search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு நிலம்"

    • செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
    • ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    தாம்பரம்:

    சென்னை கன்டோன் மென்ட் பல்லாவரம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த பல ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து அதில் வீடுகள் கட்டி வசித்து வந்தனர்.

    இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. கலெக்டரின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக அகற்றி, அரசு நிலத்தை மீட்க கலெக்டர் ராகுல்நாத் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.

    இதையடுத்து இன்று காலை பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் அரசு நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், வீடுகளை பூட்டி சீல் வைத்தனர்.

    வீடுகளை பூட்டி சீல் வைப்பதற்கு முன்பு அதில் இருந்த பொருட்களை வெளியே எடுத்துச் செல்ல அங்குவசித்து வந்தவர்களுக்கு அனுமதி அளித்தனர். பொருட்கள் அனைத்தும் எடுக்கப்பட்டதும் அதிகாரிகள் உடனடியாக வீட்டினை பூட்டி சீல் வைத்தனர். மேலும் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் முழுவதையும் மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.200 கோடி ஆகும். பின்னர் அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இதையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • கோவிலுக்கு சொந்தமாக 0.85 ஏக்கர் நிலம் கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ளது.
    • இந்த அரசு பொறுப்பேற்ற 7.5.2021 முதல் இன்று வரை ரூ.5,377 கோடி மதிப்பிலான 5,773.30 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

    சென்னை, மணப்பாக்கம், குழலி அம்மன் என்கின்ற கோலியம்மன் கோவிலுக்கு சொந்தமாக 0.85 ஏக்கர் நிலம் கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ளது. இந்நிலத்தினை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் சென்னை மண்டலம் இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படியும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படியும் இன்று சென்னை மண்டல உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) சி.நித்யாவின் முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.63 கோடியாகும்.

    இந்த அரசு பொறுப்பேற்ற 7.5.2021 முதல் இன்று வரை ரூ.5,377 கோடி மதிப்பிலான 5,773.30 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது கோவில் செயல் அலுவலர் சக்தி, சிறப்பு பணி அலுவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • சுற்று சுவர் மற்றும் இரும்பு தகடுகளால் கொட்டகை அமைத்து இருந்தனர்.
    • சொத்தின் மதிப்பு ரூ.1½ கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு, பத்மாவதி நகரில் பூங்காவுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. அதில் சுற்று சுவர் மற்றும் இரும்பு தகடுகளால் கொட்டகை அமைத்து இருந்தனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நகராட்சி கமிஷனர் இளம்பரிதி தலைமையில் ஊழியர்கள் அதிரடியாக பூங்கா ஆக்கிரமிப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டனர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.1½ கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு நிலம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டனர்.

    பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் கிராமத்தில் தாங்கல் நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இது குறித்து வருவாய் துறைக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு நிலம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டனர். அப்போது மண்டல துணை வட்டாட்சியர் தேன்மொழி, வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா, நில அளவையர் சுமன், ஊராட்சித் தலைவர் பாபு, கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் உடன் இருந்தனர்.

    • தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1000 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டியளித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழக அரசால் 1910-ம் ஆண்டில் தோட்டக்கலை சங்கத்திற்கு 23 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. காலப்போக்கில் இந்த நிலம் தனிநபர் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. 1989-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க நடவடிக்கை ேமற்கொண்டார்.

    இதன் தொடர்ச்சியாக 2009-ம் ஆண்டில் 17 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு, அங்கு செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு மீதியிருந்த நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இந்த நிலம் அ.தி.மு.க. பிரமுகர் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்பவரின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீ்ட்க நடவடிக்கை எடுத்தார்.

    அந்த வகையில் ஆக்கிரமிப்பில் மீதம் இருந்த 6 ஏக்கர் நிலங்களை மீட்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேற்று தமிழக அரசின் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் அந்த இடத்தை கையகப்படுத்தி சீல் வைத்தார். இதன் சந்தை மதிப்பு ரூ.1000 கோடியாகும்.

    தொடர்ந்து தமிழகம் முழுவதும் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருவாய்த் துறையினருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்திருந்தனர்.
    • தாசில்தார் தலைமையில், போலீசாரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    திருப்பூர் :

    அவிநாசியில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்ப ட்டிருந்த வருவாய் துறைக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது.

    அவிநாசி, மேற்கு ரத வீதியில், க.ச.எண் 85டி/15ல், சர்க்கார் புறம்போக்கு நிலம், வருவாய்த் துறையினருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இதனை தொடர்ந்து, தாசில்தார் சுந்தரம் தலைமையில், அவிநாசி போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

    இதில், துணை தாசில்தார் குணசேகரன், மண்டல துணை தாசில்தார் சாந்தி, ஆர்.ஐ., அனிதா, வி.ஏ.ஓ., காமாட்சி, மின் வாரிய உதவி பொறியாளர் சிவசண்முகம் உள்ளிட்டோர் இருந்தனர். வருவாய் துறைக்கு சொந்தமான, 15 சென்ட் நிலம் வருவாய் துறையின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டது. தற்போதைய இதன் சந்தை மதிப்பு, 10 கோடி என தெரிவித்தனர்.

    • தாசில்தார் உத்தரவின் பேரில் நேற்று சங்கோதி பாளையத்தில் அளவீடு பணி நடைபெற்றது.
    • பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சங்கோதி பாளையம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே காரணம்பேட்டையில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் சங்கோதி பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள சங்கோதிபாளையத்தில், திருச்சி ரோட்டிற்கு செல்லும் மெயின் ரோடு அருகே, தனியார் நிறுவனத்திற்கு வழிப்பாதை அமைக்க மண் கொட்டி, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து தாசில்தார் உத்தரவின் பேரில் நேற்று சங்கோதி பாளையத்தில் அளவீடு பணி நடைபெற்றது. சர்வேயர் மற்றும் கிராம அலுவலர் உள்ளிட்டோர் அளவீடு பணியை மேற்கொண்டனர். இதற்கிடையே ஆக்கிரமிப்பு குறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சங்கோதி பாளையம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

    • வானூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுதரகோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
    • நிலத்தை மீட்டுதரகோரி விவசாயிகள் கோஷம் போட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தைலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காடு பகுதியில் நிலமற்ற ஆதி திராவிட விவசாயிகளுக்கு 11 ஏக்கர் நிலம் 1965-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை விவசாயிகள் ஒன்று திரண்டனர். அவர்கள் வானூர் தாலுகா அலுவலகம் முன்புபோராட்டம் செய்தனர். அப்போது நிலத்தை மீட்டுதரகோரி விவசாயிகள் கோஷம் போட்டனர்.

    அதன்பின்பு தாசில்தார் (பொறுப்பு)பிரபு வெங்கடேசிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

    • ரிச்சர்டு செல்லபாண்டியன்,பழையபேட்டை செக்கடி நாராயணசாமி கோவில் தெருவில் ஒரு இடத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளார்.
    • அந்த இடத்தை ஒரு பெண் ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது.

    நெல்லை:

    பாளை மகாராஜா நகர் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்டு செல்லபாண்டியன் (வயது 47). இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சிதம்பரநாதன் என்பவரிடம் இருந்து நெல்லை பழையபேட்டை செக்கடி நாராயணசாமி கோவில் தெருவில் உள்ள ஒரு இடத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிச்சர்டு செல்லபாண்டியன் வெளியூருக்கு சென்று விட்டார். சில நாட்களுக்கு பின்னர் வந்து அவரது அனுபவத்தின் கீழ் உள்ள இடத்தை பார்க்க வந்தபோது அங்கு ஒரு தற்காலிக குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லபாண்டியன் விசாரித்தபோது அந்த இடத்தை ஒரு பெண் ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து செல்லபாண்டியன் மாநகர போலீஸ் கமிஷனரிடம் நிலத்தை மீட்டு தருமாறு புகார் அளித்தார்.

    தொடர்ந்து அவர் இன்று கலெக்டர் விஷ்ணு தலைமையில் நெல்லை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி கூட்டத்திலும் அந்த மனுவை வழங்கினார்.

    அப்போது அவருடன் ஸ்ரீனிவாசன், அருணகிரி, விஷ்ணு, சக்திவேல், கோமதிநாயகம் உடனிருந்தனர்.

    ×