என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
கடையம் பெரும்பத்து ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்
- கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
- கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை, நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து டானிக் வழங்கப்பட்டது.
கடையம்:
கடையம் யூனியனுக்குட்பட்ட கடையம் பெரும்பத்து ஊராட்சி அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை, நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து டானிக் முதலானவைகளை மருத்துவ அலுவலர் சகானா வழங்கினார்.முகாமில் கடையம் பெரும் பத்து தி.மு.க நிர்வாகி பரமசிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் மேட்டூர், வெய்க்காலிப்பட்டியைச் சேர்ந்த கால்நடை விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
Next Story






