கன்னியாகுமரி: விவேகானந்தர் பாறை படகு பயணத்திற்கு இனி ஆன்லைனில் டிக்கெட் கிடைக்கும்

விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். முன்னதாக கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்தது.
கன்னியாகுமரி: விவேகானந்தர் பாறை படகு பயணத்திற்கு இனி ஆன்லைனில் டிக்கெட் கிடைக்கும்
Published on

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சூரிய உதயம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று ( ஆகஸ்ட் 08) முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்த நிலையில், https://www.psckfs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com