருத்துவர் செந்தில்முருகன், மற்றும் கால்நடை உதவியாளர் காயத்ரி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் மாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசியும், நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.மொத்தமாக 250 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இம்முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் மேனகா பாலசுப்பிரமணி, மைதிலிபிரபு மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முகாமில் சிறந்த கிடாரிகன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் கால்நடை புத்தாக்கப்பயிற்சியில் கலந்து கொண்ட 25 விவசாயிகளுக்கு தலா 100ரூபாய் வழங்கப்பட்டது.

    • கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • கால்நடை காப்பீட்டு திட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே நீளாஞ்சனூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இம்முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை அளித்தனர்.

    செயற்கை முறையில் கருவூட்டல், இரத்த மாதிரி பரிசோதனை, சினைப் பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டன. கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    மேலும் கால்நடைகளுக்கு தேவையான தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. தீவனப் பயிர் சாகுபடி செய்தல், ஊதுகால் தடுப்பு முறை, கன்று வளர்ப்பு முறை, மழைக்கால நோய் தடுப்பு முறைகள் மற்றும் கால்நடை காப்பீட்டு திட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து சிறந்த கால்நடைகள் மற்றும் கன்றுகளை தேர்வு செய்து அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன‌.

    முகாமில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சுவாமிநாதன், உதவி இயக்குனர்கள் மணிமாறன், சண்முகசுந்தரம், கும்மனூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் துணை தலைவர் சக்திவேல் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர் திருமால், முத்து, கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சீனிவாசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் கும்மனூர் ஊராட்சி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 750-க்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டன.

    • சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது.
    • சிறந்த கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    செந்துறை:

    நத்தம் தாலுகா செந்துறை அருகே மந்தகுளத்துப்பட்டியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    திண்டுக்கல் கோட்ட உதவி இயக்குநர் திருவள்ளுவன் ஆலோசனையின் பேரில் நடந்த முகாமில் செந்துறை கால்நடை மருந்தக உதவி மருத்துவர் இந்து தலைமையில் உதவி மருத்துவர்கள் சிறுகுடி குமரேசன், குட்டுப்பட்டி பிரேமாவதி ஆய்வாளர் கமலா, பராமரிப்பு உதவியாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதில் சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது. சிறந்த கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகளை குடகிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி மற்றும் வார்டு உறுப்பினர் கணேசன் வழங்கினர்.

    • மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
    • 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சி அம்மாபாளையம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. கால்நடைகளுக்கான மடி நோய் பராமரிப்பு, தடுப்பூசி போடுதல், கிசான் அட்டை உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துசிகிச்சை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்போருக்கு சான்றிதழ் மற்றும் கால்நடை மருந்துகளை பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். இதில் மாணிக்காபுரம் ஊராட்சி தலைவர் நந்தினி சண்முகசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன்,கால்நடை மருத்துவர் அன்பரசு, அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கால்நடைகளுக்கு இலவசமாக தாது உப்பு கலவைகள் அளிக்கப்பட்டது.
    • நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இய்ககுனர், கூட்டுறவு சார்பதிவாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நீலகிரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. வார விழாவின் 2-ம் நாளான நேற்று கூட்டுறவு சந்தைப்படுத்துதல், நுகர்வோர், பதனிடுதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் என்ற மைய கருத்தின் அடிப்படையில் மசினகுடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் மசினகுடி கிராமத்தில் சரக துணைப்பதிவாளர் மது தலைமையில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமில் ஆவின் கால்நடை மருத்துவர்கள் சிவசங்கர் மற்றும் டேவிட் மோகன் குழுவினர்கள் கால்நடைகளுக்கு பூச்சி மருந்து, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மலட்டுத்தன்மை நீக்குதல் போன்ற சிகிச்சைகள் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு இலவசமாக தாது உப்பு கலவைகள் அளிக்கப்பட்டது.

    ஆவின் பொதுமேலாளர் வெங்கடாசலம், நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இய்ககுனர் அய்யனார், கூட்டுறவு சார்பதிவாளர் பிரேமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை, நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து டானிக் வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கடையம் பெரும்பத்து ஊராட்சி அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை, நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து டானிக் முதலானவைகளை மருத்துவ அலுவலர் சகானா வழங்கினார்.முகாமில் கடையம் பெரும் பத்து தி.மு.க நிர்வாகி பரமசிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் மேட்டூர், வெய்க்காலிப்பட்டியைச் சேர்ந்த கால்நடை விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

    • அயன் பேரையூர் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இம்முகாமினால் 50 க்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்களது மாடு, ஆடு, என சுமார் 200க்கும் மேற்பட்ட விலங்கினங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள அயன் பேரையூர் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலபணித்திட்ட அமைப்பு மற்றும் வி.களத்தூர் அரசு கால்நடை மருந்தகமும் இணைந்து நடத்தும் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் வி.களத்தூர் கால்நடை உதவி மருத்துவர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் ஆடு, மாடு, கோழி, உள்ளிட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஊசி போடுதல், குடற்புழு நீக்கம், மற்றும் பல்வேறு நோய்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

    இம்முகாமினால் 50 க்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்களது மாடு, ஆடு, என சுமார் 200க்கும் மேற்பட்ட விலங்கினங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்தும் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம், முதுகலை ஆசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • 450-க்கும் மேற்பட்ட மாடு, ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த போளிப்பாக்கத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாராயணன் வரவேற்றார்.

    இந்த முகாமில் 450-க்கும் மேற்பட்ட மாடு, ஆடுகளுக்கு தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்க மருந்து வழங்குதல், சினை ஊசி போடுதல், தாது உப்பு வழங்குதல், மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் பரா மரிப்பு குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள், ஏரிபாசன தலைவர் மன்னார், கிளை செயலாளர் சரவணன், ஊராட்சி வார்டு உறுப்பினர் கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் உத்தரவின் பேரில் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் கால்நடை மருத்துவ முகாம் காகிதபுரத்தில் நடைபெற்றது.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் உத்தரவின் பேரில் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் கால்நடை மருத்துவ முகாம் காகிதபுரத்தில் நடைபெற்றது.

    முகாமில் கால்நடை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு மாடுகள், ஆடுகளுக்கு தாதுஉப்புக் கலவை , மருந்து, மாத்திரை, காய்ச்சல், கழிச்சல்களுக்கு மாத்திரைகள், கால் நடைகளுக்கு ஏற்பட்ட புண்களுக்கு ஆண்டிசெப்டிக் கிரீம், சத்துமாத்திரை ஆகியவற்றை வழங்கினர். சினை பரிசோதனையும் செய்யப்பட்டது.

    இதில் காகிதபுரம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 200-க்கும் மேற்பட்ட கால் நடைகளை கொண்டுவந்து பயன் பெற்றனர்.

    ×