search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திரபிரதேசம்"

    ஆந்திரபிரதேசம் மாநில முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு, திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். #TeluguDesam #ChandrababuNaidu #ElectionCampaign #TirupatiVenkateswaraSwamyTemple
    அமராவதி:

    ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அத்துடன், சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

    இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.



    பிரசாரம் தொடங்குவதற்கு முன்னதாக, திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் இன்று மாலை நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு 
    பங்கேற்று உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #TeluguDesam #ChandrababuNaidu #ElectionCampaign #TirupatiVenkateswaraSwamyTemple 
    ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் குண்டு பாய்ந்து காயமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #AndhraPradeshAssemblyElection #TDP #Candidateinjuredingunfire
    அமராவதி:

    ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அத்துடன், சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

    இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மந்திராலயம் தொகுதி வேட்பாளராக டிக்கா ரெட்டி போட்டியிடுகிறார். இவர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    மந்திராலயம் தொகுதியின் ககாய் பகுதியில் டிக்கா ரெட்டி தனது தொண்டர்களுடன் வந்தார். அப்போது அங்கிருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இவர்களை கண்டனர். இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்து வந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் டிக்கா ரெட்டி மற்றும் அவரது பாதுகாவலரின் காலில் குண்டு பாய்ந்தது.

    காயமடைந்த இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #AndhraPradeshAssemblyElection #TDP #Candidateinjuredingunfire
    ஆந்திர மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவரை காதலித்த பெண்ணை அவரது தந்தையே கொலை செய்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #HonourKilling #AP
    ஐதராபாத்:

    ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நாகிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சைதன்யா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆவுலையா என்பவரின் மகள் இந்திரஜாவை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இந்திரஜாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில், கிராமத்தின் ஒதுக்குபுறத்தில் இந்துஜாவின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த விசாரணையில், தந்தை ஆவுலையா தான் தனது மகளை கொலை செய்து எரித்துவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்துஜாவின் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

    தாழ்ந்த ஜாதி வாலிபரை காதலித்ததாக தனது மகளையே கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #HonourKilling #AP
    ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு இராட்சத ராட்டினம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும் 6 குழந்தைகள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். #giantwheelcrash
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஜூனியர் கல்லூரி மைதானத்தில் பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதாலும், கோடை விடுமுறை காலம் என்பதாலும் பொருட்காட்சியில் பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர்.

    இந்நிலையில், பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இராட்சத இராட்டினம் வேகமாக இயங்கிக்கொண்டிருந்த போது அதன் பெட்டி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அம்ருதா என்ற 10 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



    மேலும் 6 பேர் படுகாயங்களுடன் அனந்த்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அந்த ராட்டினத்தின் போல்ட்டுகள் தளர்ந்திருப்பதாக ராட்டினத்தினை இயக்குபவரிடம் எச்சரிக்கை செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததால், அதனை கண்டுகொள்ளவில்லை எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, அந்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விபத்து குறித்து முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. #giantwheelcrash
    ×