என் மலர்
நீங்கள் தேடியது "தொழிலாளி தற்கொலை"
- அரச்சலூர் அருகே கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி வாழைப்பழத்தில் விஷமாத்திரை வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த கண்டிகாட்டுவலசு, புது வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (55). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி.
மணிக்கு கடந்த ஒரு வருடமாக கழுத்து வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் முதலில் நாட்டு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் கழுத்து வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது மணிக்கு திடீரென கழுத்து வலி அதிகமாக இருந்தது. இதனால் தற்கொலை செய்ய முடிவு எடுத்த மணி வீட்டில் இருந்த வாழைப்பழத்தில் சல்பாஸ் மாத்திரை வைத்து சாப்பிட்டார்.
இது குறித்து தகவல் தெரிந்ததும் அவரது மனைவி கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மணி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது பழக்கத்துக்கு அடிமையான பன்னாரிமுத்துவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
- சகோதரர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பன்னாரி முத்து பரிதாபமாக இறந்தார்.
கோவை:
கோவை புலியகுளம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் பன்னாரிமுத்து (வயது 42).
கூலித் தொழிலாளி. திருமணமாகவில்லை. மது பழக்கத்துக்கு அடிமையான பன்னாரிமுத்துவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். 1½ வருடம் சிறையில் தண்டனை பெற்ற அவர் வெளியே வந்தார். பின்னர் தாயுடன் நீலிகோணாம் பாளையத்தில் வசித்து வந்தார்.
இவர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் பன்னாரி முத்துவுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அதற்கும் பதில் அளிக்கவில்லை.
இதனையடுத்து போலீசார் அவரது தாயை தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர் வேலைக்கு சென்ற மகன் வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து பன்னாரி முத்துவை அவரது சகோதரர் பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது அவர் காந்திபுரம் ஜி.பி. சிக்னல் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த அவரது சகோதரர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பன்னாரி முத்து பரிதாபமாக இறந்தார்.இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாமல்லபுரம் அருகே அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 41). இவர் சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார்.
அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தனது சொத்துக்கள் முழுவதையும் இழந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- ராஜதானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு:
ராஜதானி அருகே உள்ள கே.காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 43).
இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தனது சொத்துக்கள் முழுவதையும் விற்று பொறுப்பில்லாமல் சுற்றி வந்தார்.
மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாத நிலையில் தனிமையில் வசித்து வந்த பாண்டி மனம் வெறுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கூரை விட்டத்தில் மணிகண்டன் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். .
- தற்கொலை குறித்து மணிகண்டனின் சகோதரி சௌந்தர்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து பல்லடம் போலீசார் விசாரணை
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பால்பாண்டி மகன் மணிகண்டன்(வயது 24). அதே பகுதியில் உள்ள சாய தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு அவர் வரவில்லை. உடன் பணிபுரிபவர் வேலைக்கு வராததை குறித்து கேட்பதற்காக சென்றுள்ளார். அப்போது மணிகண்டன் தங்கியிருந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது .கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்தபோது உள்ளே கூரை விட்டத்தில் மணிகண்டன் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த தற்கொலை குறித்து மணிகண்டனின் சகோதரி சௌந்தர்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம்:
ஈரோடு எஸ்.எஸ்.பி.நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவருக்கு மைதிலி என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் ஈரோட்டில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அங்கு சந்தியா என்பவர் வேலை பார்த்து வந்தார். சந்தியாவுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் மணிகண்டனுக்கும், சந்தியாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
சந்தியாவின் குழந்தையை அவரது தாயார் வீட்டில் விட்டு விட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பல்லடம் லட்சுமி மில் பகுதியில் மணிகண்டனுடன் சந்தியா தனியாக வாடகை வீடு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்தனர்.
இந்தநிலையில் தனது கணவர் மணிகண்டனை காணவில்லை என்று அவரது மனைவி மைதிலி ஈரோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர்.
சந்தியா தனது குழந்தையை பார்த்து விட்டு வருவதாக ஈரோடு சென்றார். அங்கு மனம் மாறி திரும்பி வராமல் இருந்தார். சந்தியாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு
மீண்டும் வருமாறு மணிகண்டன் அழைத்தார். ஆனால் அவர் வரமறுத்து விட்டார்.
இதனால் மனம் உடைந்த மணிகண்டன் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிகண்டன் மனைவி மைதிலி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தக்கலை:
தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு, அண்ணா நகர் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). கூலி தொழிலாளி.
செந்தில் குமாருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் குடும்பத்திலும் பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் செந்தில்குமார் மது பழக்கத்திற்கும் அடிமையானார். இதற்கு மனைவி லதா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையேயும் பிரச்சினை ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று செந்தில்குமார் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு இரவு தங்கினார். நள்ளிரவில் அவர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடப்பதை கண்ட உறவினர்கள் இது பற்றி செந்தில்குமாரின் மனைவியிடம் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து செந்தில் குமாரை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், செந்தில் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி செந்தில் குமாரின் மனைவி தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் செந்தில் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் அவர் மதுவில் விஷம் கலந்து கடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது45). இவர் கோவில் விழா நடைபெறும் இடங்களில் ராட்டினம் வைத்து பணம் சம்பாதிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மரியா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கத்தினால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாலிங்கத்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மகாலிங்கத்தை மதுகுடிக்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனாலும் மகாலிங்கம் தொடர்ந்து மது குடித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மகாலிங்கம் வழக்கம் போல் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மகாலிங்கத்தை அவரது மனைவி மரியா கண்டித்தார். இதனால் மனமுடைந்த மகாலிங்கம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் மாடிக்கு சென்ற அவர் அங்குள்ள கூரை கொட்டகையில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரத்துக்கு பிறகு மகாலிங்கத்தின் மாமனார் மாடிக்கு சென்ற போது அங்கு மருமகன் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து மகாலிங்கத்தை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மகாலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அன்னூர்:
கோவை அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையத்ததை சேர்ந்தவர் முத்துகுமார் ( வயது 48). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பச்சையம்மாள் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பச்சையம்மாள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதனால் முத்துக்குமார் மிகுந்த மனவேதனை அடைந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் முத்துக்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.