search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palladam accident"

    வளைகாப்பு முடிந்து தாய் வீட்டுக்கு திரும்பிய கர்ப்பிணி விபத்தில் பலியானார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.
    பல்லடம்:

    திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (30). கோவை பீளமேட்டில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் உடுமலை பூலாங்கிணறை சேர்ந்த பி.காம். பட்டதாரியான தமிழ்செல்விக்கும் (22) கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.

    தமிழ்செல்வி தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையொட்டி அவருக்கு நேற்று திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள கணவர் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    வளைகாப்பு முடிந்ததும் லோகேஸ்வரன், அவரது மனைவி தமிழ்செல்வி, அவரது பெற்றோர் சேகர், ஜோதிமணி ஆகியோர் காரில் பூலாங்கிணறுக்கு புறப்பட்டனர்.

    காரை லோகேஸ்வரன் ஓட்டி சென்றார். பல்லடம் அருகே உள்ள அரசங்காடு என்ற பகுதியில் சென்ற போது எதிரே ஒரு கார் வந்தது. திடீரென இரு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இதில் காரை ஓட்டி சென்ற லோகேஸ்வரன் அவரது மனைவி தமிழ் செல்வி, காரில் இருந்த சேகர், ஜோதிமணி ஆகியோரும் மற்றொரு காரில் வந்த மணிகண்டன், தண்டபாணி, சாந்தாமணி, மனோன்மணி ஆகியோரும் காயம் அடைந்தனர்.

    அவர்கள் 8 பேரையும் பல்லடம் அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே நிறைமாத கர்ப்பிணி தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.

    படுகாயம் அடைந்த மற்ற 7 பேரும் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் தனது மனைவி மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை பலியான தகவல் கிடைத்து லோகேஸ்வரன் கதறி துடித்தார். அவரது உறவினர்களும், தமிழ்செல்வி உறவினர்களும் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கதறி அழுத வண்ணம் இருந்தனர். இதனால் அப்பகுதியே சோகத்துடன் காணப்பட்டது.
    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லாரி மோதி 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் நேரு நகரை சேர்ந்தவர் ராமசாமி (21). டாடா ஏ.சி. டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர்கள் கருப்புசாமி (23), அருணாசலம் (21). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

    நேற்று இரவு இவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் பல்லடம் வந்தனர். பின்னர் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கோவை - திருச்சி சாலையில் சாமிக் கவுண்டன் பாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே சூலூரில் இருந்து கழிவு ஆயில் ஏற்றி கொண்டு மேட்டூருக்கு டேங்கர் லாரி வந்தது. இந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த அடிபட்ட ராமசாமி, அருணாசலம் ஆகியோர் சம்பவ இடத்திலே பலியானார்கள். கருப்பு சாமிக்கு காயம் ஏற்பட்டது.

    அவர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லாரி மீது மோதுவதற்கு முன் மோட்டார் சைக்கிள் அந்த வழியாக ரோட்டில் நடந்து சென்றவர் மீது மோதியது.

    இதில் அவர் காயம் அடைந்தார். மயங்கிய நிலையில் இருப்பதால் அவர் யார்? எந்த ஊர்? போன்ற விவரங்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

    விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சாமிக்கவுண்டன் பாளையம் பிரிவில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. இதனை தடுக்க அங்கு டிவைடர் அல்லது ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பல்லடத்தில் இன்று காலை அரசு பஸ் மோதி பள்ளி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    பல்லடம்:

    தேனியை சேர்ந்தவர் கணபதி ராமன் (வயது 55). பல்லடம் அருள்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக இருந்தார். இன்று காலை பள்ளியில் இருந்து மொபட்டில் பல்லடம்- திருப்பூர் மெயின்ரோட்டுக்கு வந்தார். அப்போது அந்த வழியே வந்த அரசு பஸ் கணபதி ராமன் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லடம் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    பல்லடம்:

    பல்லடம் மல்லே கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் இடும்பன் (வயது 64). கூலித்தொழிலாளி. இவர் நேற்று அருகில் உள்ள மளிகை கடைக்கு புறப்பட்டார்.

    கரடிவாவி- காம நாயக்கன் பாளையம் சாலை பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிள் இடும்பன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து மயங்கினார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓடி வந்தனர்.

    பொதுமக்கள் வருவதை பார்த்த மேட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். படுகாயம் அடைந்த இடும்பனை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இடும்பனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய நபரை தேடி வருகிறார்கள்.

    பல்லடம் அருகே வேலைக்கு சென்று திரும்பிய போது மொபட் மீது கார் மோதிய விபத்தில் அண்ணன்- தம்பி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோட்டபாளையத்தை சேர்ந்தவர்கள் ஆறுச்சாமி (43), லோகு (40). அண்ணன்- தம்பிகளான இவர்கள் பல்லடத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று இரவு 10 மணியளவில் இவர்கள் வேலை முடிந்து மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். பல்லடம்- தாராபுரம் சாலையில் துத்தாரி பாளையம் மாதப்பூர் பிரிவில் வளைவில் திரும்பினர்.

    அப்போது எதிரே திண்டுக்கல்லில் இருந்து கோவை நோக்கி ஒரு கார் வந்தது. இந்த கார் திடீரென மொபட் மீது மோதியது. இதில் ஆறுச்சாமியும், லோகுவும் தூக்கி வீசப்பட்டனர்.

    பலத்த காயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே இறந்தனர். மொபட் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் கவிழ்ந்தது.

    இதில் காரை ஓட்டி வந்த கீர்த்தனன், அதில் பயணம் செய்த சதிஷ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காமநாயக்கன் பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான அண்ணன்-தம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவிழ்ந்த கார் மீட்கப்பட்டது.

    இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பல்லடம் அருகே வெவ்வேறு விபத்தில் வியாபாரி-தொழிலாளி பலியானார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    தாராபுரம் அருகே உள்ள கேத்தல்ரைவ் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (39). தேங்காய்மட்டை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இவர் கடந்த 22-ந் தேதி பொங்கலூருக்கு வியாபார வி‌ஷயமாக மோட்டார் சைக்கிளில் வந்தார். தாராபுரம்- பொங்கலூர் சாலையில் வேலாயுதம்பாளையம் பிரிவில் சென்ற போது அந்த வழியாக வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ரோட்டை விட்டு இறங்கினார்.

    அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை இறந்தார். இது குறித்து அவினாசி பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பரமன் (50). கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அனுப்பட்டி- பல்லடம் சென்ற அரசு பஸ்சில் படிக்கட்டில் பயணம் செய்துள்ளார்.

    இதனை கண்டக்டர் தட்டி கேட்டுள்ளார். பஸ் வெப்பங்கொட்டை பாளையத்தில் சென்ற போது படிக்கட்டில் இருந்து பரமன் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×