search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blood samples"

    • 9 ஆயிரத்து 688 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
    • இரவு நேரங்களில் மட்டும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

    கோவை

    தமிழகத்தில் யானைக்கால் பாதிப்பு குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதைத் தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் 12 வட்டாரங்கள், மாநகராட்சிப் பகுதிகள், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய 3 நகராட்சிகள் என மொத்தமாக 16 இடங்களில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் 9 ஆயிரத்து 688 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதன் பரிசோதனை முடிவுகள் சமீபத்தில் பெறப்பட்டதில் யாருக்கும் யானைக்கால் பாதிப்பில்லை என்பது தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர்அருணா கூறியதாவது:-

    யானைக்கால் நோய் பாதிப்பு கொசுக்கள் மூலம் ஏற்படுகிறது. இதன் பாதிப்பு உள்ளவா்களுக்கு இரவு நேரங்களில் மட்டும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இரவு நேரங்களில் மட்டுமே யானைக்கால் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் ரத்தத்தில் காணப்படும். இந்நிலையில் யானைக்கால் நோய் பாதிப்பு குறித்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட 16 இடங்களில் இரவு நேரங்களில் ஆய்வு செய்து 9 ஆயிரத்து 688 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளவா்களை கண்டறிந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

    சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆய்வுக் கூடங்களில் பரிசோதனை செய்யப்பட்டன.

    அதன் பரிசோதனை முடிவுகள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் கோவையில் 9 ஆயிரத்து 688 பேரிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் ஒருவருக்கு கூட யானைக்கால் பாதிப்பு இல்லை என்ற முடிவு கிடைக்கப் பெற்றுள்ளது.

    மேலும் யானைக்கால் பாதிப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் அறிகுறிகள், பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரை க்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×