search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணி பலி"

    • ஹீட்டரை ஆன் செய்த போது விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    போளூர்:

    போளூர் அடுத்த பொன்நகரை சேர்ந்தவர் சுதாகர் (25). விவசாயி. மனைவி வினோதினி (வயது 23).

    மகன் மிதுன் (3). வினோதினி நர்சிங் முடித்துவிட்டு போளூர் தனியார் மருத்துவ மனையில் வேலை செய்து வந்தார். தற்போது அவர் 8 மாத கர்ப்பமாக உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை குளிப்பதற்காக வினோதினி ஹீட்டர் சுச்சை ஆன் செய்தார். அப்போது அதிலிருந்த மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி எரியப்பட்டு மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    வெகு நேரம் ஆகியும் வினோதினி வராததால் சந்தேகம் அடைந்து உறவினர்கள் குளியலறைக்கு சென்று பார்த்தனர். அப்போது வினோதினி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் அவர்கள் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து போளூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வினோதினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    8 மாத கர்ப்பிணி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மத்தியப்பிரதேசம் மாநிலம் முரைனா மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் மீது பஸ் மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் முரைனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரக்‌ஷா தகாட். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்சிற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஜனனி  எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயங்கி வரும் அரசு ஆம்புலன்சில் சுரக்‌ஷா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    ஆம்புலன்ஸ் கைலாராஸ் நகருக்கு அருகில் செல்லும் போது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் ஆம்புலன்சில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் சுரக்‌ஷா, அவரது மாமியார் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுரக்‌ஷாவின் கணவர் உட்பட சில படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள பஸ் டிரைவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    ×