search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "body recovered"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் கண்டுபிடிப்பு.
    • உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

    இமாச்சல பிரதேசத்தில் விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

    8 நாட்களுக்கு பிறகு சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடலை போலீசார் மீட்டுள்ளனர்.

    கடந்த 4ம் தேதி தன் நண்பர் மற்றும் ஓட்டுநருடன் இமாச்சல பிரதேசம் சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.

    விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

    மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

    • எதிர்பாராத விதமாக சோப்பு தவறி தண்ணீரில் விழுந்தது.
    • பிரியதர்ஷினி தண்ணீருக்குள் சென்ற போது திடீரென அவரை தண்ணீர் அடித்து சென்றது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த வெள்ளாங்கோவில், அம்மா நகரை சேர்ந்தவர் பழனியம்மாள். இவருக்கு பிரியதர்ஷினி (15) என்ற மகளும், நவீன்குமார் (13) என்ற மகனும் உள்ளனர்.

    இதில் பிரியதர்ஷினி வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்து விடுமுறையில் தற்போது வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 29-ந் தேதி பழனியம்மாள் தனது மகள் பிரியதர்ஷினி மற்றும் மகன் நவீன் குமார் ஆகியோருடன் அதேப்பகுதியில் செல்லும் கீழ் பவானி வாய்க்கால் கரையில் துணி துவைத்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சோப்பு தவறி தண்ணீரில் விழுந்தது. சோப்பை எடுப்பதற்காக பிரியதர்ஷினி தண்ணீருக்குள் சென்ற போது திடீரென அவரை தண்ணீர் அடித்து சென்றது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் கதறினார். இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிரியதர்ஷினியை தேடினர். இரவு முழுவதும் தேடி பார்த்தும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    அதனைத் தொடர்ந்து நேற்று காலை மீண்டும் உறவினர்கள் பிரியதர்ஷினியை தேடினர். அப்போது நீச்சாம் பாளையத்திலிருந்து தாசம்புதூர் செல்லும் கீழ பவானி வாய்க்காலில் துரைசாமி கோவில் அருகே பிரியதர்ஷினி பிணமாக மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சிறுவல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×