search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவித் தொகை"

    • பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
    • 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இதர பிற்படுத்தப் பட்டோர், பொருளா தாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9-ம் வகுப்பு, 11 -ம் வகுப்பு பயின்றுவரும் 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப் படும் எனவும் அதில் குறிப்பி டப்பட்டிருந்தது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத் தேர்வு முகமையால் 29.09.2023 அன்று நடத்தப்பட விருந்த யசஸ்வி நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர் என தெரிவிக்கப்ப ட்டிருந்த நிலையில் தற்போது எழுத்து தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும், 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க தகுதியான வர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்ப டையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித் தொகை யானது வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட https://scholarships.gov.in மற்றும் ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) தொடர்ந்து நோக்கி கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • இதுவரை 22,032 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.37 கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.
    • பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு 65 நபர்களுக்கு ரூ. 6.9 இலட்சம் மதிப்பீட்டில் பொருளாதார கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையின் பேரில் கடலூர் மாவட்டத்தில் 32 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 35 மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் மற்றும் 1 சிறுபான்மையினர் நல விடுதி என ஆககூடுதல் 68 விடுதிகள் இயங்கி வருகின்றது. இவற்றில் 3044 மாணவர்கள் மற்றும் 1681 மாணவியர்கள் என ஆக மொத்தம் 4725 மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அவ்வகையில் கல்வி உதவித்தொகை திட்டங்கள் வாயிலாக சிறுபான்மை யினர் கல்வி உதவித்தொ கைத் திட்டத்தின் கீழ் கடந்த 2021-22 -ம் ஆண்டில் 12146 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் உதவித் தொகைகள் வழங்கப்ப ட்டுள்ளன. மேலும், 2022-23 -ம் ஆண்டிற்கு 5655 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 27,113 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 11.24 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.

    கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை திட்டத்தின் கீழ் மிகப்பிற்டுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்த 3 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இதுவரை 22,032 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.37 கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்ப ட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 13,095 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6.41 கோடி மதிப்பீட்டில் மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த வர்களுக்கு 43 ேபர்களுக்கு ரூ. 2,39,940 மதிப்பீட்டில் விலையில்லா தையல் எந்திரங்கள் மற்றும் 56 ேபர்களுக்கு ரூ.2.8 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா தேய்ப்புப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

    பொருளாதார கடனுதவித் திட்டங்கள் வாயிலாக, தமிழ்நாடு சிறுபா ன்மையினர் பொரு ளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்தவ ர்களுக்கு 977 ேபர்களுக்கு ரூ. 4.25 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் பிற்படுத்தப்ப ட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவ ர்களுக்கு 1775 நபர்களுக்கு ரூ. 11.43 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு 65 நபர்களுக்கு ரூ. 6.9 இலட்சம் மதிப்பீட்டில் பொருளாதார கடன் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மாவ ட்ட த்தில் பொரு ளாதாரத்தில் பின்தங்கி யுள்ள முஸ்லிம் பிரிவைச் சார்ந்த மகளிர்களுக்கு 322 ேபர்களுக்கு ரூ. 43.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொந்த வீடு இல்லாத அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்படும் குடும்பத்தலைவிகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற விவரம் சேகரிக்கப்பட்டிருந்தது.
    • பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை அரசு நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் 2021-சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

    மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த அறிவிப்புகளில் இந்த அறிவிப்பு மிக முக்கியமாகும். இந்த திட்டத்தை தி.மு.க. அரசு சொன்னபடி நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சியினர் குறைகூறிவந்த நிலையில் இந்த திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கடி கூறி வந்தார்.

    இது தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகள் அளவில் பலமுறை ஆலோசனை நடத்தினார். பொருளாதார ஆலோசனை குழுவுடனும் கலந்து பேசினார். இதில் குடும்பத்தலைவி களுக்கு இந்த ஆண்டே மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    அந்த அடிப்படையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் சட்டசபையில் தாக்கலாகும் பட்ஜெட்டில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்தார்.

    இதையடுத்து இந்த திட்டத்தில் யார் யாருக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை அரசு நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

    மகளிர் மேம்பாட்டு கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் உள்ள ஏஜென்சியால் தமிழகத்தில் வறுமை கோட்டில் உள்ள ஏழைகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்று ஒரு சர்வே எடுக்கப்பட்டது.

    அதில் சொந்த வீடு இல்லாத அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்படும் குடும்பத்தலைவிகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற விவரம் சேகரிக்கப்பட்டிருந்தது.

    நிலையான மாத வருமானம் இல்லாமல் அன்றாட கூலி வேலை செய்யும் உழைக்கும் பெண்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்றும் கணக்கெடுக்கப்பட் டிருந்தது. கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆகியோரது பட்டியலும் இதில் இடம்பெற்றுள்ளது.

    அந்த வகையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு ரூ.1000 வழங்க திட்டமிட்டுள்ளது. பி.எச்.எச். என்ற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கும், பி.எச்.எச்., ஏ.ஏ.ஒய். என்ற அந்த்யோதயா அன்ன யோஜனா ரேசன் அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கும் ரூ.1000 கிடைக்கும்.

    ஆனாலும் இதில் கணவரின் ஆண்டு வருமானம் கணக்கில் எடுக்கப்பட உள்ளது. இந்த பட்டியல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மகளிர் மேம்பாட்டு கழகம் தகுதியானவர்களின் பட்டியலை ஆய்வு செய்து வருகிறது.

    இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டே செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்து வருகிறார்.

    அதற்கான பணிகள் அனைத்தும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கும் குடும்பத்தினருக்கு இந்த உதவித்தொகை கிடைக்காது.

    தமிழ்நாட்டில் தற்போது 1.14 கோடி ரேஷன் கார்டுகள் ஏழைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் வரை 34.27 லட்சம் பேர் 9 பிரிவுகளின் கீழ் ரூ.1000 ஓய்வூதியம் பெற்றுள்ளனர். பெரும்பாலான ஏ.ஏ.ஒய். கார்டுதாரர்களும் ஏற்கனவே முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

    எனவே இவை அனைத்தையும் ஒப்பிட்டு தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

    இந்த திட்டத்தில் சேர தகுதியான பயனாளிகளை வருவாய்த்துறையும், மகளிர் மேம்பாட்டுக்கழகமும் ஆய்வு செய்து வருகிறது. இந்த பணி முடியும் தருவாயில் உள்ளது. எனவே விரைவில் தகுதியான இறுதி பட்டியல் தயாராகிவிடும். அதன் பிறகு முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்று இதை இறுதி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு ஊழியர்கள் உள்ள குடும்பத்துக்கு 1000 ரூபாய் பணம் வழங்கப்படாது.
    • கணவரின் ஆண்டு வருமானம் கணக்கிடவும் வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் 2021 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் ஒன்று.

    மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த அறிவிப்புகளில் இந்த அறிவிப்பு மிக முக்கியமாகும். ஆனால் தி.மு.க. அரசு சொன்னபடி இந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க் கட்சிகள் தரப்பில் முன் வைக்கப்பட்டு வந்தது.

    ஆனால் இந்த திட்டத்தை கண்டிப்பாக தி.மு.க. அரசு நிறைவேற்றும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கடி கூறி வந்தார். இது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் அளவில் ஆலோசனையும் நடத்தி இருந்தார்.

    இதைத் தொடர்ந்து பொருளாதார ஆலோசனை குழுவுடன் ஆலோசித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த திட்டத்தில் யார்-யார் பயன் அடையலாம் என்ற விவரங்களை சேகரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.

    இதைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் வருகிற மார்ச் தாக்கலாகும் பட்ஜெட்டில் இது பற்றிய அறிவிப்பு இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த சூழ்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    இதையடுத்து இந்த திட்டத்தில் யார்-யாருக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே பயனாளிகளை தேர்வு செய்யும் நிதித்துறை மற்றும் வருவாய்த் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு ரூ.1000 வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி பி.எச்.எச். என்ற வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக் கும், பி.எச்.எச்.ஏ.ஏ.ஒய். என்ற அந்த்யோ தயா அன்னயோஜனா ரேசன் அட்டை வைத்திருக்கும் (அதாவது 35 கிலோ அரிசி வாங்குபவர்கள்) நபர்களுக்கு ரூ.1000 கிடைக்கும்.

    இதில் வயது வரம்பு கணவரின் ஆண்டு வருமானம் கணக்கிடவும் வாய்ப்பு உள்ளது.

    அரசு ஊழியர்கள் உள்ள குடும்பத்துக்கு இந்த 1000 ரூபாய் பணம் வழங்கப்படாது. புதுமைப் பெண் திட்டத்தில் பயன் அடையும் கல்லூரி மாணவிகளில் வறுமைக் கோட்டு கீழ் உள்ள தாயார்கள் இதில் பயன் அடைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

    இதுபோல 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதி யோர் உதவித்தொகை வழங்குவதில் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    குடும்பத் தலைவிகளுக்கு தான் உரிமைத் தொகை என்பதால் ரேசன் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது இல்லை. தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் பணம் சென்றடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் இந்த திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    எனவே குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக அமைச்சரவை கூடி ஒப்புதல் வழங்கியதும், விரிவான அரசாணை வெளியிடப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எச்.டி.எப்.சி வங்கியின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
    • 12 மாணவ, மாணவியர்களுக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் வழங்கினார்.

    சென்னை

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் 120 மாணவர்களுக்கு எச்.டி.எப்.சி வங்கியின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்ட 39 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையினை வழங்கிடும் அடையாளமாக 12 மாணவ, மாணவியர்களுக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, செல்வி அபூர்வா, ம. கோவிந்த ராவ், எச்.டி.எப்.சி வங்கி தலைவர் குமார் சஞ்சீவ், மண்டல தலைவர் ரமேஷ் வங்குரி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    • எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில் உதவித் மாதம் தோறும் வழங்கப்படுகிறது.
    • அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். www.tnvelaivaaippu.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

    படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில், மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.400, மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600, வீதம் 3 ஆண்டு காலத்திற்கும் மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கான உதவித் தொகை இனி வரும் காலங்களில் மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.750, மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வீதம் 10 ஆண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் மாதம் தோறும் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் தற்பொழுது 01.10.2022 முதல் 31.12.2022 வரையிலான காலாண்டிற்கு மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர்களும், மேலும் இம்மையத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள் ஆவார். மேற்கண்ட தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். www.tnvelaivaaippu.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்விண்ணப்பத்தில் 7- பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலரிடம் கையொப்பம் பெற்று வருமாறு தெரிவிக்கப்ப டுகிறது. சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித் தொகை வழங்கப்படும். இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்கள், உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.  

    • 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • 2 வருடங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும்.

    சேலம்:

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்வின் மூலம் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 2 வருடங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும். அதன்படி முதன் முதலாக நடப்பாண்டு தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது.

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, சேலம் கல்வி மாவட்டத்தில் 2,668 பேரும், சேலம் ஊரகத்தில் 2,082 பேரும், சங்ககிரியில் 1,894 பேரும், ஆத்தூரில் 2,385 பேரும், எடப்பாடி கல்வி மாவட்டத்தில் இருந்து 2,522 மாணவர்களும் என மொத்தம் 11,551 மாணவர்கள் இத்தேர்வினை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக 27 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடந்தது.

    தேர்வில் 10ம் வகுப்பு தர நிலையிலுள்ள, தமிழ் பாடத்திட்டத்தின் அடிப்படையில், கொள்குறி வகையில் வினாக்கள் கேட்கப்பட்டன. இத்தேர்வை 11,108 பேர் கலந்து கொண்டு எழுதினர். விண்ணப்பித்திருந்த 443 பேர் தேர்வெழுத வரவில்லை. அறை கண்காணிப்பாளர், பறக்கும்படையினர் என 700க்கும் மேற்பட்டோர் தேர்வு பணியில் ஈடுபட்டனர். 

    • புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
    • மாணவிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் நேரடியாக செலுத்தப்படும்.

    கோவை, செப்.6-

    தமிழகத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருமண உதவித் திட்டம் ரத்து செய்யப்பட்டு, மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது.

    இத்திட்டத்தின்கீழ் 6 முதல் பிளஸ்-2 வரை அரசுப் பள்ளியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    தமிழகத்தில் உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தாா்.

    இதனைத் தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் தொடக்க விழா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் 199 கல்லூரிகளைச் சோ்ந்த 3,596 மாணவிகள் இணைக்கப்பட்டுள்ளனா்.

    அவா்களில் முதல்கட்டமாக 620 மாணவிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.1000 உதவித் தொகையை அமைச்சா் செந்தில்பாலாஜி வழங்கினாா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சமீரன், கோவை எம்.பி. பி.ஆா்.நடராஜன், மேயா் கல்பனா ஆனந்தகுமாா், துணை கமிஷனர் ஷா்மிளா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தா் கீதாலட்சுமி, மாவட்ட சமூகநல அலுவலா் தங்கமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    புதுமைப் பெண் திட்டம் குறித்து சமூகநலத் துறை அதிகாரிகள் கூறிய தாவது:-

    அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளின் உயா்கல்வி சோ்க்கையை அதிகரிக்கும் வகையிலும் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதி திட்டத்தின்கீழ் 6 முதல் பிளஸ்-2 வரை அரசுப் பள்ளியில் படித்து உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 மாணவிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ந் தேதி நேரடியாக செலுத்தப்படும்.

    மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவிகள் 6 முதல் பிளஸ்-2 வரை தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழகத்தில் உயா்கல்வி படிப்பவராக இருத்தல் வேண்டும்.

    தனியாா் பள்ளியில் இலவச கல்வி திட்டத்தின்கீழ் 6 முதல் 8 -ம் வகுப்பு வரை பயின்று பின்னர் 9 முதல் பிளஸ்-2 வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவிகளும் பயன்பெற முடியும்.

    இத்திட்டத்துக்காக புதிதாக உருவாக்கப்ப ட்டுள்ள இணையதளத்தில் மாணவிகள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.இத்திட்டம் தொடா்பான சந்தேகங்களுக்கு 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நுழைவுத் தோ்வு மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
    • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய தோ்வு முகமையின் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயிலும் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதார நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சாா்ந்த 15 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நுழைவுத் தோ்வு மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமு றைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    2022-2023-ம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய தோ்வு முகமையால் நுழைவுத் தோ்வு நடத்தப்பட உள்ளது.

    நுழைவுத் தோ்வு தொடா்பான விவரங்களை இணையதளத்தில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம். கணினி வழியில் நுழைவுத் தோ்வு நடைபெறும்.

    தோ்வு செய்யப்படும் 9, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆண்டிற்கு ரூ.75 ஆயிரம், 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டிற்கு ரூ.1,25,000, பள்ளிக் கட்டணம், விடுதிக் கட்டணங்கள் சோ்த்து கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும், மேலும் மாணவ, மாணவிகளால் அளிக்கப்பட்டுள்ள விவரங்களை சரிசெய்து கொள்ள நாளை முதல் 31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தோ்வுக்கான நுழைவுச்சீட்டு வருகிற 5-ந் தேதி இணைய தளத்தில் வெளியிடப்படும். 11 -ந் தேதியன்று தோ்வு நடைபெறுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும்போது தொலைபேசி எண், ஆதாா் எண், ஆதாா் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.

    மேலும், இத்திட்டம் தொடா்பான அனைத்து விவரங்களும் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • கலெக்டர் அரவிந்த் தகவல்
    • ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை யில்லை.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒருவருடம் முடிவடைந்துள்ள அனைத்து வகை வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திற ளாளி பதிவுதாரர்களுக்கு பள்ளியிறுதி வகுப்பிற்கு கீழ் மற்றும் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600-ம் பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000-ம் உதவித்தொகையாக 10 ஆண்டுகள் தொடர்ந்து தமிழக அரசால் வழங்கப் பட்டு வருகிறது.

    இந்த உதவித்தொகை இதுகாறும் காலாண்டு வாரியாக (3 மாதங்களுக்கு ஒருமுறை) கணக்கிடப்பட்டு பயனாளி களது வங்கி கணக்கில் வரவுவைக்கப்பட்டு வந்தது. மாற்றுத்திறனாளி பயனாளிகள் இந்த உதவித்தொகையினை மாதந்தோறும் பெற்று பயன்பெறும் வகையில் காலாண்டிற்கு ஒருமுறை வழங்குவதிலிருந்து விலக்களித்து மாதந்தோறும் வழங்குவதற்கு அரசால் அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    ஜூலை மாதத்திலிருந்து தற்போதைய அரசா ணைப்படி மாதந்தோறும் மாற்றுத்திறனாளி பயனா ளிகளின் வங்கி கணக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம், நாகர்கோவில் மூலம் உதவித்தொகை வரவு வைக்கப்படும். இந்த உதவித்தொகையினை பெற மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராகவே இருக்க வேண்டும். அரசிட மிருந்து வேறு எந்த வகை யிலும் எந்தவிதமான உதவித்தொகையும் பெறுப வராக இருத்தல்கூடாது. கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ மாணவியராக இருக்கக் கூடாது.

    பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பயின்றுவரும் பதிவுதாரர்களுக்கும் பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவ சாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்த பதிவுதாரர்களுக்கும் வேலைவாய்ப்பற்றோர். நிவாரணம் பெற இயலாது. மேற்கூறிய தகுதி மற்றும் விருப்பமுடைய பதிவுதாரர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ். மாற்றுக் கல்விச்சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலசு பதிவு அடை யாள அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் வருகை தந்து உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை யில்லை. 10 ஆண்டுகளுக்கு குறைவாக இத்திட்டத்தின்கீழ் உதவித்தொகையை பெற்றுவரும் மாற்றுத்திற னாளி பயனாளிகள் இந்த உதவித்தொகையினை தொடர்ந்து பெறவேண்டு மானால் சுய உறுதிமொழி ஆவணத்தை அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    ×