என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்நடை மருந்துகளை பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கிய காட்சி.
பல்லடம் அருகே கால்நடை மருத்துவ முகாம்
- மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
- 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சி அம்மாபாளையம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. கால்நடைகளுக்கான மடி நோய் பராமரிப்பு, தடுப்பூசி போடுதல், கிசான் அட்டை உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துசிகிச்சை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்போருக்கு சான்றிதழ் மற்றும் கால்நடை மருந்துகளை பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். இதில் மாணிக்காபுரம் ஊராட்சி தலைவர் நந்தினி சண்முகசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன்,கால்நடை மருத்துவர் அன்பரசு, அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






