search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்"

    • காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள 40 தொகுதிகளில் 23 தொகுதிகளை பா.ஜனதாவிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளது.
    • 20 தொகுதிகளை பா.ஜனதா தக்கவைத்துக்கொண்டது. காங்கிரசிடம் இருந்த 4 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

    குஜராத்தில் இமாலய வெற்றியை ருசித்த பா.ஜனதா இமாச்சல பிரதேசத்தில் கைவசம் இருந்த ஆட்சியை இழந்தது ஏன் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது. கடந்த 37 ஆண்டுகளாக மாறி மாறிதான் ஆட்சிகள் அமைந்துள்ளன.

    ஆனால் இந்த முறை அந்த சரித்திரம் மாறும். மீண்டும் பா.ஜனதா தான் ஆட்சி அமைக்கும் என்றே கருத்துக்கணிப்புகளும் தெரிவித்தன. கணிக்க முடியாத அளவுக்கு தான் கள நிலவரம் இருந்து இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

    மொத்த தொகுதிகள்-68 காங்கிரஸ் வென்ற தொகுதிகள்-40, பா.ஜனதா வென்ற தொகுதிகள்-25. ஆட்சி அமைக்க 35 தொகுதிகள் தான் தேவை. ஆனால் 'கை' கைப்பற்றி இருப்பது 40 தொகுதிகள். அப்படி இருந்தும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் இமாலய வெற்றி என்று சொல்ல முடியவில்லை.

    நூலிழையில் தான் காங்கிரஸ் வென்றுள்ளது. அதே போல் நூலிழையில் தான் பா.ஜனதா வெற்றி வாய்ப்பை இழந்தும் இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரசுக்கு 43.9 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது.

    பா.ஜனதாவுக்கு 43 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. அதாவது 1 சதவீதத்தை விட குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் வென்றுள்ளது. கடுமையான இழுபறிக்கு இடையே தான் காங்கிரஸ் கரையேறி இருக்கிறது.

    2017 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதில் இருந்து 19 தொகுதிகளை பா.ஜனதா இழந்துள்ளது. அந்த தொகுதிகள் காங்கிரசுக்கு கை கொடுத்துள்ளது.

    பா.ஜனதாவை விட காங்கிரஸ் 15 தொகுதிகள் அதிகம் பெற்றுள்ளது. ஆனால் 18 தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே பா.ஜனதா தோற்றுள்ளது.

    காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள 40 தொகுதிகளில் 23 தொகுதிகளை பா.ஜனதாவிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளது. 20 தொகுதிகளை பா.ஜனதா தக்கவைத்துக்கொண்டது. காங்கிரசிடம் இருந்த 4 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

    9 தொகுதிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. ஆனால் 4 தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா 25 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. 50 சதவீதம் வாக்குகளை காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், பா.ஜனதா 9 தொகுதிகளிலும் பெற்றுள்ளது.

    இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை ஒரு கோடிக்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய மாநிலம். சிம்லா, குலுமணாலி, தர்மசாலா ஆகிய சுற்றுலா தலங்கள் புகழ் பெற்றவை. ஆப்பிள் விவசாயம் தான் முக்கியமான தொழில்.

    அங்கு வாழும் மக்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கிராமப்புறங்களிலேயே வசிக்கிறார்கள். இந்த தேர்தலில் நகர்புறத்தில் பா.ஜனதா 43.2 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 6.2 சதவீதம் குறைவு ஆகும்.

    ஆனால் காங்கிரஸ் 44 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலை விட 2.6 சதவீதம் அதிகம் ஆகும். இதற்கு காரணம் நகர் பகுதியில் சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராடுகிறார்கள்.

    இதை காங்கிரஸ் கெட்டியாக பிடித்துக் கொண்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்றார்கள். அதை நம்பி நகர்புறத்தின் வாக்குகள் காங்கிரசுக்கு சாதகமாக விழுந்துள்ளது.

    இதேபோல் புறநகர் பகுதிகளில் 10 சதவீதமும், கிராம பகுதிகளில் 4 சதவீதம் வரையிலும் வாக்குசதவீதம் குறைந்துள்ளது. 6 முறை அந்த மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் தலைவர் வீரபத்ர சிங் அண்மையில் காலமாகிவிட்டார். அவரது மனைவி தற்போது காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். எனவே அந்த அனுதாபமும் வெற்றியை தேடி கொடுத்திருக்கலாம்.

    தேர்தல் தோல்விக்கான காரணங்களை பா.ஜனதா ஆராய்ந்து வருகிறது. விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும். முக்கியமாக பிரபலங்கள் சிலர் இரு கட்சிகளிலும் தோற்றுள்ளனர்.

    காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக கருதப்பட்ட ஆஷா குமாரி, தோல்வி அடைந்தார். பா.ஜனதாவை சேர்ந்த ஜெய்ராம் தாக்கூர், ஜெய்ராம் ரமேஷ், வீரேந்திர குமார், அனில் சர்மா ஆகியோரும் வெற்றி வாகை சூடி இருக்கிறார்கள்.

    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக தேர்தல் முடிவு அமைந்து உள்ளதால் இமாச்சலப்பிர தேசத்தில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • அம்மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஆளும் கட்சி வெற்றி பெறுவது இல்லை என்ற நிலை உள்ளது.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஓட்டு எண்ணிக்கையில் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

    இமாச்சல பிரதேசத்தில் எப்படியும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா உள்ளது. அதே போல் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் ஆர்வத்துடன் இருக்கிறது.

    ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா குதிரை பேரம் போன்ற நடவடிக்கையில் ஈடுபடலாம் என காங்கிரஸ் கருதுகிறது. இதனால் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா பக்கம் தாவி விடாமல் இருப்பதற்காக அவர்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பத்திரமாக ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தனி பஸ்கள் மூலம் அவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கு அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மற்றும் மூத்த தலைவர் பூபேந்திர சிங்கோடா ஆகியோர் செய்து வருகின்றனர். இந்த பணிகளை காங்கிரஸ் மேலிடம் அவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறது. இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகளை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உன்னிப்பாக கவனித்து வருகிறார். இன்று பிற்பகல் அவர் சிம்லா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக இந்த தேர்தல் முடிவு அமைந்து உள்ளதால் இமாச்சலப்பிர தேசத்தில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அம்மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஆளும் கட்சி வெற்றி பெறுவது இல்லை என்ற நிலை உள்ளது. இதனால் இம்முறை காங்கிரஸ் ஆட்சியை பிடித்து விடும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    அதே சமயம் இந்த வரலாற்றை முறியடித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற துடிப்பில் பாரதிய ஜனதா உள்ளது. இதனால் இமாச்சல பிரசேத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • 68 இடங்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
    • இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

    சட்டசபை தேர்தல் நடைபெற்ற குஜராத், இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 68 இடங்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

    இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    பாஜக 31 இடங்களிலும், மற்றவை- 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

    • குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    • வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    அகதாபாத்:

    குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்தவகையில் 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ந்தேதியும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

    68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.

    இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் 68 வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் முடிந்து சுமார் 1 மாதமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும் வாக்குகள் அனைத்தும் இந்த மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன.

    இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவினர் இங்கும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டனர். அதேநேரம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிரமாக களத்தில் வரிந்து கட்டியிருந்தன.

    மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர் ஆதரவு தேவைப்படும் நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பது கடினம் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    எனினும் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க முடியும் என பா.ஜனதா நம்பிக்கை தெரிவித்து உள்ளது. அதேநேரம் இழந்த ஆட்சியை கைப்பற்றுவோம் என காங்கிரசும் நம்பிக்கையுடன் இருக்கிறது.

    இதில் யாருடைய கனவு பலிக்கும்? என்பது இன்று தெரிந்து விடும்.

    இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    • குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
    • தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும் என தெரிவித்தன.

    புதுடெல்லி:

    குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 1-ம் தேதி முதற்கட்ட தேர்தலும், 5-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.

    இதேபோல், 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்திற்கு கடந்த 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. குஜராத்தில் 182 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்தன.

    இதேபோல, இமாச்சல பிரதேசத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கலாம் என கருத்துக் கணிப்புகள் கூறின.

    இந்நிலையில், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதியத்துக்கு மேல் மகுடம் சூடப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

    • குஜராத் தேர்தலிலும் ஆம் ஆத்மி படு தோல்வியை சந்திக்கும்.
    • பல்வேறு மாநில தேர்தல்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.


    டெல்லி மாநகராட்சித் தேர்தலையொட்டி படேல் நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளதாவது:

    வாரணாசி மக்களவைத் தேர்தலில் மோடியை எதிர்த்து போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் மண்ணை கவ்வினார். அதன் பிறகு, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கோவா சட்டசபை தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி, போட்டியிட்டது. அதன் வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர்.

    தற்போது இமாச்சல் பிரதேசத்தில் அவர்கள் (ஆம் ஆத்மி) 67 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள். எல்லா இடங்களிலும் அவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்று நான் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்கிறேன். குஜராத் தேர்தலிலும் அவர்கள் இதே நிலையை சந்திப்பார்கள்.

    கடந்த 5 ஆண்டுகளில் டெல்லியில் பாஜக ஆட்சி செய்த மாநகராட்சிகளில் பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் கெஜ்ரிவால் அரசு செயல்படுத்திய இரண்டு திட்டங்களை சிசோடியாவால் சொல்ல முடியுமா என சவால் விடுகிறேன்.

    சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சருக்கு மசாஜ் வசதியை ஏற்பாடு செய்து தருகிறார்கள். இது போன்ற அது பல நல்ல வேலைகளை ஆம் ஆத்மி அரசு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • இமாச்சல பிரதேச வாக்காளர்கள் ஓட்டுப்பதிவில் புதிய சாதனை படைக்க வேண்டும்.
    • முதல் முறையாக ஓட்டு போட்டுள்ள இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஜனநாயக திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்று மக்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும். இமாச்சல பிரதேச வாக்காளர்கள் ஓட்டுப்பதிவில் புதிய சாதனை படைக்க வேண்டும். முதல் முறையாக ஓட்டு போட்டுள்ள இளம் வாக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பழைய ஓய்வூதிய திட்டத்துக்காக இமாச்சல பிரதேச மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். வேலை வாய்ப்புக்கான வாக்களிப்பாகவும் இருக்கும். மக்கள் அதிகளவில் வந்து தங்களது மதிப்பு மிக்க வாக்குகளை செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இமாச்சல பிரதேசத்தில் 55 லட்சத்து, 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் உள்ளனர்.
    • முதல்முறை வாக்காளர்கள் 43,173 பேர் ஆவார்கள். 68 தொகுதியில் 17 எஸ்.சி. பிரிவினருக்கானது. 3 தொகுதி எஸ்.டி. பிரிவினருக்கானது.

    ஷிம்லா:

    68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருந்தது.

    அதன்படி இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகள் களத்தில் நிற்கின்றன. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. இதையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.

    மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பா.ஜனதாவும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் களத்தில் நிற்கிறது.

    இது தவிர மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 11 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 53 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு ஒரு தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மற்றவை 45 தொகுயில் நிற்கின்றன. சுயேட்சைகள் 99 பேர் போட்டியிடுகிறார்கள். 412 வேட்பாளர்களில் 24 பேர் பெண்கள் ஆவார்கள்.

    இமாச்சல பிரதேசத்தில் 55 லட்சத்து, 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல்முறை வாக்காளர்கள் 43,173 பேர் ஆவார்கள். 68 தொகுதியில் 17 எஸ்.சி. பிரிவினருக்கானது. 3 தொகுதி எஸ்.டி. பிரிவினருக்கானது.

    மொத்தம் 7,881 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 157 வாக்குப்பதிவு மையம் பெண்கள் மட்டுமே வாக்களிக்க கூடியதாகும். கடந்த தேர்தலை விட கூடுதலாக 356 வாக்கு சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

    இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை நீண்ட காலமாக ஒரு கட்சி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்தது இல்லை. ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதாவும், ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரசும் போராடி வருகிறது.

    • பிரியங்கா கடந்த மாதம் 31-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார்.
    • பூபேஷ்பாகல், பிரதாப் சிங் பஜ்வா, சச்சின் பைலட் போன்ற தலைவர்களும் காங்கிரசுக்கு பிரசாரம் செய்தனர்.

    புதுடெல்லி:

    68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அங்கு பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினர்.

    காங்கிரஸ் கட்சி அங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறது. பிரியங்கா கடந்த மாதம் 31-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார். பூபேஷ்பாகல், பிரதாப் சிங் பஜ்வா, சச்சின் பைலட் போன்ற தலைவர்களும் காங்கிரசுக்கு பிரசாரம் செய்தனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    அவர் நாளையும், 9-ந்தேதியும் அங்கு பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு சட்டசபை தேர்தலை முதல் முறையாக சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இமாச்சல பிரதேசத்தை பொறுத்த வரை எந்த கட்சியும் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது இல்லை. அங்கு பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி 3-வது அணியாக களம் இறங்குகிறது.

    ×