என் மலர்

  செய்திகள்

  திருப்பதி கோயிலில் தரிசனத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு
  X

  திருப்பதி கோயிலில் தரிசனத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திரபிரதேசம் மாநில முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு, திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். #TeluguDesam #ChandrababuNaidu #ElectionCampaign #TirupatiVenkateswaraSwamyTemple
  அமராவதி:

  ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அத்துடன், சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

  இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.  பிரசாரம் தொடங்குவதற்கு முன்னதாக, திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

  ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் இன்று மாலை நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு 
  பங்கேற்று உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #TeluguDesam #ChandrababuNaidu #ElectionCampaign #TirupatiVenkateswaraSwamyTemple 
  Next Story
  ×