என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

பல்லடம் அருகே வெவ்வேறு விபத்தில் வியாபாரி- தொழிலாளி பலி

பல்லடம்:
தாராபுரம் அருகே உள்ள கேத்தல்ரைவ் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (39). தேங்காய்மட்டை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
இவர் கடந்த 22-ந் தேதி பொங்கலூருக்கு வியாபார விஷயமாக மோட்டார் சைக்கிளில் வந்தார். தாராபுரம்- பொங்கலூர் சாலையில் வேலாயுதம்பாளையம் பிரிவில் சென்ற போது அந்த வழியாக வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ரோட்டை விட்டு இறங்கினார்.
அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை இறந்தார். இது குறித்து அவினாசி பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பரமன் (50). கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அனுப்பட்டி- பல்லடம் சென்ற அரசு பஸ்சில் படிக்கட்டில் பயணம் செய்துள்ளார்.
இதனை கண்டக்டர் தட்டி கேட்டுள்ளார். பஸ் வெப்பங்கொட்டை பாளையத்தில் சென்ற போது படிக்கட்டில் இருந்து பரமன் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.