search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Minister's"

    • 17-வது மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் நிறைவடைகிறது.
    • மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லி சாணக்ய புரியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் இன்று நடைபெற்றது.

    பாரதீய ஜனதா கட்சியின் 2-வது ஆட்சிக் காலத்தில் இறுதியாக நடைபெறும் மத்திய அமைச்சர்கள் கூட்டம் இதுவாகும்.

    தற்போதைய 17-வது மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் நிறைவடைகிறது. தேர்தல் தேதிகள் அடுத்த சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது போன்ற பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

    இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி மற்றும் மக்கள் நலப்பணிகளின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த விவகாரங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாரதீய ஜனதா முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறது. 

    அடுத்த வாரம் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடி வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்கள அறிவிக்கப்படும் முன்பே தேர்தல் பிரசாரத்தை தொடங்க பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதுபற்றி இன்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் எந்தெந்த மாநிலங்களுக்கு சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்று நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது. அப்போது 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறி பிரசாரத்தை தீவிரப் படுத்தும்படி பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

    மேலும் பாரதீய ஜனதாவின் 2-வது வேட்பாளர்கள் பட்டியல் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    • கட்சியின் செயல் திட்டங்கள் பற்றி விவாதிக்க பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்தனர்.
    • 2024 தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. அதன் முக்கிய சித்தாந்தக் கொள்கைகளை வலியுறுத்தும் என தெரிகிறது.

    அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வரும் 3ம் தேதி (திங்கட்கிழமை), மத்திய அமைச்சர்கள் குழுவின் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

    மோடி ஆட்சியின் 9 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் நடைபெறவுள்ள இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் குழுவின் கடைசி கூட்டம், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.

    டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்தில் இக்கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில், செப்டம்பரில், இதே மாநாட்டு மையத்தில் ஜி20 (G20) உச்சிமாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    2024 மக்களவை தேர்தலுக்கான கட்சியின் செயல் திட்டங்கள் பற்றி விவாதிக்க பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்தனர். இக்கூட்டம் நடைபெற்ற மறுநாள் அமைச்சர்கள் குழு கூட்டம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது.

    நேற்றைய கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள ஒரு வழிகாட்டுதல் திட்டத்தை உருவாக்குவது பற்றியும் அக்கட்சி எதிர்கொள்ளும் சவால்களை நெறிப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அமித் ஷா, நட்டா மற்றும் பா.ஜ.க. பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் ஆகியோர் அமைப்பு மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து நீண்ட விவாதங்களை நடத்தினர். ஆனால், இந்த கூட்டம் குறித்து கட்சி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

    எனினும், அரசாங்கத்திலும், கட்சி அமைப்பிலும் சில மாற்றங்கள் நிகழலாம் என்ற யூகங்களை இந்த ஆலோசனைக் கூட்டம் வலுப்பெற செய்துள்ளது.

    சமீபத்தில் போபாலில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது பொது சிவில் சட்டம் (UCC) குறித்து ஆழமாக பேசிய பிரதமர் மோடியின் உரையின் பின்னணியில், 2024 தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. அதன் முக்கிய சித்தாந்தக் கொள்கைகளை வலியுறுத்தும் என தெரிகிறது.

    ஜூலை 3வது வாரத்தில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த பின்னணியில் திங்கட்கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் அரசியல் ஆர்வலர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

    • மத்திய மந்திரி எல்.முருகன் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
    • இலவச எரிவாயு திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளிலும் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது.

    புதுச்சேரி:

    மத்திய மந்திரி எல்.முருகன் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், சிவசங்கரன், வி.பி.ராமலிங்கம், இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தேசிய செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், பொதுச்செயலாளர் சக்தி கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசும் போது பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட தூய்மை பாரத திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

    இலவச எரிவாயு திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளிலும் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. பிரதம மந்திரி யின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் புதுவையில் இதுவரை 5 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து புதுவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வணிகர்களை சந்தித்து மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.

    ×