என் மலர்
நீங்கள் தேடியது "ambulance accident"
- இருசக்கர வாகனத்தில் சென்ற தனசேகரன் பலத்த காயமடைந்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
- சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அத்திக்குழி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது 8 மாத குழந்தை ஜஸ்விகாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி விஜயக்குமார் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை ஜஸ்விகா, மனைவி பிரியா ஆகியோருடன் சேலம் சென்றார். ஆம்புலன்சை கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த பிரபு ஓட்டினார். சின்னசேலம் அடுத்த கனியாமூர் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சினை ஆம்புலன்ஸ் டிரைவர் பிரபு முந்தி செல்ல முயன்றார். அப்போது ஆம்புலன்ஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்த தனசேகரன் மீது மோதி ஆம்புலன்ஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அதிர்ஷ்டவசமாக விஜயகுமார் அவரது மனைவி பிரியா மற்றும் 8 மாத குழந்தை ஜஸ்விகா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இருசக்கர வாகனத்தில் சென்ற தனசேகரன் பலத்த காயமடைந்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டிச் சென்ற டிரைவர் பிரபு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சோவனூர் நெடுஞ்சாலையில் சென்ற போது ஆம்புலன்சு டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது.
- கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்புலன்சு சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
திருவனந்தபுரம்:
திருச்சூரை அடுத்த சோவனூர் பகுதியை சேர்ந்தவர் பெமீனா. நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெமீனாவுக்கு இன்று அதிகாலை நோயின் தாக்கம் அதிகமானது.
இதனால் பெமினாவின் உறவினர்கள் ஆம்புலன்சுக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்தனர். இன்று அதிகாலை ஒரு மணி அளவில் ஆம்புலன்சில் பெமினாவை ஏற்றி கொண்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டனர்.
ஆம்புலன்சு ஆஸ்பத்திரி நோக்கி அதிவேகமாக சென்றது. சோவனூர் நெடுஞ்சாலையில் சென்ற போது ஆம்புலன்சு டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்புலன்சு சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆம்புலன்சில் சென்ற நோயாளி பெமினா உள்பட அவருக்கு துணையாக சென்ற உறவினர்களும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு சென்ற நோயாளி உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- டிராக்டர் டிரைவர் பாபு ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சவுந்தர்யா (வயது20 )என்ற கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உத்தரப்பள்ளி-தம்மாண்டரப்பள்ளி பஸ் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று மோதி விபத்துக்குள்ளனாது.
இதில் கம்பைநல்லூரைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பார்த்திபன் (41), அவருடன் சென்ற உதவியாளர் சந்தியா (25), மூக்காண்டப்பள்ளியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் பாபு ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
ஆம்புலன்சில் வந்த கர்ப்பிணி சவுந்தர்யாவுக்கு அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்தவர்களை வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த உத்தனப்பள்ளி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மியான்மர் நாட்டின் மன்டாலே பிராந்தியத்திற்குட்பட்ட யாங்கூன்-மன்டாலே பகுதி வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்து கொண்டிருந்தது. மைத்தியா நகரை நெருங்கியபோது அந்த ஆம்புலசின் ஒரு டயர் திடீரென்று வெடித்தது.
இதனால் தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ் அருகாமையில் உள்ள கார் பார்க்கிங் பகுதிக்குள் பாய்ந்து சென்று மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த இருவர் அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #ambulancecrash #Myanmarambulancecrash
இந்த சம்பவத்தில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் முரைனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரக்ஷா தகாட். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்சிற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஜனனி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயங்கி வரும் அரசு ஆம்புலன்சில் சுரக்ஷா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆம்புலன்ஸ் கைலாராஸ் நகருக்கு அருகில் செல்லும் போது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் ஆம்புலன்சில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் சுரக்ஷா, அவரது மாமியார் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுரக்ஷாவின் கணவர் உட்பட சில படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள பஸ் டிரைவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.






