என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன்னியர்"

    • தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயம் வன்னியர் சமுதாயம்.
    • இந்தியாவிலேயே நம் சமுதாயத்திற்கு மட்டும் தான் ஒரு புராணம் இருக்கிறது.

    பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "நம் இளைஞர்களுக்கு நம்முடைய வரலாறு தெரியவில்லை. நாம் நெருப்பில் இருந்து பிறந்தவர்கள். இந்தியாவிலேயே நம் சமுதாயத்திற்கு மட்டும் தான் ஒரு புராணம் இருக்கிறது. வேறு எந்த சமுதாயத்திற்கும் கிடையாது. நாம் வன்னிய குல சத்திரியர்கள்.

    நாகப்பன் படையாட்சி என்பவர் காந்தி தொடங்கிய சத்தியாகிரக போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி. இது எத்தனை பேருக்கு தெரியும். படையாட்சி என்பதால் அவரது வரலாறு மறைக்கப்பட்டது.

    இந்தியாவில் ஓபிசி இடஒதுக்கீடு பெற்றுக்கொடுத்தது 2 சத்திரியர்கள். ஒன்று ஐயா ஆனைமுத்து, மற்றொன்று சமூகநீதி போராளி மருத்துவர் அய்யா அவர்கள்.

    நம் சமுதாயத்தை வாக்குவங்கிகளாக பயன்படுத்துகிறார்கள். யார் யாரோ பின்னால் நீங்கள் செல்கிறீர்கள். அவர்கள் பின்னால் செல்லாதீர்கள். உங்களது அண்ணன் நான் இருக்கிறேன். என் பின்னால் வாருங்கள். உங்களுக்காக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மாவீரன் குரு போல நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    உங்களுக்கு நல்ல படிப்பையும், வேலைவாய்ப்பினை நான் வாங்கித் தருகின்றேன். நாம் ஆள வேண்டும். நாம் ஆள வேண்டிய காலம் வந்து விட்டது. இந்த மண்ணை ஆண்டவர்கள் நாம். இந்த மண்ணின் பூர்வ குடிகள் நாம். வீராணம் ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெலிங்டன் ஏரி மதுராந்தகம் ஏரி வரை வெட்டியது நம்முடைய முன்னோர்கள்" என்று பேசினார்.

    வன்னியர்கள் நெருப்பில் இருந்து பிறந்தவர்கள் என்று அவரது சமுதாய மக்களிடம் சாதி உணர்வை ஊட்டும் வகையில் அன்புமணி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஒருபக்கம் பெரியாரை உயர்த்தி பேசும் அன்புமணி ராமதாஸ் மற்றொரு பக்கம் வர்ணாசிரமக் கொள்கையை உயர்த்திப் பிடித்து, நாங்கள் மார்பிலே பிறந்தவர்கள் என்று இல்லாத ஒன்றை மிடுக்காகப் பேசித் திரிவது சரியா?

    படையாட்சி என்பதால் நாகப்பன் படையாட்சியின் வரலாறு மறைக்கப்பட்டதாக பேசும் அன்புமணிக்கு அவரது வன்னியர் சாதியிலேயே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் இருப்பது தெரியுமா? படையாட்சி இன்னொரு படையாட்சியை விட்டுவிட்டு, வன்னியர் வீட்டில் பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள் என்பது குறித்து பேச முடியுமா?

    மாற்றம் முன்னேற்றம் என்று அரசியல் பேசி வந்த அன்புமணி தற்போது நாம் நெருப்பில் இருந்து வந்தவர்கள் என்று சாதி உணர்வை கூர் தீட்டும் அரசியல் பேச வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?

    தன சமுதாய மக்களிடம் பா.ம.க. கட்சியின் செல்வாக்கு மெல்ல மெல்ல சரிந்து வரும் நிலையில், அதை மறுபடியும் மீட்டெடுக்க தான் சாதிய உணர்வை கூர் தீட்டும் அரசியலுக்கு பா.ம.க. இறங்குகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

    • 40 ஆண்டு காலமாக மருத்துவர் ராமதாஸ் இந்த மக்களின் நலனுக்காக பாடுபட்டு வந்தார்.
    • அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் இணைந்து சமூக நீதி என்ற கோட்பாட்டிற்கு ஒன்றிணைய வேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் 2 நாள் சுற்றுப்ப யணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்துள்ளார்.

    இந்நிலையில் தருமபுரி அடுத்த கோம்பை, ஒடசல் பட்டிதூர் உள்ளிட்ட இடங்களில் கட்சிக் கொடி யை ஏற்றி வைத்தார்.

    இதனை தொடர்ந்து பொது மக்கள் மத்தியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார் அப்போது அவர் கூறியதாவது: 40 ஆண்டு காலமாக மருத்துவர் ராமதாஸ் இந்த மக்களின் நலனுக்காக பாடுபட்டு வந்தார்.

    தற்பொழுது வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் அதை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை ரத்து செய்து ஓராண்டு காலம் ஆகியும், இப்போ துள்ள அரசாங்கம் அதைக் கொடுப்பதற்கு மனமில்லை. அது கிடைக்க வேண்டும் என்ற நோக் கத்தில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அரசிய லுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் இணைந்து சமூக நீதி என்ற கோட்பாட்டிற்கு ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வளவு நாட்கள் நாம் அடிமையாக இருந்து வந்தோம். இப்பொழுது பாட்டாளிகள் ஆளும் நேரம் வந்துவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும்.
    • வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சமூகநீதி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை நரேந்திர மோடியிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறதா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வினா எழுப்பியிருக்கிறார்.

    2004-ம் ஆண்டில் சமூகநீதிக் கொள்கையில் பாட்டாளி மக்கள் கட்சி எந்த அளவு உறுதியுடன் இருந்ததோ, அதே உறுதியுடன் தான் இப்போதும் உள்ளது. பாராளுமன்றத்தில் அப்போதிருந்த அளவுக்கு வலிமையை இப்போதும் பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கொள்கை வலிமையையும், அதிகார வலிமையையும் பயன்படுத்தி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பா.ம.க.வால் முடியும்.

    பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நீதிபதி ரோகிணி ஆணையத்தை அமைத்து, அதன் அறிக்கையை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி இக்கோரிக்கையையும் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.

    இது ஒருபுறம் இருக்க, சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக அளித்த உத்தரவாதத்தை இரு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றினோமா? என்பதை நேர்மையுடனும், மனசாட்சியுடனும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் வன்னியர்களுக்கு எப்போதோ இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், பிற சமூகங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு நிறைவேற்றும் மு.க. ஸ்டாலினுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஆனால், மேடைகளில் மட்டும் சமூகநீதியில் அக்கறைக் கொண்டவர் போல நடிக்கிறார். மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி விட்டு, அதன்பிறகு சமூகநீதி பற்றி பேச வேண்டும்.

    ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்... சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர். அதை தி.மு.க. விரைவில் உணரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராமதாஸ் என் மூச்சு இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று சொன்னார். அதற்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
    • தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்த மிகப்பெரிய துரோகம்.

    ஜெயங்கொண்டம்:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்துக்குமான போர் இது. பாஜக தலைவர்கள் என்னென்ன சொன்னார்களோ அதில் எல்லாம் எடப்பாடி கையொப்பமிட்டுவிட்டார்.

    டாக்டர் ராமதாஸ் என் மூச்சு இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று சொன்னார். அதற்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

    வன்னியர்களுக்கு எவ்வளவு பெரிய துரோகம். பாஜக சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க கூடாது என்கிறது. மோடியின் அதையே சொல்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்த மிகப்பெரிய துரோகம்.

    மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு எல்லா வேலைவாய்ப்பும் போயிடுச்சு. மோடி 10 ஆண்டுகள் ஆட்சியில் ஒவ்வொரு குடிமகன் தலையிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை வச்சிருக்கார். இந்தக் கடனை அம்பானிக்கும் அதானிக்கும் வாங்கியுள்ளார். அவர்களுக்கு இதுவரை 14 லட்சம் கோடி ரூபாயை தாரை வார்த்து கொடுத்து இருக்கிறார். தமிழ்நாட்டில் கொடுத்த ஒரு வாக்குறுதி கூட மோடி நிறை வேற்றவில்லை, திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் 2 ஆண்டுகளிள் நிறைவேற்றி உள்ளார்கள். சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

    ×