search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரண்ட‌அள்ளி அருகே கால்நடை மருத்துவ முகாம்
    X

    மாரண்ட‌அள்ளி அருகே கால்நடை மருத்துவ முகாம்

    • கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • கால்நடை காப்பீட்டு திட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே நீளாஞ்சனூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இம்முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை அளித்தனர்.

    செயற்கை முறையில் கருவூட்டல், இரத்த மாதிரி பரிசோதனை, சினைப் பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டன. கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    மேலும் கால்நடைகளுக்கு தேவையான தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. தீவனப் பயிர் சாகுபடி செய்தல், ஊதுகால் தடுப்பு முறை, கன்று வளர்ப்பு முறை, மழைக்கால நோய் தடுப்பு முறைகள் மற்றும் கால்நடை காப்பீட்டு திட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து சிறந்த கால்நடைகள் மற்றும் கன்றுகளை தேர்வு செய்து அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன‌.

    முகாமில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சுவாமிநாதன், உதவி இயக்குனர்கள் மணிமாறன், சண்முகசுந்தரம், கும்மனூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் துணை தலைவர் சக்திவேல் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர் திருமால், முத்து, கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சீனிவாசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் கும்மனூர் ஊராட்சி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 750-க்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டன.

    Next Story
    ×