என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூதர்கள்"

    • கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் யூத சமூகத்தினருடன் நாம் கைகோர்க்க வேண்டும்.
    • பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான ஆஸ்திரேலியாவின் முடிவை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாக நேதன்யாகு கண்டித்திருந்தார்.

    ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய இருவரும் தந்தை - மகன் என்றும் அவர்கள் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா அங்கீகரித்தது சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த யூத எதிர்ப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு காரணியாக இருந்தது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றம்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் நிராகரித்துள்ளார்.

    தேசிய ஊடகங்களுக்கு அல்பனீஸ் அளித்த பேட்டியில், அந்த அங்கீகாரத்திற்கும் போண்டி படுகொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாக அவர் நம்புகிறாரா என்று செய்தியாளர் கேட்டபோது, அல்பானீஸ், "இல்லை, நான் அதை சந்தேகிறேன். உலகின் பெரும்பகுதியினர் இரு நாடு தீர்வை மத்திய கிழக்கில் முன்னோக்கிச் செல்லும் வழியாக ஏற்றுக்கொள்கிறார்கள்" என்றும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இது தேசிய ஒற்றுமைக்கான தருணம். நாம் ஒன்றுபட வேண்டும். அசாதாரணமான மற்றும் கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் யூத சமூகத்தினருடன் நாம் கைகோர்க்க வேண்டும்.

    இந்த கடினமான நேரத்தில் ஆஸ்திரேலியர்கள் யூத சமூகத்துடன் நிற்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்துவதே எனது வேலை" என்று கூறினார்.

    பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான ஆஸ்திரேலியாவின் முடிவை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாக நேதன்யாகு முன்னதாக கண்டித்திருந்தார். 

    • தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் சம்படவ இத்திலேயே கொல்லப்பட்டான்.
    • யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

    துப்பாக்கிச் சூடு இன்று பிற்பகல் 2.17 மணியளவில் நடந்தது. தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

    தாக்குதல் நடந்த உடனேயே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் சம்படவ இத்திலேயே கொல்லப்பட்டான்.

    மற்றொருவன் சுடப்பட்டு காவல்துறையினரின் பிடியில் உள்ளான். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர். மேலும் காயமடைந்த சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    போண்டி கடற்கரை பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானம் அருகே நடந்த யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்தார்.

    இதற்கிடையே சமூக ஊடகங்களில் பரவும் ஒரு வீடியோவில், பொதுமக்களில் ஒருவர் தாக்குதல் நடத்தியவர்களின் ஒருவனை நோக்கி சென்று அவனது துப்பாக்கியைப் பிடுங்கி, அவனையே சுட முயற்சிப்பது பதிவாகி உள்ளது.

    அதே சமயம், இரண்டாமவன் பாலத்தில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்துவதும் பதிவாகியுள்ளது.

    தாக்குதல் நடத்தியயவர்கள் வெடிபொருள்களை கொண்ட பெல்ட்களை அணிந்திருந்ததாகவும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். 

    • யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.
    • டென்மாா்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

    இங்கிலாந்து நாட்டின் வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத ஆலயம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.

    உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார். மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குற்றவாளியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.

    அவரிடமிருந்து வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வெடிகுண்டு அங்கியை அணித்திருந்ததாக தெரிகிறது. வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.

    சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி, "திரும்பிப் போங்கள், அவர் ஒரு வெடிகுண்டை வைத்திருக்கிறார், விலகிச் செல்லுங்கள்" என்று பொதுமக்களை நோக்கி சத்தமிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் குற்றவாளியை போலீசார் சுட்டுக்கொள்ளும் வீடியோவும் வைரலாகி வருகிறது. 

    ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக டென்மாா்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

    இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக இங்கிலாந்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.

    • விமானப்படையை பொறுத்தவரை இஸ்ரேல் நான்காவது இடத்தில் இருக்கிறது.
    • இஸ்ரேலில் குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதை பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை.

    யூதர்கள் பெரும்பாலான துறைகளில் சிறந்தவர்களாக இருக்கின்றனர். நோபல் பரிசு பெற்ற 900க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், இலக்கியவாதிகளில் 256 பேர் யூதர்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன், ஸ்பீல் பெர்க், கார்ல் மார்க்ஸ் ஆகியோர் யூதர்கள். பெப்ஸி, கோக், மேக்ஸ்ஃபேக்டர், யுனிலீவர், டன்ஹில் போன்ற உலகின் பெரும் வணிக நிறுவனங்களில் 70 சதம் யூதர்களுடையது. கூகுள், ஆப்பிள், பேஸ்புக், மோடாடோரோலோ வாய்ஸ்மெயில், கணிணி ஆண்டி வைரஸ் ஆகிய தகவல் தொழில்நுட்பம் யூதர்களுடையது.

    மான்சான்ட்டோ போன்ற பெரும் விவசாய நிறுவனங்கள் யூதர்களுடையது. சொட்டுநீர் பாசனம், கிரீன் ஹவுஸ் கல்டிவேஷன் போன்ற விவசாய தொழில் நுட்பமும், ஸ்டெம்செல் தெரப்பி போன்ற மருத்துவ தொழில் நுட்பமும் யூதர்களுடையவை.

    உலகிலேயே ஏவுகணைகளை விண்ணிலேயே தாக்கி அழிக்கும் அயர்ன் டாம்ப் எனப்படும் ஆயுதம், யூதர்கள் பெரும்பான்மையாக உள்ள இஸ்ரேலில் மட்டும் இருக்கிறது. விமானப்படையை பொறுத்தவரை இஸ்ரேல் நான்காவது இடத்தில் இருக்கிறது.

    பெரும்பாலான யூதர்களுக்கு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை அட்டைகளும் வீடுகளும் இருக்கின்றன. உலகின் மிகப்பெரிய சிகரெட் தயாரிக்கும் தொழிலகம் அவர்களுடையது. ஆனால் இஸ்ரேலில் சிகரெட் புகைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான கார்ட்டூன் படங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் யூதர்களுடையது. ஆனால் இஸ்ரேலில் குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதை பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை.

    உலகில் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கி உலகை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்பது யூதர்களின் கனவாயிருக்கிறது.

    -எம்.எஸ். ராஜகோபால்

    • யூதர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன
    • அமெரிக்காவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் 400 சதவீதம் கூடியுள்ளது

    கடந்த அக்டோபர் 7 முதல் பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கிடையே போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளன.

    இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உட்பட மேற்கத்திய நாடுகளில் ஹமாஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் வன்முறை சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர்.

    அக்டோபர் 25 அன்று நியூயார்க் நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த யூத மாணவர்களை பாலஸ்தீன ஆதரவு கும்பல், யூதர்களுக்கு எதிராக கோஷமிட்டு கொண்டே அச்சுறுத்தி தாக்க வந்ததால், அங்குள்ள நூல்நிலையத்திற்கு உள்ளே அந்த மாணவர்கள் நுழைந்து கதவை உட்புறமாக பூட்டி கொண்டு தங்கும் நிலை ஏற்பட்டது.

    அக்டோபர் 30 அன்று, ரஷியாவில் உள்ள டஜெஸ்டான் விமான நிலையத்திற்குள் திடீரென புகுந்த ஹமாஸ் ஆதரவு கும்பல் ஒன்று, இஸ்ரேலில் இருந்து வந்திறங்கிய ஒரு விமானத்தில் யூதர்கள் எவரேனும் உள்ளனரா என அனைத்து பயணிகளின் பாஸ்போர்ட்களை வைத்து தேடிய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்ற ஒரு ஹமாஸ் ஆதரவு பேரணியில் கலந்து கொண்ட பாலஸ்தீன ஆதரவாளர்களில் ஒருவர், அப்பகுதியை சேர்ந்த 69 வயதான யூதர் ஒருவரை மெகாபோனால் (megaphone) தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அந்த யூதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது போன்ற அச்சுறுத்தல்களும், வன்முறை சம்பவங்களும் புகழ் பெற்ற கொலம்பியா மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களிலும் நடைபெற்றதால் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் யூதர்கள் தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருவதாக கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    அக்டோபர் 7-லிருந்து அமெரிக்காவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல் நிகழ்ச்சிகள் முன்பை விட 400 சதவீதம் அதிகரித்துள்ளது.

    பிரான்ஸ் நாட்டில் யூதர்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் 1040-ஐ கடந்து விட்டன.

    இங்கிலாந்தில் 324 சதவீதம் தாக்குதல் நிகழ்ச்சிகள் முன்பை விட அதிகரித்துள்ளன. அந்நாட்டின் தலைநகர் லண்டனில் யூத பள்ளிகளும், யூத மத வழிபாட்டு தலங்களும் தற்காலிகமாக மூடப்படும் நிலையே ஏற்பட்டது.

    ஜெர்மனியில் யூத பிரார்த்தனை கூடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

    ஸ்பெயின் நாட்டில் யூத மத வழிபாட்டு தலங்களின் சுவர்களில் யூதர்களுக்கு எதிரான வாசகங்களும், படங்களும் தீற்றப்பட்டன.

    உலகம் முழுவதும் உள்ள யூதர்கள் இது போன்ற சம்பவங்களால் அச்சத்தில் வாழ்கிறார்கள். "நாங்கள் இனி எங்கு செல்வது? யாரிடம் போய் சொல்வது?" என தங்கள் கவலையை தெரிவிக்கின்றனர்.

    • கமலா ஹாரிஸுக்கு 65 சதவீத யூதர்களும் டிரம்புக்கு 34 சதவீத யூதர்களும் ஆதரவாக உள்ளனர்
    • ஈரான், லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுடன் இஸ்ரேல் நாளுக்கு நாள் பகையை வளர்த்து வருகிறது

    நவம்பர் 5 ஆம் தேதி அமரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை பிரச்சாரங்களில் இணையத்திலும் கடுமையாக விமர்சித்து வரும் டிரம்ப் உலக அரசியலில் அமெரிக்கா பின் தங்கியுள்ளதாகக் கூறி வருகிறார்.

    இந்நிலையில் தான் இந்த தேர்தலில் தோற்றால் அதற்கு அமெரிக்க யூதர்கள் தான் பாதி காரணமாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். வாஷிங்டன் நகரில் நேற்றய தினம் நடந்த இஸ்ரேலிய அமெரிக்கர்கள் கவுன்சிலின் தேசிய மாநாட்டில் பேசிய டிரம்ப், கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும். அதற்கு கமலாவுக்கு வாக்களித்த யூதர்களே பாதி காரணம்.

    ஏனெனில் அவர்கள் எப்போதும் ஜனநாயகவாதிகளுக்கே வாக்களிப்பவர்களாக இருக்கின்றனர். ஆனால் கமலா யூதர்களை  வெறுப்பவராக இருக்கிறார். அமெரிக்காவில் யூதர்களின் வாக்கு 40 சதவீதம் உள்ள நிலையில் நான் தோற்றால் அதற்கு பாதி காரணம் யூதர்கள்தான் என்று தெரிவித்த அவர் முந்தைய தேர்தல்களில் ஜனநாயகவாதிகளுக்கே யூதர்கள் அதிக வாக்களித்த புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டார்.

    மேலும் சமீபத்தில் அமெரிக்க யூதர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு 65 சதவீத யூதர்களும் டிரம்புக்கு 34 சதவீத யூதர்களும் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனம் மீது கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான், லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுடன் நாளுக்கு நாள் பகையை வளர்த்து வருவதும் கவனிக்கத்தக்கது.

    ×