என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பானி பூரி"

    • ரூ.20க்கு 6 பானிபூரி தருவதாக கூறிய கடைக்காரர் கூறியுள்ளார்.
    • கோபமடைந்த பெண் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    குஜராத் மாநிலம் சுர்சாகர் லேக் பகுதியில் சாலையோர பானிபூரி கடை ஒன்றில் பெண் ஒருவர் பானிபூரி சாப்பிட்டுள்ளார்.

    அப்போது ரூ.20க்கு 6 பானிபூரி தருவதாக கூறிய கடைக்காரர் 4 பானிபூரி மட்டுமே கொடுத்ததால் அப்பெண் அதிருப்தி அடைந்துள்ளார்.

    பானிபூரி கொடுக்காததால் கோபமடைந்த பெண் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அப்பெண்ணை அப்புறப்படுத்தினர்.

    • மோசமான நிதி நிலைமை காரணமாக, தொழில்நுட்ப படிப்புக்கு பதிலாக பி.ஏ. படித்தார்.
    • ஸ்ரீஹரிகோட்டாவில் திறன் தேர்வுக்கு அழைக்கப்பட்டார்.

    மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள நந்தன் நகரைச் சேர்ந்த பானி பூரி (கோல்கப்பா) விற்பனையாளரான ராம்தாஸ், தற்போது இஸ்ரோவில் தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் பணிபுரிகிறார்.

    அவரது தந்தை டோங்கர்கான் ஜில்லா பரிஷத் பள்ளியில் பியூனாகப் பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. மோசமான நிதி நிலைமை காரணமாக, தொழில்நுட்ப படிப்புக்கு பதிலாக பி.ஏ. படித்தார். அதன் பிறகு அவரால் படிக்க முடியவில்லை. நிதி நெருக்கடி காரணமாக, பகலில் பானிபூரி விற்றும், இரவில் படிப்பதன் மூலமும் ராம்தாஸ் தனது இலக்கை நோக்கி முன்னேறினார்.

    டிரோராவில் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் (ஐடிஐ) சேர்ந்து பம்ப் ஆபரேட்டர்-கம்-மெக்கானிக் படிப்பை முடித்தார். அங்கு நீர் சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக்கொண்டார்.

    2023 ஆம் ஆண்டில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பயிற்சி பயிற்சிப் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டது. அதற்கு விண்ணப்பித்து, 2024 ஆம் ஆண்டு நாக்பூரில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், ஆகஸ்ட் 29, 2024 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் திறன் தேர்வுக்கு அழைக்கப்பட்டார். திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, அவர் இஸ்ரோவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மே 19, 2025 தேதியிட்ட சேர்க்கை கடிதத்தின் அவரை தேடி வந்தது. இதன்மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி மையத்தில் பம்ப் ஆபரேட்டர்-கம்-மெக்கானிக்காக ராமதாஸ் தற்போது சேர்ந்துள்ளார்.

    • வாயில் நீர் ஊற வைக்கும் மிகவும் சுவையான பானி பூரியின் விலை, மும்பையில் ரூ.25 முதல் ரூ.50 வரை மட்டுமே.
    • உணவகத்தை நடத்துபவர்களுக்கு நேரடியாக விமான நிலைய நிர்வாகத்தார் வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ இடங்களை கொடுப்பதில்லை.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பானி பூரி விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதன் விலை ரூ.333 என அதில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

    இதைப் பார்த்த சில பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். வாயில் நீர் ஊற வைக்கும் மிகவும் சுவையான இந்த பானி பூரியின் விலை, மும்பையில் ரூ.25 முதல் ரூ.50 வரை மட்டுமே. இந்நிலையில் இது விமான நிலையத்தில் ரூ.333-க்கு விற்கப்படுவது சரியல்ல என்று பயணி ஒருவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விலையைப் பார்த்ததுமே பசி பறந்துபோய் விடும் என்றும் அவர் கருத்தைப் பதிவு செய்து உள்ளார்.

    மேலும் பானி பூரி, தஹி பூரி, சேவ் பூரி படங்களுடன் அந்த விலைப்பட்டியல் இருக்கும் புகைப்படத்தையும் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த எக்ஸ் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனிடையே இந்தப் பதிவுக்கு எக்ஸ் தளத்தில் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

    இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஒருவர் கூறும்போது, "விமான நிலையத்தில் அது விற்பனை செய்யப்படுவதால் அதன் விலை அதிகரித்துள்ளது. விமான நிலையக் கட்டணம், பராமரிப்பு கட்டணம், செயல்பாட்டு கட்டணம், பயன்பாட்டுக் கட்டணம், ஊதியம் உள்ளிட்ட பல விவகாரங்கள் அதில் சேர்கின்றன. அதனால்தான் வெளியில் ரூ.33-க்கு கிடைக்கும் பானி பூரி இறுதியில் விமான நிலையத்தில் ரூ.333-க்குக் கிடைக்கிறது" என்றார். மற்றொரு பயணி ஒருவர் கூறும்போது, "இது நிச்சயம் பகல் கொள்ளை என்று தெரிவித்துள்ளார். பெரும்பாலான பயனர்கள் இதை பகல் கொள்ளை என்றே தெரிவித்துள்ளனர்.

    மற்றொரு பயணி கூறும்போது, "உணவகத்தை நடத்துபவர்களுக்கு நேரடியாக விமான நிலைய நிர்வாகத்தார் வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ இடங்களை கொடுப்பதில்லை. இதற்காக சில நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளன. அந்த நிறுவனங்கள் மூலமாக உணவகங்கள் விமான நிலையத்தில் வாடகைக்கு இடத்தைப் பிடிக்கின்றன. ஒருவேளை, உணவகங்களுக்கு விமான நிலைய நிர்வாகம் நேரடியாக இடத்தை வாடகைக்குக் கொடுத்தால் உணவுகளின் விலை குறைய வாய்ப்பு உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

    • வங்கிகள் மட்டுமின்றி யுபிஐ அப்ளிகேஷன்களில் அதிக பரிவர்த்தனை செய்த நபர்களின் விவரங்களும் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும்
    • வரம்பை தாண்டிய பிறகு ஜிஎஸ்டி பதிவு பெறாமல் சேவைகளை வழங்குவது குற்றம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் பேசுபொருளாகி உள்ளது.

    மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) துறை தமிழ்நாட்டை சேர்நத பானி பூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி பதிவுக்கான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த பானி பூரி விற்பனையாளர் 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் ஆன்லைன் மூலம் பானி பூரி விற்பனை செய்து ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார்.

    ஆன்லைன் பேமெண்ட் (RazorPay, PhonePe) மூலம் பானி பூரி விற்பனையாளரின் பரிவர்த்தனைகளைக் கணக்கில் கொண்டு ஜிஎஸ்டி  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    வங்கிகள் மட்டுமின்றி யுபிஐ அப்ளிகேஷன்களில் அதிக பரிவர்த்தனை செய்த நபர்களின் விவரங்களும் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும். அதன்படி இந்த பானி பூரி வியாபாரியை கண்டறிந்து அனுப்பட்டுள்ள நோட்டீஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த நோட்டீஸில், பிரிவு 70-இன் கீழ் பானி பூரி விற்பனையாளரை நேரில் வந்து ஆஜராகி, ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் வரம்பை தாண்டிய பிறகு ஜிஎஸ்டி பதிவு பெறாமல் சேவைகளை வழங்குவது குற்றம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×