search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இப்தார் நிகழ்ச்சி"

    • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    • நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர்.

    துபாய்:

    ரமலான் நோன்பையொட்டி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பள்ளிவாசல்கள், கூடாரங்களில் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர். இந்த நிலையில் உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. விமானங்கள் தரையிறக்கப்படும் ஓடுபாதையில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பேரீச்சம் பழம், தண்ணீர், ஜூஸ், பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    இந்த நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர். அவர்கள் நோன்பை திறந்த போது விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது நடந்து கொண்டிருந்தது.


    இது குறித்து துபாய் விமான நிலைய அதிகாரி கூறும்போது, துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான சூழலில் வேலை செய்து வந்தவர்கள் அதனை மறந்து பலரும் விளையாட்டாக பேசிக் கொண்டு மன இறுக்கத்தை மறந்து செயல்பட்டனர்.

    விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

    துபாயில் கின்னஸ் உலக சாதனைகள் பல வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விமான ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

    • மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் மாவட்டத் தலைவர் வாவா ராவுத்தர் தலைமையில் நடந்தது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முதுகுளத்தூர் நகர முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் வாவா ராவுத்தர் தலைமையில் நடந்தது. நகர தலைவர் சேட் ஜாகிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சம்சுகனி, பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட துணை செயலாளர் சல்மான் ரபீக் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக இஸ்லாமிய பிரசார பேரவையின் மாவட்ட பொறுப்பாளர் தாஹிர் சைபுதீன், துரைப்பாண்டியன், ஆசிரியர் முருகன், காங்கிரஸ் பூவலிங்கம், இமாம் அப்துல் மஜீத், ஓம் சக்தி வழிபாட்டு மன்ற குழு தலைவர் பழனிச்சாமி மற்றும் முஸ்தபாபுரம் ஜமாத்தார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜமீல் அகமது நன்றி கூறினார்.

    • சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
    • மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை தாங்கினார். ம.ம.க. மாவட்ட செயலாளர் ஜிப்ரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக த.மு.மு.க. மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா பங்கேற்று பேசினார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்த்தன், முத்துப்பட்டினம் பங்குத்தந்தை அற்புத அரசு, வடக்கு பள்ளி தலைவர் சாகுல்அமீது,தெற்கு பள்ளி தலைவர் அப்துல் சலாம், யூனியன் தலைவர்-மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் ராதிகா பிரபு, மாநில விவசாய அணி செயலாளர் நல்ல சேதுபதி, ஒன்றிய பொறுப்பாளர் காந்தி, கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜன், ஒன்றிய சேர்மன் சேகர்,ஒன்றிய பிரதிநிதி சந்திரசேகரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர்-கவுன்சிலர் புரோஸ் கான், 3-வது வார்டு கவுன்சிலர் பாண்டி, ராம்கோ மேலாளர் மரியக்கண்ணு, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வெற்றிவேல், ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் நாசிர் உசேன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

    த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஜாவித் அசாம், மாவட்டத் துணைத் தலைவர் அகமது இப்ராகிம், மாவட்டத் துணைச் செயலாளர்கள் உபயத்துல்லா, நிசார், சாகுல் ஹமீது மலேசிய மண்டல செயலர் இர்ஷாத் , ஒன்றிய தலைவர் உமர் அலி, ம.ம.க. ஒன்றிய செயலாளர் முகமது இக்சானுல்லா, த.மு.மு.க. ஒன்றிய செயலாளர் ரைசுல் இஸ்லாம், திருவாடனை ஒன்றிய ம.ம.க. செயலர் காமராஜ், தொண்டி பேரூர் காதர், ம.ம.க. செயலர் பரக்கத், பொருளாளர் மைதீன் முன்னிலை வகித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை த.மு.மு.க. கிளை தலைவர் ஜம்ரி, ம.ம.க. செயலாளர் இப்ராகிம், த.மு.மு.க. செயலாளர் மஹாதீர் ரகுமான், ம.ம.க. செயலாளர் சுலைமான், துணைச் செயலாளர் மஹாதீர், சபீக் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
    • முடிவில் த.மு.மு.க நகர தலைவர் முகமது அமீன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் த.மு.மு.க, ம.ம.க. சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. த.மு.மு.க மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை தாங்கினார். இதில் ஹூசைன் ஆலிம் சிறப்புரையாற்றினார். அவைத்தலைவர் சைபுதீன், ராமநாதபுரம் நகரசபைத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், நகர்மன்ற உறுப்பினர் காதர் பிச்சை, ஆற்றாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முகமது அலி ஜின்னா, த.மு.மு.க மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகீம், செயலாளர் அப்துல் ரஹீம், நகர செயலாளர் முகமது தமீம், நகர் தலைவர் முகமது அமீன், மாவட்ட செயலாளர் முகமது ஆசிக் சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் த.மு.மு.க நகர தலைவர் முகமது அமீன் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
    • மாவட்ட துணைத்தலைவர் லூர்து முன்னிலை வகித்தார்.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி கோரிப்பாளையம்-கான்சாபுரம் மெயின்ரோடு ரம்ஜான் மினி மகாலில் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் முகமது அலி தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணைத்தலைவர் லூர்து முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் லாரன்ஸ் வரவேற்றார். சி.எஸ்.ஐ. பேராயர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் விஜயராஜன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் அலாவுதீன், அருட்தந்தை பெனடிக் பர்ணபாஸ், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி, வடக்கு மண்டல தலைவர் சரவணா புவனே சுவரி, முகேஷ்.

    கவுன்சிலர் உமா ரவி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் கணேச மூர்த்தி, பொருளாளர் ஜான்சன், துணை செயலாளர் போனி பேஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மண்டல பொறுப்பாளர் அவ்தா காதர், தி.மு.க. வட்டச்செயலாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் இனிய அரசன் ஆகியோர் பேசினர்.

    மாவட்டக்குழு உறுப்பினர் சாகுல் அமீது நன்றி கூறினார்.

    ×