என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Hazare Trophy"

    • விஜய் ஹசாரே டிராபியின் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன.
    • காலிறுதிச் சுற்றுகள் பெங்களூருவில் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ளன.

    புதுடெல்லி:

    33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இதில் 'எலைட்' பிரிவில் இடம் பெற்ற 23 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதின. இதன் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நேற்று நடந்து முடிந்தன.

    அகமதாபாத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான தமிழக அணி கேரளாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்–றது. தொடர்ந்து 4 தோல்வி கண்டு காலிறுதி வாய்ப்பை இழந்து விட்டது தமிழக அணி.

    இந்நிலையில், லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த கர்நாடகம், மத்திய பிரதேசம், பி பிரிவில் உத்தர பிரதேசம், விதர்பாவும், சி பிரிவில் பஞ்சாப், மும்பையும், டி பிரிவில் டெல்லி, சவுராஷ்டிரா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

    காலிறுதிச் சுற்று பெங்களூருவில் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.

    • ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின
    • ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்

    விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 6 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் பறக்கவிட்ட வீரர் என்ற வரலாறு படைத்தார் ருதுராஜ்.

    ருதுராஜ் மொத்தமாக 112 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அடுத்த இடங்களில் 108 சிக்ஸர்களுடன் மணிஷ் பாண்டே, விஷ்ணு வினோத் ஆகியோர் உள்ளனர்.

    • ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின
    • ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதன்மூலம் விஜய் ஹசாரே தொடரில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அங்கித் பாவ்னே சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் (15) சமன் செய்தார்

    ருதுராஜ், அங்கித் ஆகியோர் 15 சதங்கள் அடித்துள்ள நிலையில், அதற்கு அடுத்த இடங்களில் உள்ள படிக்கல், மயங்க் அகர்வால் ஆகியோர் 13 சதங்கள் அடித்துள்ளனர்.

    • டாஸ் வென்ற வங்காளம் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஐதராபாத் அணி 50 ஓவரில் 352 ரன்கள் குவித்தது.

    ராஜ்கோட்:

    விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பி பிரிவில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், வங்காளம் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளம் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமன்ராவ் பெரலா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார்.

    முதல் விக்கெட்டுக்கு ராகுல் சிங், அமன்ராவ் பெரலா ஜோடி 104 ரன்கள் சேர்த்தது. ராகுல் சிங் 65 ரன்னில் அவுட்டானார்.

    கேப்டன் திலக் வர்மா 34 ரன்னிலும், அபிராத் ரெட்டி 5 ரன்னிலும், பிரக்ஞய் ரெட்டி 22 ரன்னிலும், பிரணவ் வர்மா 7 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய அமன்ராவ் பெரெலா இரட்டை சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. அமன்ராவ் பெரலா 200 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • இதுவரை கேப்டனாக இருந்த ஷர்துல் தாக்குர் காயம் காரணமாக விலகல்.
    • எஞ்சிய இரு லீக் ஆட்டங்களுக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக இருப்பார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.

    33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் மும்பை அணி இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடத்தில் உள்ளது. மும்பை அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் இன்று இமாசலபிரதேசத்தையும், நாளை மறுநாள் பஞ்சாப்பையும் சந்திக்கிறது.

    இந்த நிலையில் மும்பை அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கேப்டனாக இருந்த ஷர்துல் தாக்குர் காயம் காரணமாக விலகி இருப்பதால் எஞ்சிய இரு லீக் ஆட்டங்களுக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக இருப்பார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது.

    கடந்த அக்டோபர் 25-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பந்தை பிடிக்கும் போது கீழே விழுந்து காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஸ்ரேயாஸ் அய்யர் அதன் பிறகு எந்தவித போட்டியிலும் ஆடவில்லை. வருகிற 11-ந்தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யரை, விஜய் ஹசாரே போட்டியில் ஆடி உடல் தகுதியை நிரூபிக்கும் படி இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் அவர் உடல் தகுதியை நிரூபிப்பதை பொறுத்தே அவரது இடம் அணியில் உறுதியாகும்.

    • முதலில் ஆடிய மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 366 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய மும்பை அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஜெய்ப்பூர்:

    விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் மகாராஷ்டிரா, மும்பை அணிகள் மோதின.

    முதலில் ஆடிய மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 366 ரன்கள் குவித்தது. குல்கர்னி 114 ரன்னும், பிரித்வி ஷா 71 ரன்னும், ருதுராஜ் 66 ரன்னும் எடுத்தனர். அடுத்து ஆடிய மும்பை அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 128 ரன்கள் வித்தியாசத்தில் மகாராஷ்டிர அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், விஜய் ஹசாரே தொடரில் வேகமாக 100 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்தார். அவரது இந்த சாதனையை பெருமைப்படுத்தும் வகையில் சி.எஸ்.கே. போஸ்டர் வெளியிட்டுள்ளது.

    • முதலில் ஆடிய கர்நாடக அணி 50 ஓவரில் 332 ரன்கள் குவித்தது.
    • சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் சதமடித்து 108 ரன்கள் சேர்த்தார்.

    அகமதாபாத்:

    விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் கர்நாடகா, திரிபுரா அணிகள் மோதின.

    இதில், முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் கர்நாடக அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் சதமடித்து 108 ரன்கள் சேர்த்தார். நடப்பு தொடரில் படிக்கல் அடித்த 4-வது சதம் இதுவாகும்.

    தொடர்ந்து ஆடிய திரிபுரா அணி 49 ஓவரில் 252 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் கர்நாடக அணி 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நடப்பு தொடரில் 5-வது வெற்றியை ருசித்த கர்நாடகா அணி ஏ பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.

    • முதலில் விளையாடிய குஜராத் அணி 318 ரன்கள் குவித்தது.
    • அக்சர் படேல் 111 பந்தில் 130 ரன்கள் குவித்தார்.

    விஜய் ஹசாரே டிராபியில் இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் குஜராத்- ஆந்திரா அணிகள் மோதின. முதலில் விளையாடிய குஜராத் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் குவித்தது.

    ஒரு கட்டத்தில் அந்த அணி 99 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு அக்சர் படேல் உடன் விஷால் ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் 60 பந்தில் 70 ரன்கள் விளாசினார். அக்சர் படேல் 111 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் 130 ரன்கள் குவித்தார்.

    பின்னர் 319 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆந்திரா களம் இறங்கியது. தொடக்க வீரர் ஞானேஷ்வர் 125 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சோனி பிரசாத் 26 பந்தில் 48 ரன்கள் விளாசினார்.

    இருந்தபோதிலும், ஆந்திராவால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆந்திரா 311 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. கேப்டன் நிதிஷ் குமார் ரெட்டி 27 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    • பரோடா அணி 71 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது திணறியது.
    • ஹர்திக் பாண்ட்யா 11 சிக்ஸ், 8 பவுண்டரிகள் மூலம் 133 ரன்கள் விளாசினார்.

    விஜய் ஹசாரே தொடரில் பரோடா- விதர்பா அணிகள் மோதும் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. விதர்பாவிற்கு எதிராக பரோடா முதலில் பேட்டிங் செய்தது.

    பரோடா ஒரு கட்டத்தில் 71 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஹர்திக் பாண்ட்யா 7-வது வீரராக களம் இறங்கினார். ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி 11 சிக்ஸ், 8 பவுண்டரிகளுடன் 133 ரன்கள் விளாசினார்.

    "லிஸ்ட் ஏ" போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் முதல் சதம் இதுவாகும். இவர் இதுவரை 119 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போதுதான் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

    39-வது ஓவரை விதர்பா அணியின் பார்த் ரெகாடே வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார். இதன் மூலம் ஒரே ஓவரில் 34 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்ட்யா அடித்த 133 ரன்களில் 31 ரன்கள் மட்டுமே சிங்கிள் ஆகும்.

    • விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணியில் சாய் சுதர்சன் விளையாடி வருகிறார்.
    • தமிழக அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

    விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணியில் சாய் சுதர்சன் விளையாடி வருகிறார். இந்த நிலையில் மத்தியப் பிரதேச அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் கடந்த மாதம் 26-ந் தேதி லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது சாய் சுதர்சனுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

    அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதி, போட்டியின் தொடக்கத்தில் வலைப் பயிற்சியின் போது அவர் தாக்கப்பட்ட அதே இடமாகும்.

    இந்த காயம் குணமடைந்த ஒரு மாத காலம் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் அவர் தமிழ்நாட்டின் மீதமுள்ள ரஞ்சி டிராபி ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அவர் விளையாடுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக கூறப்படுகிறது.

    விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை அணிக்காக சகோதரர்கள் சர்பராஸ் கான் - முஷீர் கான் விளையாடி வருகிறார்கள்.
    • விளையாட்டைப் பற்றிய எங்களுடைய புரிதல் மற்றும் டெக்னிக் ஒரே மாதிரியாக இருக்கும்.

    விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மும்பை அணிக்காக சகோதரர்கள் சர்பராஸ் கான் - முஷீர் கான் விளையாடி வருகிறார்கள். அந்தத் தொடரில் ஜெய்ப்பூரில் டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கோவாவை 87 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது.

    இதில் மும்பை அணிக்காக ஜெய்ஸ்வால் 46, முஷீர் கான் 60, சர்பராஸ் கான் சதமடித்து 157, ஹர்டிக் டாமோர் 53 ரன்கள் அடித்து மும்பை 444 ரன்கள் குவிக்க முக்கிய பங்காற்றினார்கள்.

    குறிப்பாக 3-வது விக்கெட்டுக்கு தம்பியுடன் சேர்ந்து கோவாவை வெளுத்து வாங்கிய சர்ப்ராஸ் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்.

    இந்நிலையில் ஒரு உள்ளூர் போட்டியில் தாமும் முசீர் கானும் சேர்ந்து ஒன்றாக சதமடிக்க வேண்டும் என்பது கனவு என்று சர்பராஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு போட்டியில் நாங்கள் இருவரும் சதங்கள் அடித்து ஒன்றாக பேட்டை உயர்த்த வேண்டும் என்பது கனவாகும். அதை நாங்கள் உண்மையாக செய்ய விரும்புகிறோம். நாங்கள் ரஞ்சிக் கோப்பையில் சதமடிக்க நினைத்தது நடக்கவில்லை. இன்றும் முஷீர் சதமடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.

    நிறைய நேரம் இருப்பதால் அது நிச்சயம் நடக்கும். அதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். அதுவும் வேடிக்கையானதாகும். நானும் என்னுடைய தம்பியும் ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்து வைத்துள்ளோம். விளையாட்டைப் பற்றிய எங்களுடைய புரிதல் மற்றும் டெக்னிக் ஒரே மாதிரியாக இருக்கும்.

    களத்தில் விளையாடும் போது எப்படி பவுலரை கையாளலாம் அல்லது ஆட்டத்தின் வேகத்தை கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றி நாங்கள் ஒருவரை ஒருவர் ஆலோசித்துக் கொள்வோம்.

    என்று சர்பராஸ் கூறினார்.

    • முதலில் ஆடிய மும்பை அணி 50 ஓவரில் 444 ரன்களைக் குவித்தது.
    • கோவா அணி 50 ஓவரில் 9 விக்கெட்க்கு 357 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    மும்பை:

    விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் எலைட் குரூப் சி போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற கோவா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி அதிரடியில் இறங்கியது. அந்த அணியின் சர்பராஸ் கான் ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டினார்.

    கோவா பந்துவீச்சாளர்களை மைதானத்தின் நான்கு புறமும் சிதறடித்தார். அவர் 75 பந்துகளில் 14 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 157 ரன்களை குவித்தார்.

    இறுதியில், மும்பை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 444 ரன்களைக் குவித்தது. சையது முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்த சர்பராஸ் கான், இப்போது விஜய் ஹசாரேவிலும் தனது அதிரடியை தொடர்கிறார்.

    445 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கோவா அணி களமிறங்கியது. அந்த அணியின் அபினவ் தேஜ்ரானா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். தீப்ராஜ் கவோன்கர் 70 ரன்னும், லலித் யாதவ் 64 ரன்னும் சேர்த்தனர்.

    இறுதியில், கோவா அணி 50 ஓவரில் 9 விக்கெட்க்கு 357 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 87 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

    ×