ரூ.2 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு

சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு நிலம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டனர்.
ரூ.2 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு
Published on

பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் கிராமத்தில் தாங்கல் நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இது குறித்து வருவாய் துறைக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு நிலம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டனர். அப்போது மண்டல துணை வட்டாட்சியர் தேன்மொழி, வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா, நில அளவையர் சுமன், ஊராட்சித் தலைவர் பாபு, கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com