search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் டிக்கெட்"

    • ஏழுமலையான் கோவிலில் ராம நவமி விழா இன்று நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராம நவமி விழா இன்று நடந்தது. கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் காலை 9 மணியில் இருந்து காலை 11 மணி வரை சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சேநயருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அனுமந்த வாகன சேவை நடக்கிறது. இரவு 10 மணியில் இருந்து இரவு 11 மணி வரை கோவிலில் உள்ள தங்க வாசல் அருகில் ராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது.

    திருப்பதி கோவிலில் நேற்று 67 ஆயிரத்து 294 பேர் சாமி தரிசனம் செய்தனர். 22,765 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.94 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 6 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி கோவில் ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் வருகிற 22-ந்தேதியும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் 23-ந்தேதியும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளி பக்தர்கள் 23-ந்தேதி மதியம் 3 மணிக்கு அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

    ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    • வரும் 8ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
    • டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம்.

    ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வரும் 8ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டிக்கெட் வரும் 5ம் தேதி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, காலை 9.30 மணிக்கு பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தில் ஆன்லைனில் நடைபெறும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை.

    இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்தார்.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    சேப்பாக்கத்தில் 22ம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்றதாக சர்ச்சை எழுந்தது.

    • சனி பெயர்ச்சி விழாவிற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர்.
    • பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் அருகே பிரமாண்ட ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

    திருநள்ளாறு:

    திருநள்ளாறில் உலகபுகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சி விழா வருகிற 20-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் சனீஸ்வரர் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.

    சனி பெயர்ச்சி விழாவிற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதையொட்டி சனிப்பெயர்ச்சி விழா அழைப்பிதழை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.

    பின்னர் கலெக்டர் குலோத்துங்கன் கூறுகையில், சனி பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக காரைக்கால் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து கோவிலுக்கு 25 பஸ்கள் இலவசமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் அருகே பிரமாண்ட ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

    சனிப்பெயர்ச்சி தரிசனத்துக்காக ஆன்லைன் டிக்கெட்டுகள் 15-ந்தேதி முதல் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது என்றார்.

    ×