என் மலர்

  நீங்கள் தேடியது "விழிப்புணர்வு"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அயோத்தியாப்பட்டணம் அருகே வேளாண்மை விழிப்புணர்வு மக்கள் பங்கேற்பு கூட்டம் நடைபெற்றது.
  • வேடப்பட்டி சுற்று–வட்டார கிராமங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

  வாழப்பாடி:

  சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் பள்ளிப்பட்டி, அனுப்பூர், கருமாபுரம்,மின்னாம்பள்ளி, பூவனூர் பகுதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், செயல்படுத்தப்–பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான மக்கள் பங்கேற்பு மதிப்பாய்வு கூட்டம் வளையக்காரனூர் கிராம பொது சேவை மையத்தில் நேற்று நடைபெற்றது.

  இக்கூட்டத்திற்கு அயோத்தியாப்பட்டணம் வட்டார வேளாண்மை ஆத்மாக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

  வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மைத் திட்டம், வேளாண்மை பொறியியல் துறை மற்றும் பட்டு வளர்ச்சித்துறை திட்டங்கள், விவசாயிகளுக்கான அரசு மானியத் திட்டங்கள் மற்றும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கந்தசாமி, விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், துவரை சாகுபடி மற்றும் சோயா பீன்ஸ் சாகுபடி தீவிரப்படுத்தல் திட்டம் குறித்தும் வேளாண்மை உதவி இயக்குநர் சரஸ்வதி விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

  காய்கறி பயிர்களை இயற்கை விவசாயம் முறையில் சாகுபடி செய்யும் தொழில்நுட்பம், இயற்கை விவசாயச்சான்று பெறும் முறை மற்றும் தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி தோட்டக்கலை உதவி அலுவலர் ஷர்மிளா விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

  தரிசு நிலங்களை கண்டறிந்து விலை நிலங்களாக மாற்றுதல், இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்தல், வேளாண்மையில் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்புகள் பற்றியும், கிராம ஊராட்சிகளில் உள்ள இயற்கை வளங்கள் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் தேவைகள் பற்றியும் விவசாயிகளுடன் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்துரையாடினர்.

  இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜ்குமார், அட்மா திட்ட உழவர் செந்தில் , துணை வேளாண்மை அலுவலர் திருநாவுக்கரசு, உதவி வேளாண்மை அலுவலர் சேட்டு உள்ளிட்டோர் செய்திருந்தனர். வளையக்கா–ரனூர், வேடப்பட்டி சுற்று–வட்டார கிராமங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
  • பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டது.

  கடையம்:

  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழக அரசு முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் முக கவசம் அணிவது பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வீராசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜீனத் பர்வீன் யாகூப் வீராசமுத்திரம் கிராம பொது மக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் கூறி முக கவசங்களை வழங்கினார்.

  நிகழ்ச்சியில் 3-வது வார்டு உறுப்பினர் ரமேஷா, 6-வது வார்டு உறுப்பினர் பூமணி, 2-வது வார்டு உறுப்பினர் ஜமீலா ஜமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாலிக் நகர்தி.மு.க. கிளை செயலாளர் அகமது இஷாக் கலந்து கொண்டார். ஊராட்சி செயலர் பரமசிவம் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி பணியாளர்கள் அமுதா, நபிஷா ஆகியோர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவர்களுக்கு வாசிப்புத்திறனை அதிகப்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • தலைமை ஆசிரியை தலைமையில் நடந்தது

  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் உள்ள பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வாசிப்புத்திறனை உருவாக்கவும், நூல்களை வாசிக்கும் பழக்கத்தினை அதிகப்படுத்தவும் 'வாசிப்பை நேசிப்போம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை ஜான்சிராணி வரவேற்று பேசினார். பேரளி ஊர்ப்புற நூலகர் முருகன் பங்கேற்றார். இதில் 4 மற்றும் 5-ம் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய பயணம் நண்பர்கள் சார்பில் நூலக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நடந்தது.
  • காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்

  கரூர்:

  புன்னம் சத்திரத்தில் உள்ள அரசு பள்ளியில் வேலாயுதம்பாளையம் போலீசார் சார்பில் பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் கலந்துகொண்டு பள்ளி மாணவிகளிடையே பேசும்போதுதாங்கள் படிக்கும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தால் அது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல் அந்தந்த பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்களை ஏற்படுத்தினர். இதில், கொங்கு பாளையம் ஊராட்சி தலைவர் பசுபதி, கிராம நிர்வாக அலுவலர் சரண்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நோயாளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கினர்.
  • உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.

  சிங்கம்புணரி

  சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த மனிதநேய மக்கள் கட்சியினர், உள் நோயாளிகள் அனைவருக்கும் ரொட்டி, பழங்கள், பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினர். உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.

  அரசு தாலுகா தலைமை மருத்துவர் அயன்ராஜ் முன்னிலை வகித்தார். ம.ம.க. மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் முகமது அசாருதீன் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுதொழில் சங்க தலைவர் சிவனேஷ் ராஜா, ம.ம.க. நகரத் தலைவர் அப்துல் வஹாப், செயலாளர் சேக் அப்துல்லா, பொருளாளர் சேக் அப்துல்லா, ம.ம.க. நகரச் செயலாளர் ஜாபர் அலி, எஸ்.டி.பி.ஐ. அன்வர்தீன் நசீர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒட்டன்சத்திரம் நுகர்வோர் உரிமை மற்றும் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் உலக போதைபொருள் விழிப்புணர்வு நாள் விழா நடைபெற்றது.
  • போதைபொருள் மற்றும் புகையிலையினால் ஏற்படும் தீமை குறித்தும், இளையதலைமுறை பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

  ஒட்டன்சத்திரம்:

  ஒட்டன்சத்திரம் நுகர்வோர் உரிமை மற்றும் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் உலக போதைபொருள் விழிப்புணர்வு நாள் விழா நடைபெற்றது.

  ஜூனைத்பேகம் இதற்கு தலைமை தாங்கினார். சமூகசெயல்பாட்டாளர் செந்தில்குமார், சமூக ஆர்வலர் முகமதுநாசர், வக்கீல் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு போதைபொருள் மற்றும் புகையிலையினால் ஏற்படும் தீமை குறித்தும், இளையதலைமுறை பாது காப்பாக இருக்கவேண்டும் என்றும் பேசினர். மகளிர்சுயஉதவிக்குழு ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மக்காத நெகிழி பொருள்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது.
  • உணவகங்களுக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

  திருப்பூர்:

  திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட அலகு 2 மாணவா்கள் சாா்பில் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்பது தொடா்பான பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இடுவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

  இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் காளீஸ்வரி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவா் க.கணேசன் பேசியதாவது:-

  மக்காத நெகிழி பொருள்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. இவை மண்ணின் வளத்தை சிதைப்பதுடன், நிலத்தடி நீா்மட்டத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது. உணவகங்களில் நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்களை வாங்குவதால் உடலுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. ஆகவே நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் மளிகைக் கடைகள், உணவகங்களுக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.

  நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள் நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்கி சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டு தோட்டம் அமைத்த பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
  • தாதம்பட்டி நீரேத்தான் கிராம சாவடி முன்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

  வாடிப்பட்டி

  வாடிப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ''எனது குப்பை எனது பொறுப்பு'' நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் மக்கும், மக்காத குப்பைகள் பிரித்து வழங்க கோரியும், பிளாஸ்டிக் ஒழிப்பு, மஞ்சள்பை பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பிரசாரமும் நடந்தது. தாதம்பட்டி நீரேத்தான் கிராம சாவடி முன்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார்.

  துணைத் தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சண்முகம் வரவேற்றார். பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். திடக் கழிவு மேலாண்மை திட்ட பயிற்சியாளர் சிலம்பரசன் பேசினார். மக்கும், மக்காத குப்பைகள் பற்றிய கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது.

  மக்கும் குப்பையை உரமாக பயன்படுத்தி வீட்டு தோட்டம் அமைத்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கவுன்சிலர் ஜெயகாந்தன், அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி மாணவர்கள், உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன், பேரூராட்சி பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் ஒருங்கிணைந்த சிறப்பு துப்புரவு பணி முகாம் மூலம் செடி, கொடிகள் அகற்றி வடிகால் சுத்தம் செய்யப் பட்டது. சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் தீலிபன் சக்ரவர்த்தி நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வேலை வாய்ப்பு முகாமை துவக்கிவைக்கிறாா்.
  • மக்களுவெள்ளக்கோவில்க்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, முகாமில் பங்கேற்றுப் பயனடையுமாறு விழிப்புணா்வு ஏற்படுத்தபடுகிறது.

  காங்கயம் :

  காங்கயத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் ஜூலை 2ந் தேதி நடைபெற உள்ளது. இதனை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் துவக்கிவைக்கிறாா்.

  Tஇந்த முகாமில் வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றுப் பயனடையும் வகையில், நகராட்சி ஆணையா் ஆா். மோகன்குமாா் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், நான்கு சாலைச் சந்திப்பு, தாராபுரம் பிரிவு, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, முகாமில் பங்கேற்றுப் பயனடையுமாறு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் தற்போது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
  • இன்ஸ்பெக்டர் சிவக்குமார் போதை தடுப்பு குறித்து விளக்கிப் பேசினார்.

  மடத்துக்குளம் :

  போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் தற்போது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.பள்ளிகளில் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

  அவ்வகையில் வளரிளம் பருவத்தினரை புரிந்து கொள்ளுதல், போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிதல், போதைப்பொருட்கள் பழக்கத்தில் இருந்து விடுபடச்செய்தல், வாழ்க்கைத்திறன் கல்வி என பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.அதன்படி, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போதை தடுப்பு குறித்து விளக்கிப் பேசினார். ஆசிரியர்கள் ஈஸ்வரன், ருத்ரமூர்த்தி, அன்னபூரணி, கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

  மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தலைமையாசிரியர் பரிமளாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மக்கள் இனி, மக்கும், மக்காத குப்பை என தனியாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் ‘மீண்டும் மஞ்சள் பை’ என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

  கும்பகோணம்:

  என் குப்பை என் பொறுப்பு என்ற வாசகத்துடன் திருப்பனந்தாள் பேரூராட்சி சார்பில் ஒவ்வொரு வீடாக சென்று மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கும்படி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் கிராமிய கலை நிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

  பேரூராட்சி சார்பில் தினமும், 2000 கிலோ மேல் குப்பை சேகரமாகிறது. குப்பையை ஒவ்வொரு வீடாக சேகரிக்க, துாய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.பொதுமக்கள் இனி, மக்கும், மக்காத குப்பை என, தனியாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என, பேரூராட்சி நிர்வாகத்தினர் கோரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை பேரூராட்சித் தலைவர் வனிதா ஸ்டாலின் துணைத் தலைவர் கலைவாணி சப்பானி தலைமையில், ஒவ்வொரு வீடாக சென்று, மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க உள்ள 15 வார்டுகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் கிராமிய கலை நிகழ்ச்சியுடன் நடன குழுவினர் கரகம் ஆடி சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான, ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் தமிழக முதல்அமைச்சர் 'மீண்டும் மஞ்சள் பை' என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

  மீண்டும் மஞ்சள் பையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதும க்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாகச் சென்று மக்களிடம் அறிவுறுத்தினர்.நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள் குருசாமி ரமேஷ் சுரேஷ் தருமதுரை கதீஜா மற்றும் அலுவலர்கள் உறுப்பினர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரம்வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேருந்து நிலைய சுவரில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படுகிறது.
  • மாநகரில் சுகாதார சீர்கேடும் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை

  கரூர்:

  கரூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பல கட்டிடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அவற்றின் அருகில் சிறுநீர் கழித்தல், குப்பையை கொட்டுதல் போன்றவை நிகழ்வதால், மாநகரின் அழகு கெடுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

  இதை தடுக்கும் வகையில், கட்டிடங்களில் உள்ள சுவரொட்டிகளை அகற்றி, அப்பகுதியில் மீண்டும் சுவரொட்டி ஒட்டப்படாத வகையிலும், மக்கள் அசுத்தப்படுத்தாத வகையிலும் வண்ண ஓவியங்களை வரைந்து அழகுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

  அதன்ப, எனது கரூர் எனது பெருமை என்ற திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கரூர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் உள்ள கட்டிட சுவரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். பின்னர் அந்த சுவரில் வண்ண ஓவியங்கள் வரையும் பணியை ஓவியர்கள் தொடங்கியுள்ளனர்.

  இதில் பொது இடங்களில் குப்பையை வீசக்கூடாது, குப்பையை குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும், குப்பையை முறையாக அகற்ற வேண்டும் என்பதை சிறுவர்களின் செயல்கள் மூலம் வலியுறுத்தும் விசதமாக ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து பேருந்து நிலையத்தின் உட்புற சுவர்கள் மற்றும் வெளிப்புற சுற்றுச்சுவர்களிலும் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட உள்ளன. அதில் கழிப்பறை அல்லாத இடங்களில் சிறுநீர் கழிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலான ஓவியங்களும் இடம் பெற உள்ளன.

  பேருந்து நிலைய நுழைவாயில் சுவரில் உள்ள திறப்பு விழா கல்வெட்டிலும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டு, மறைக்கப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டிகள் தற்போது அகற்றப்பட்ட நிலையில் அதன் மீதும் வண்ணம் தீட்டப்பட்டது. இதையடுத்து கல்வெட்டில் வண்ணம் பூசப்பட்டுள்ளதை அகற்றி அதிலுள்ள தகவல்கள் மக்களுக்கு தெரியும்படி செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.