search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் நாசர்"

    • மத்திய உணவு பாதுகாப்பு அமைப்பின் அறிவுறுத்தல் தென்மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில், இந்தி வார்த்தையான 'தஹி' என அச்சிட வேண்டும் எனவும், தமிழில் 'தயிர்' கன்னடத்தில் 'மோசரு' போன்ற வார்த்தைகளை அடைப்பு குறிக்குள் பயன்படுத்தலாம் என மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இந்த அறிவுறுத்தல் தென்மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி என சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

    இந்நிலையில், ஆவின் தயிர் பாக்கெட்களில் 'தஹி' என அச்சிடப்படாது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

    'ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என இந்தியில் அச்சிடப்படாது. மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி என்பதால் நடைமுறைப்படுத்த முடியாது' என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

    • ஒரு சில சங்கங்கள் மட்டுமே வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.
    • வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் நாளை பால் தட்டுப்பாடு ஏற்படாது என்றார் அமைச்சர் நாசர்.

    சென்னை:

    ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு 7 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஆவின் பால் உற்பத்தி குறைந்ததாக புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையை தொடர்ந்து நாளை முதல் திட்டமிட்டபடி பால் நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்றும், ஆவினுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்வது பாதிக்கப்படும் என்றும் பால் உறுத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், பால் கொள்முதல் விலை குறித்து அமைச்சர் நாசர் உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தாக அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில், பால் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் நாளை பால் தட்டுப்பாடு ஏற்படாது என பால்வளத் துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். ஒரு சில சங்கங்கள் மட்டுமே வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் பால்தட்டுப்பாடு இருக்காது என தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் அதிக அளவில் பணம் கொடுத்து பால் வாங்கியதால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காவிட்டால் நாளை முதல் ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம் என்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவித்திருந்தன.

    சென்னை:

    தமிழக எல்லையோர மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் அதிக அளவில் பணம் கொடுத்து பால் வாங்கியதால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல மாவட்டங்களில் பால் வினியோகமும் மிகவும் காலதாமதமாக செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கூட்டுறவு சங்க விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த 2 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கிடையே பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காவிட்டால் நாளை முதல் ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம் என்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவித்திருந்தன. அடுத்தடுத்து நடைபெறும் இந்த பதட்டம் காரணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை அழைத்து ஆவினில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களை அழைத்து அமைச்சர் நாசர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    • கூட்டுறவு சங்க விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த 2 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் அதிகளவில் பணம் கொடுத்து பால் வாங்கியதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டுறவு சங்க விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த 2 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்காதபட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சங்கங்கள் கலைக்கப்படும்.

    வடமாநிலங்களில் தோல் கழலை நோயினால் பல கறவை மாடுகள் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் இந்நோய் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.

    அண்டை மாநிலத்தினர் தமிழக எல்லையோர மாநிலங்களில் இருந்து, தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் அதிகளவில் பணம் கொடுத்து பால் வாங்கியதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    பால் தட்டுப்பாட்டை போக்க பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் 16-ந் தேதி(இன்று) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .

    வடமாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகைக்காக விடுமுறையில் சென்றதால் கடந்த சில நாட்களுக்கு முன் லாரிகளில் பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு பால் சீராக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து பால் பண்ணைகளையும் நேரடியாக சென்று அமைச்சர் பார்வையிட்டார்.
    • சென்னை மாநகரத்தில் எந்த ஒரு பகுதியிலும் பால் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

    சென்னை:

    புயல் மழையில் ஆவின் பால் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் சா.மு.நாசர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    ஆவின் பால் உற்பத்தி செய்யும் பால் பண்ணைகள் உள்ளிட்ட நிலையங்களின் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து பால் உற்பத்தியை தங்கு தடையின்றி உற்பத்தி செய்யவும் உற்பத்தி செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் எவ்வித தடையின்றி சென்று சேரவும் உரிய நடவடிக்கை எடுக்க அவர் அறிவுறுத்தினார்.

    அனைத்து பால் பண்ணைகளையும் நேரடியாக சென்று பார்வையிட்டார். இரவு முழுவதும் அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து கண்காணித்து மேற்பார்வை செய்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். பால் பண்ணையில் தங்கியிருந்து ஊழியர்களுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டார்.

    உரிய நேரத்தில் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்தி மாண்டஸ் புயல் தாக்கத்தின் விளைவாக எங்கும் பால் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கி அனைத்து மக்களுக்கும் பால் பாக்கெட்டுகள் கிடைக்கும்படியாக வழி வகை செய்தார். இதனால் சென்னை மாநகரத்தில் எந்த ஒரு பகுதியிலும் பால் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

    • கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பி தண்ணீர் ஆரணி ஆற்றில் பாய்ந்து வந்ததால் இந்த தரைபாலம் நீரில் மூழ்கியது.
    • புதுப்பாளையம்- அஞ்சாத்தம்மன் கோவில் அருகே ரூ.20 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என்று அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

    பெரியப்பாளையம்:

    கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுப்பாளையத்தில் இருந்து எல்லாபுரம் ஒன்றியம் அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

    கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பி தண்ணீர் ஆரணி ஆற்றில் பாய்ந்து வந்ததால் இந்த தரைபாலம் நீரில் மூழ்கியது.

    இந்தத் தரைப்பாலத்தை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இந்த தரைப்பாலம் மூழ்கி பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் புதுப்பாளையம்- அஞ்சாத்தம்மன் கோவில் அருகே ரூ.20 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என்று அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

    மேலும் இந்த பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும் என்றும் இதற்கான ஆயத்த பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அவர் கூறினார்.

    • ஆவினில் தயாராகும் 60 லட்சம் பாக்கெட் பாலில் 10 லட்சம் பாக்கெட் பால்தான் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் ஆகும்.
    • 6 லட்சம் லிட்டர் பால்தான் அதிக கொழுப்பு உடைய பால் ஆக விற்பனைக்கு வருகிறது.

    சென்னை:

    ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அண்மையில் பால் கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலையை மட்டும் உயர்த்தியது ஏன்? என்பது பற்றி பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது:-

    ஆவின் நிறுவனத்தில் வினியோகிக்கப்படும் நீல நிற மற்றும் பச்சை நிற பாக்கெட் பால் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பழைய விலைக்கே கிடைக்கும்.

    நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு பாக்கெட்) மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விலை ஏற்றாமல் பழைய விலைக்கு அதாவது லிட்டர் ஒன்றுக்கு ரூ.46-க்கே வழங்குகிறோம்.

    சில்லரை விற்பனையில் மட்டும் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை (கொழுப்பு சத்து அதிகம் கொண்டது) லிட்டர் ஒன்றுக்கு ரூ.60 ஆக மாற்றி அமைத்துள்ளோம்.

    தனியார் பால் பாக்கெட் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் பால் பாக்கெட்டில் அதிக கொழுப்பு சத்து கொண்ட பால் லிட்டருக்கு ரூ.70-க்கு விற்கிறார்கள். ஆவினில் இப்போதுதான் ரூ.60 ஆக மாற்றி அமைத்து உள்ளோம்.

    தமிழ்நாட்டில் அதிக கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை டீ கடை, ஓட்டலில்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். தயிர் தயாரிக்கவும் இதைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

    கமர்சியல் பயன்பாட்டுக்கு முழுமையாக இந்த பால் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆக விலையை மாற்றி அமைத்துள்ளோம். இதே வெளிமாநில தனியார் பால் ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

    ஆவினில் தயாராகும் 60 லட்சம் பாக்கெட் பாலில் 10 லட்சம் பாக்கெட் பால்தான் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் ஆகும். அதாவது 6 லட்சம் லிட்டர் பால்தான் அதிக கொழுப்பு உடைய பால் ஆக விற்பனைக்கு வருகிறது.

    வீடுகளில் நீல நிற, பச்சை நிற பால் பாக்கெட் தான் அதிகமாக வாங்குவதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. 50 லட்சம் பாக்கெட் பால் இதில் விற்பனையாகிறது.

    பொதுமக்கள் நலன் கருதி பால் விலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்திருந்தார்.

    இவ்வாறு அமைச்சர் நாசர் கூறினார்.

    • மோவூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்துகொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள மோவூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

    திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன், திருத்தணி எம்.எல்.ஏ. எஸ். சந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிறிஸ்டி, பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால் முன்னிலை வகித்தனர்.

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்துகொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் மு.ராஜேந்திரன், பூண்டி வட்டார கால்நடை மருத்துவர்கள் சரவண குமார், ஹரிஹரன் சிவசங்கர் பலர் கலந்து கொண்டனர்.

    • அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் சா.மு. நாசர் ஆய்வு செய்தார்.
    • கடந்த ஆண்டு 6 வகை இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு 9 வகையான இனிப்பு வகைகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தில் ரூ.200 கோடிக்கு இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 9 வகையான இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் சா.மு. நாசர் ஆய்வு செய்தார். அப்போது இனிப்புப் பொருட்களை பேக்கிங் செய்யும் புதிய எந்திர பணிகளை இயக்கி வைத்தார்.

    அதை தொடர்ந்து அவர் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் சார்பில் 9 வகையான இனிப்புகளும், கார வகைகளில் மிக்சர் உள்ளிட்ட காம்போ பேக் விற்பனைக்கு தயார் செய்யும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    சிறப்பு இனிப்புகள் விலை விவரம்:

    நெய் பாதுஷா

    250 கிராம்

    ரூ.190

    ஸ்பெஷல் நட்ஸ் அல்வா

    250 கிராம்

    ரூ.190

    மோதி பபாக்

    250 கிராம்

    ரூ.180

    காஜு பிஸ்தா ரோல்

    250 கிராம்

    ரூ.320

    காஜு கட்லி

    250 கிராம்

    ரூ.260

    நெல்லை அல்வா

    250 கிராம்

    ரூ.125

    கருப்பட்டி அல்வா

    250 கிராம்

    ரூ.170

    வகைப்படுத்தப்பட்ட இனிப்புகள்

    500 கிராம்

    ரூ.450

    ஆவின் மிக்சர்

    200 கிராம்

    ரூ.100

    பின்னர் அமைச்சர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு 6 வகை இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு 9 வகையான இனிப்பு வகைகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் கடந்த ஆண்டு ஆவின் பொருட்களின் விற்பனை ரூ.82.24 கோடிக்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு ரூ.200 கோடிக்கு ஆவின் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அதற்கான அனைத்து விற்பனை யுக்திகளை கையாளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் கூட்டுறவு அரசு நிறுவனங்கள், போக்குவரத்து துறை அரசுத்துறை அலுவலர்கள், அரசு ஊழியர்கள் ஆவின் நிறுவனத்தில் இனிப்புகளை வாங்க வேண்டும் என்ற உத்தரவின் கீழ், ஆவின் பொருட்களின் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் அம்பத்தூர் மட்டுமல்லாமல் திருவள்ளூர், கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சி, சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் நிறுவன கிளைகள் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சிறப்பு விற்பனைக்கு தொலைபேசி மூலம் பதிவு செய்தால், இலவசமாக வீட்டுக்கு கொண்டு சென்று விநியோகம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பால்வளத்துறை ஆணையரும், மேலாண்மை இயக்குனருமான சுப்பையன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்த ராஜன், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து நுகர்வோர்களுக்கும் பால் பொருட்கள் கிடைப்பதை உறுதி படுத்த வேண்டும்.
    • அதிகாரிகள் மற்றும் பால் விற்பனையாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் சென்னை பெருநகர மொத்த பால் விற்பனையாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் அளவில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் இருந்து பால் உரிய நேரத்திற்கு வருவதையும் அவற்றை பாக்கெட்டுகளில் அடைக்கும் பணி குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவடைவதையும் கண்காணிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    குறைந்த விற்பனை மேற்கொண்ட, மொத்த பால் விற்பனையாளர்களை பால் விற்பனையை அதிகரிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அவர் எடுத்துரைத்தார். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள எதிர்வரும் பண்டிகை நாட்களில் அனைத்து இடங்களிலும் பால் தங்கு தடையின்றி கிடைக்க வழிமுறைகள் வகுக்கப்பட்டு, கூடுதல் வாகனங்கள் மூலமாக உடனுக்குடன் பால் விநியோகிக்க ஆலோசனைகள் அவர் வழங்கினார்.

    ஆவின் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அவ்வப்போது தங்கள் பகுதிக்குட்பட்ட பால் விற்பனை மையங்கள் மற்றும் பாலகங்களை நேரில் சென்று ஆய்வு செய்து குறைகள் இருப்பின் அவற்றை விறைந்து நிவர்த்தி செய்ய அமைச்சர் உத்தரவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஆவின் சிறப்பு இனிப்புகள் அனைவரையும் சென்றடைய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்.
    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்து விற்பனை செய்ய வலியுறுத்தல்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனை செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டு தீபாவளியை போலவே, இவ்வாண்டு தீபாவளி பண்டிகைக்கும் காஜூ கட்லீ (250 கி) நட்டி அல்வா (250 கி) மோத்தி பாக் (250 கி) காஜு பிஸ்தா ரோல் (250 கி)

    நெய் பாதுஷா (250 கி) கார வகைகள் இனிப்பு தொகுப்பு (500 கி) (Combo Box)விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. இதன் பொருட்டு தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை மிகுந்த சுவைமிக்கதாகவும் மற்றும் தரமாகவும் தயாரிக்க அமைச்சர் உத்தரவிட்டார். கருப்பட்டியை பயன்படுத்தி சுவையான இனிப்பு வகைகளை தயாரிக்கும் வழிவகைகளை ஆராயவும், விரைவில் விற்பனைக்கு அறிமுக படுத்தவும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

    கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு இனிப்புகள், நெய் மற்றும் பிற பொருட்கள் ரூ.82.00 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.200 கோடி வரை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து விற்பனை உத்திகளையும் கையாளவும், அரசு துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், போக்குவரத்து துறை மற்றும் பிற நிறுவனங்களுக்கு தேவையான இனிப்பு வகைகளை வழங்க முன்கூட்டியே திட்டமிடவும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களை தேர்வு செய்து விற்பனை மேற்கொள்ள அமைச்சர் வலியுறுத்தினார். தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை ஏற்றுமதி செய்வதற்கான முகாந்திரங்களை ஆராயவும், தக்க அனுமதி மற்றும் தேவையான சான்றிதழ்களை பெறுவது குறித்து விறைந்து நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர் நாசர் அறிவுறுத்தினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் திருத்தணி கோவில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு கல்யாண், டி.ஆர்.ஓ. அசோகன், சப்-கலெக்டர் மகாபாரதி உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அவர்களுக்கும் கொரோனா பரவுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், வேறு சில உடல்நலக்குறைவு உள்ளவர்களுக்கும் கொரோனா எளிதில் ஒட்டிக்கொள்கிறது. அதனால் தான் மீண்டும் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    நேற்று காலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் திருத்தணி கோவில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு கல்யாண், டி.ஆர்.ஓ. அசோகன், சப்-கலெக்டர் மகாபாரதி உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் சா.மு.நாசருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

    இதனால் அமைச்சர் சா.மு.நாசர் அடையாறில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். வீட்டிலேயே சிகிச்சை பெறுகிறார்.

    தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை டுவிட்டர் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்.

    ×